"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Saturday, December 30, 2006

ஆங்கிலப் புத்தாண்டு விருந்து!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாங்க நேரா விருந்து நிகழ்ச்சிக்குப் போவோம்.முதலில் எல்லோரும் இதைப் பார்ப்போம்.

பார்த்து விட்டு சீக்கிரமாக வாங்க ..விருந்து காத்திட்டிருக்கு.பார்த்தீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீங்களா !!!

:)

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.


விருந்தின் உங்களுக்குப் பிடித்தவற்றை கிளிக் செய்யவும்.

( ஒரு சமயத்தில் இரண்டைச் சாப்பிட விரும்புவர்கள் அந்த இரண்டு இணைப்பையும் தனித்தனியே க்ளிக்குங்கள் - வேற யாருக்கு உற்சாகப் பான பிரியர்களுக்குத் தான் இந்த செய்தி)


அப்புறம் சைவம் மட்டும் தான். அசைவம் சமைக்கலாம்னு யோசிச்சு வருச ஆரம்பம் விழா அதுவுமா! எதுக்கு உயிர்களைக் கொல்லனும்னு தான் விட்டுட்டோம்.


முதலில் கொஞ்சம் இனிப்பு சாப்பிடலாங்க!

கொஞ்சம் காரம் சாப்பிடுங்க! (சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்)

உற்சாகப் பான பிரியர்களுக்கானப் பிரிவு

உங்களுக்கு பச்சையாக அப்பிடியே சாப்பிடனும்னா இங்க வாங்க.

முழுச்சாப்பாடு சாப்பிடலாங்களா!

நல்லா சாப்பிடீங்களாண்ணா!

கொஞ்சம் ஐஸ்கிரீம் சாப்பிடறீங்களாண்ணா!

:)

நிறையப் பேர் புத்தாண்டு செய்தி சொல்லிவிட்டபடியால் , என் பங்குக்கு இந்த விருந்து.

:)

மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!

( புத்தாண்டு பிறக்க இன்னும் எவ்வளவு நேரமிருக்கு என்று தெரிந்து கொள்ள கிளிக்குங்கள் இங்கே!)

Wednesday, December 27, 2006

அவன்! அவள்! அவள் தோழி!1.

"குறும்பு பண்ணாம இருங்க!! சீ!! நீங்க ரொம்ப மோசம் !!"என்றபடி மடியில் கவிழ்ந்தாள் அவள்.


"சரிதான்! இப்ப என்ன செஞ்சிட்டேன்! கொஞ்சமாவது இடுப்பு இருக்கா இல்லையான்னு ஒரு சின்ன சந்தேகம் ! அதுக்குப் போய் இப்படியா!" என்றபடி அவளின் கூந்தலுக்குள் விரல் அளைந்தான் அவன்.


அது பின்பனிக்கால மாலைப்பொழுது.

பெரும்பாலும் சிறுவர்கள் மட்டுமே வரும் கடற்கரை ஓரம் அது.அன்று ஞாயிறு என்பதால், காலையிலிருந்து விளையாடிக் களைத்து போய், கடற்கரை சாலையின் ஓரமிருந்த ஐஸ்க்ரீம் கடைகளில் தஞ்சமடைந்திருந்தார்கள்.


விரல் விட்டு எண்ணினால் மொத்தம் ஒரு 5 ஜோடிகள் தேறும்.
அனைவரும் அவரவர் கடமையில் கருத்தாக இருந்தார்கள்.


"ஹேய் ! ஒரு கவிதை சொல்லட்டுமா! " என்றான் அவன்.

"அய்யா! கவிஞரே! முடியலை!!..ஆ!!... யப்பா! நீ கிள்ளுவதைக் கூடப் பொறுத்துக்கலாம்! ஆனால்..." என்று சத்தமாக சிரித்தாள் அவள்.


தூரத்தில் இருந்த ஜோடி ஒன்று இவர்களை சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டது.

"நிஜமாத்தான் சொல்றியா!?" என்றான் அவன் கண் கலங்க.

" டேய்! உடனே, சென்டிமெண்ட் ஆயிடுவயே! ஒகே! சொல்லுடா செல்லம்! " என்று கூறியவாறு, அவன் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்தவாறு சிரித்தாள் அவள்.


மெதுவாய் அவளின் கன்னத்தை வருடியவாறே! மெல்லிய குரலில்,

" ஊனமுற்றோர் சங்கத்தில் சேர்க்கமுடியுமா!
கேட்டுச் சொல்லுங்கள்! நான் என் இதயத்தை இழந்தவன்!!" என்ற படி அவள் முகம் பார்த்தான்.

ஒரு விநாடி கழித்து , " என்னப்பா! கவிதை சொல்றேனீங்க!? சொல்லவேயில்லை!" என்றாள் அவள்.


"உன்னை!?!" என்றபடி அடிக்க பக்கத்தில் கல்லைத் தேட, அவள் எழுந்து கடல் நோக்கி ஓடத் துவங்கினாள்.


தூரத்தில் ஒரு பெண் பூ விற்றுக் கொண்டிருந்தாள்.


2.
"சார்! சுண்டல் சாப்பிடுங்க சார்!? "

"வேண்டாம்பா!" என்றான் அவன்.

"சார்! காலையிலிருந்து இங்க தான் உட்காந்திருக்கீங்க! எனக்கும் போணியாகுல! இன்னிக்கு சாயங்காலம் வரை ஒரு பொட்டலம் கூட விக்காது" என்றபடி சுண்டல் டப்பாவை அவன் காலடியில் வைத்தான் அந்தப் பையன்.


மனசு வேகமாய் பேப்பர் உருவி, புதிதாய் டைப் அடிக்கத் துவங்கியது.
" என் இனிய ரோஜாவே! அன்று அனைத்து ஊர்வலங்களிலும் நீ!
இன்று தனியாய் குப்பைத்தொட்டியில்!" சிரித்து கொண்டான் அவன்.


" தம்பி நான் சுண்டல் சாப்பிடற மூடில் இல்லை!" " நீ வேணும்னா ஒண்ணு பண்ணு! இந்தா! 50 ரூபாய்! போய் ஒரு வில்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா! அப்புறம் உங்கிட்ட சுண்டல் வாங்கிறேன்" என்றான் அவன்.


சிறுவன் தயங்கியபடி " ஓகே! சார்.! டூ மினிட்ல வந்தறேன்!" என்றபடி சுண்டல் டின்னை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு சாலை பார்த்து "டுர்.. டுர்.." என்றபடி இல்லாத பைக்கை உதைத்துக் கிளம்பினான்.

அவன் சிறிது தூரம் சென்ற பிறகு, மெதுவாய் எதிர்திசை நோக்கி நடந்தான் அவன்.3.


" இப்ப போனை வைக்கப் போறீங்களா! இலலாட்டி நான் கட் பண்ணவா!" என்றாள் அவள்.


" ஏய்! ப்ளீஸ்மா! கொஞ்சம் கேளேன் நான் சொல்றத!" கெஞ்சினான் அவன்.

" போதுங்க ! எவ்வளவு தரம் நான் சொல்றது! எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு! அதனால் அவர் கூட பழகிறேன்." அவரைத் தான் கல்யாணாமும் செஞ்சுக்குவேன்!" என்றாள் அவள்.


"என்கிட்டயும் இதைத் தான் போன மாசம் வரைச் சொல்லிட்டிருந்தே!" என்றான் அவன்.
"சோ! வாட்! அதுக்காக உன்னைவிட பெட்டரா ஒரு வாய்ப்பு கிடைச்சா விட்ற முடியுமா?? ... இங்க பாரு கண்ணா! அவருக்கு எல்லாம் தெரியும் ! நான் சொல்லிட்டேன்! இன்னைக்கு கூட அவரை பார்க்கிறதுக்கு பீச் போகனும்! அனாவசியமா ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க! " என்றபடி போனைக் கட் பண்ணியபடி சிரித்தாள் அவள்.
" ஏண்டி இவளே! அவர் பாவம்டீ! இப்படியா! ஏமாத்தறது!" என்றாள் அவள் தோழி.
"போடி! அந்த குண்டன் புலம்பறதைப் பார்க்கணுமே ! சும்மா கலாய்க்கத்தானே" என்றாள் அவள்.
"என்னவோ! போ! எனக்கு நீ பண்றது சுத்தமா... பிடிக்கலை!?" என்றாள் அவள் தோழி.
"சரிடீ! இன்னிக்கு மேட்டரை உடைச்சுடுவோம்! ஆனாலும் குண்டனுக்கு என்மேல் ஒரேடியா லவ் தெரியுமா! இப்பக்கூட என்னைத் திட்டலே! ஐயோ! பாவம்! "என்றாள் அவள்.
" ஹேய் ஒரு ஐடியா! இங்க பார்! இன்னைக்கு பார்த்து நான் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வந்திருக்கேன். நான் ஒரு தொப்பி வாங்கிட்டு முடியை மறைச்சுக்கிட்டு ஆம்பிளாய் மாறிடறேன். என்ன கலக்கிடலாமா உன் ஆளை! " என்றாள் அவள் தோழி.
" சூப்பர் டீ! கலக்கிடலாம் விடு!" என்ற படி உற்சாகமாய் கிளம்பினார்கள் அவர்கள்.4.ஒரு வாரத் தாடியைத் தடவியபடி அவன் அந்த படகின் அருகில் கீழ் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தான்.

மனசு வழக்கம் போல் கவிதையை டைப் செய்து கொண்டிருந்தது.

"கண்ணே! உன் மனமென்ன மகரந்தமா!
மயங்கும் வண்டுக்கெலாம் வகுத்தளிக்கிறாய்!!"

தூரத்தில் அவள் வருவது போன்று தெரிந்தது.
"அவளேதான்! என்ன தைரியம் இருந்தால், என் கூட உட்கார்ந்த அதே படகு மறைப்புக்குக் கூட்டிட்டு வருவாள்!" கையை இறுக்கிக்கொண்டான் அவன்.

"யேய்! வேண்டாண்டீ பயமாயிருக்கு "என்றாள் அவளின் தோழி.

"சும்மாயிருடீ! அந்த படகு மறைவில் வெளிச்சம் சுத்தமா இல்லை! யார் இருக்காங்கன்னு தெரியவே தெரியாது. இன்னிக்கு குண்டணுக்கு ஒரு சூடாய் முத்தம் தந்து சமாதானப்படுத்தணும்." என்றாள் அவள்.

"என்னவோ போடி!" என்றாள் அவளின் தோழி.

மெதுவாய் சூரியன் கடல்வீடு புகத்துவங்கினான்.

அவன் மெதுவாய் நேற்று பஜாரில் வாங்கிய அந்த அடர்கந்தகஅமிலப் பாட்டிலை எடுத்துக் கொண்டு படகை நோக்கி நடக்கத் துவங்கினான்.

அங்கே, அவள் தோழியிடம் சொன்னாள் ." குறும்பு பண்ணாம இருங்க!! சீ!! நீங்க ரொம்ப மோசம் !!".


Wednesday, December 20, 2006

ஏதாவது செய்யனும் சார்....!


இப்பதிவின் நோக்கம் சென்ற ஞாயிறு அன்று நடந்த பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு அலசல் மட்டுமல்ல. அன்று நான் சொன்ன,சொல்ல விழைந்த கருத்துகளைப் பற்றியும் தான்.

முதலாவதாக, அன்று வந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்! இச்சிறியேன் பேசிய சிறு செய்திகளையும் செவிமெடுத்துக் கேட்டமைக்கு!!

இந்த சந்திப்பின் நோக்கம் திரு அவர்களின் வருகையும், அவர் பதிவர்களை சந்திக்க இருப்பதும் என அறிவித்தார் லக்கிலுக்.

என் ஆவல் மிகுதியானது.

தனி அலுவல்கள் பல இருந்தாலும் அத்தனையும் புறந்தள்ளி, மார்கழி மாதத்துவக்கம் தந்த மென் பனியில், மெத்தென்ற புல் படுக்கை தந்த சுகத்தில் மெதுவாய் வந்திருந்த அனைவரையும் உற்று நோக்கினேன். ஒரு 25 பேர் இருக்கலாம் என்று கணக்கு போட்டது. ஆனால், 25 போர் வாள்கள் என்று மனசு சொன்னது.

அருள்,ஜெய்சங்கர்,வீரமணி மற்றும் புகைப்படமிட்ட பதிவைக் கொண்ட சில பதிவர் தவிர அனைவரும் எனக்கு புது முகங்களே!

இதுக்கு தானே ஆசைப்பட்டாயடா! என்று மனசு குதியாட்டம் போட்டது.

வெவ்வேறு களங்கள், நாடுகள், ஊர்கள் என விரிந்த உலகினில் பதிவராய் வாழ்ந்ததால் தானே இன்று இங்கு அமர முடிந்தது என மகிழ்ந்தேன்.

நேரம் கடக்க மெதுவாய் பாலபாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்டு அனைவரையும் சுயஅறிமுகம் செய்யப் பணித்தார். அதுவும் லக்கிலுக் அனைவரையும் அழைத்ததால் அவர் துவங்கட்டும் என்றார். அதில் மற்றும் ஒரு விடயமும் இருந்தது. அதாவது அவரின் இடப்புறம் இருந்த 'ஆலமரம்'எழுதும் 'திரு' அவர்கள் இருந்தது தான். ஆகையால், 'திரு' அவர்கள் முடிவாய் சுய அறிமுகம் செய்து கொண்டு, சந்திப்பின் முதன்மை விடயம் பேசத் துவங்க ஏதுவாய் இருந்தது.

'நீயா அது! '..ஓ! ?' ' நீங்களா அது...!?' ' :) ' என்றெல்லாம் ஆங்காங்கே சிறு கூக்குரல்கள் எழும்ப, ஒவ்வொருவராய் அமர்ந்தபடியே அவர்தம் பற்றிச் சொன்னது நன்றாக இருந்தது.

'திரு' அவர்கள் பேசத் துவங்க, அனைவரும் அமைதியாய் அவர் முகம் நோக்கினார்கள். எளிய நம்மவர் போன்ற பேச்சு, மிகத்தூய்மையான தமிழ் வார்த்தைகள், முயற்சித்துப் பார்க்கச் சொன்ன தமிழ் நடை என அனைத்து அம்சங்களுடன் சொல்லத் துவங்கிய கையெழுத்து இயக்கமும் அதன் குறிக்கோளும் நெஞ்சைத் தைத்துவிட்டது.

பின்னர் தனித்து விடப்பட்ட சிறுசிறு குழுக்களாய்ப் போன பதிவர் கூட்டத்தில் சில நிமிடங்கள் 'திரு' வின் அருகில் இருக்க நேரிட்டது.

அப்போது 'திரு' அவர்களிடம் ''ஓகை' அவர்கள் "உங்கள் தொழில் என்ன?" என்று வினவினார்.

அமைப்புச்சாரா தொழிலாளார்களுக்கான ஒரு அமைப்பில் அங்கம் வகிப்பதாகச் 'திரு' பதில்சொன்னார்.
"அது பணியல்ல! சேவை!! " என்று ஓகை சொன்னார்.
அதனை அடக்கத்துடன் மறுத்தார் 'திரு'.

அருகிலிருந்த நான் வியந்து போனேன். இப்படியும் சிலர் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். இல்லையெனில் மனிதம் என்றோ மரித்துப் போயிருக்கும்.

ஈழம் பற்றிய மற்றும் ஒரு புதிய பார்வை ஒன்றும் அவர் கூறிவிடவில்லை. ஆனால், நாம் (அநேகமாக) எல்லோரும் வெறும் பேச்சுகளாய், கட்டுரைகளாய், கவிதைகளாய் மட்டுமே ஈழத்தமிழர் தம் அவலங்கள் பற்றிப் பேசிக் கொண்(டே)டிருக்கிறோம். ஆனால், 'திரு' அதற்கான ஒரு முயற்சியை மேற்க்கொண்டுள்ளார்.

கையெழுத்து இயக்கம் என்ன செய்துவிடபோகிறது என்ற வழக்கமான கேள்வி நண்பர்களால் கேட்கப்பட்டது. 'திரு' அவர்கள் பொறுமையாக விளக்கினார்.

எனது பங்களிப்பாக சொன்னவை நான் அறிந்த ஈழத்தமிழர்தம் இந்திய வாழ்வு. கதியற்றவர் அதாவது அகதி என்ற சொல்லடியிலேயே எனக்கு உடன்பாடு இல்லை.

சில தலைமுறைகளுக்கு முன் சென்ற அமர்த்தியா சென் இந்தியர்.
கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். தற்போதய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண்.

இப்படியெல்லாம் பெருமை பேசி களிக்கும் நாம், நம் முன்னோர்களின் வம்சாவளியினர் இன்று தந்தை நாடு நோக்கி வலியுடன் வரும் போது என்ன செய்கிறோம் ??

ஒரு கவிஞர் கவிதை பாடுகிறார் !

ஒரு படைப்பாளி கதையில் போர்வாள் தூக்குகிறார் !

சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பிரமாதமாய் ஒடுகிறது !

அவற்றில் அருமையாய் நடித்தவர்க்கு விருதுகள் வழங்கப்படுகிறது !

குறும்திரைபடம் எடுத்து மாணவர்கள் பட்டயம் பெறுகிறார்கள் !

இரங்கட்பா இசைக்கப்படுகிறது !

அரசியலைப் பற்றி சொல்லவே வேண்டாம் !

வழக்கம் போல் நம் பதிவர்கள் ( நானும் தான்) பதிவிட்டு பின்னூட்ட அஞ்சலி செய்கிறோம்.

இதுவா அவர்களுக்கு தேவை ?!?

முதலுதவி தான் இல்லை புரையோடிய புண்ணுக்கும் கூடவா நம்மால் மருந்திட முடியவில்லை.

"ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் புரிந்துகொள்ளாத நாம்தான் விருந்தோம்பல் நாகரிகத்தின் தலைவர்கள் என்று இலக்கியங்களில் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். " என்று நமது பதிவர் " மயிலாடுதுறை சிவா." என்பவர் அவர்கள் அவர்தம் பதிவில் கூறியுள்ளார்.

அது உண்மையா?! மாற்ற நாம் எங்கனம் விழைவது ??

இதெற்கென்ன ஆதாரம் ?? எங்கே செய்தி?? என்பவர்க்காக நான் சில செய்திகளைத் திரட்ட முயன்று வருகிறேன்.

சிலவற்றை இப்போது பதிகின்றேன்.

அவற்றில் முதலாவதாக கீற்று என்ற இணையத்தளத்தில் வந்த http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html பாருங்கள். நான் கூற வருவது உங்களுக்குப் புரியும்.

அன்றைய பதிவர் கூட்டத்தில் நான் வைத்த வேண்டுகோள் இது தான்.


உலகில் உள்ள தமிழர்கள் 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 74,000,000 பேர்கள்.

இந்தியாவில் மட்டும் : 63,000,000

இலங்கையில் : 3,600,000

மலேசியாவில் : 1,500,000

சிங்கப்பூரில் : 250,000

மற்றவர் உலகமெங்கும்..

தமிழ் தாய்நாடாம் தமிழகத்தை (நம்மை) நாடி வரும் தமிழர்களை, நாம் நடத்தும் பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் அனைவரும் விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல என்பதனை 'அரசும்' ஏற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் தம் வாழ்வாதாரம் பற்றி கவலை கொண்டு ஆவண செய்ய வைக்க வேண்டும். குறைந்த பட்சம் அகதிகள் முகாம் என்ற மோசமான சிறைச்சாலைகள் தரத்தையாவது முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு மீன் கூட வேண்டாம். மீன் பிடிக்க வலைகளையாவது தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


தீர்வுக்காக எனது யோசனைகள்:

1. ஓட்டு வங்கிக்காக போராடும் அரசியல்வாதிகள் நடுவே, சிலர் நம் தமிழர்கள் என்று போராட இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமே இதனை நினைவுபடுத்தலாம். அவர்களை பாராட்டிப் பதிவிடும் பதிவர்கள் இதனையும் சிரமேற்க்கொண்டு செய்தால் இன்னும் மகிழ்ச்சி.

2. யார் பூனைக்கு மணி கட்டுவது எனக் காத்திராமல், சட்டென்று உங்கள் யோசனையை பகிறுங்கள்.

3. கீற்று.காம் போன்ற இணையங்கள் செய்திகள் தான் வெளியிடமுடியும். பதிவர்கள் மற்றும் இதைப் படிப்பவர்களாகிய நாம் அதனை அனைவரிடமும் எடுத்துச் செல்ல (சொல்ல) முடியும்.

4. வெளிநாட்டில் வாழும் அன்பர்கள் இது போன்ற விடயங்களை சிரமேற்க் கொள்ளும் N.G.O. ஏதேனுமிருந்தால் தெரிவியுங்கள்.

5. பண உதவி, பொருள் உதவி எல்லாம் அரசாங்கம் செய்யலாம். மற்றபடி தேவைப்பட்டால் நம்மால் இயன்றவற்றைச் செய்வோம்.

6. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த வலைப்பதிவாளர்கள் இதனை அனைவருக்கும் சொல்லுங்களேன். நீங்கள் எறியும் சிறு கல், குளத்தில் வட்டமாக பரப்பும்.

7. கண்டனக்குரல் கேட்க வேண்டியவர் செவிக்கெட்டி விடும் என்றாலும் அதற்கான முனைப்பை விட்டிடாது வேண்டியவை நடக்கும் வரை தொடர வேண்டும்.

எனது வருத்தங்கள்:

1. குழுக்கள் அமைத்து உண்மை அறியலாம் என்றொரு யோசனை பகிறப்பட்டது. சான்றுகள் தான் தேவையா! இல்லையெனில் மருந்திட மாட்டீரா! இத்தனை பேர் கூறியும், உங்களுக்கு இன்னும் நம்பிக்கை
இல்லையா!! அது போன்ற குழுக்களின் தீர்வு வரும் முன், எத்தனையோ இதயங்கள் கருகிப் போகலாம். ஆயினும், அது போன்ற ஆய்வரிக்கை வந்து தான் உதவிகள் செய்வோம் என்ற முடிவெடுக்க நாம் என்ன உச்சநீதிமன்றமா !!!

2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பார்கள். நன்றாக கவனித்தால் நிரந்தரமாக இருந்துவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்! நிச்சயமாக மாட்டார்கள் ?! எந்த ஒரு மனிதனும் தன் கல்லறையை பிறந்த மண்ணில் தான் கட்ட விரும்புவான். அவர்கள் வாழ விரும்புவதும் அவர்கள் மண்ணில் தான். அப்படித்தான் இருந்து விட்டுப் போகட்டுமே உங்கள் ஓட்டெண்ணிக்கை அதிகமாகுமே.

தன் குடும்பம் , தன் வாழ்க்கை முக்கியம் தான்.

இது போன்ற மனிதாபிமான செயல்கள் உங்களைப் புடம் போடும் நண்பர்களே!

நீங்களே உங்களை நம்பாவிட்டால் பின் யார் நம்புவார்கள்??


ஆற்றாமையால் தான் சொல்கிறேன் ! பேசியது போதுமென நினைக்கிறேன்!?

ஏதாவது செய்யனும் சார்....!
தேவையில்லை என்று நினைத்தாலும் சொல்ல விரும்பிய பின்குறிப்பு:

கடைசியாக, இது போன்ற ஈழத்தமிழர் பற்றி பேசுவது, எழுதுவது, செயல்கள் எல்லாம் திராவிடம் சார்ந்தது என சில பதிவர்கள் அன்று வரமுயற்சிக்க வில்லை என்று கேள்விப்பட்டு வியந்தேன். வருந்தினேன்.
தமிழனை திராவிடன் என்று ஒதுக்குபவர்கள், அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து இனிமேல் வேறு மொழியில் எழுதிக்கொள்ளுங்கள்!? எங்கள் தமிழில் வேண்டாமே உங்கள் பதிவுகள் !

இதுதான் சாக்கு! என்று திராவிடம் இது எனக் கூறி, திராவிட-ஆரியச்சண்டைகளையும் இங்கு அரங்கேற்ற வேண்டாம் நண்பர்களே ??!!

ஆரியம், திராவிடம், விவிலியம்,இஸ்லாமியம்......இவை அனைத்தும் கடந்தது மனிதம்.

நல்லவை நடக்கவே விரும்புகிறோம். வீண் விவாதங்கள் வேண்டாமே!!


இப்பதிவிற்குத் தொடர்புடைய இடுகைகள்:

http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html

http://manikoondu.blogspot.com/2006/06/blog-post_14.html

பதிவர் வட்ட சந்திப்பு பற்றி தொடர்புள்ள இடுகைகள்:

1. பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை : தமிழ்நதி
2. சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு -சுடச்சுட : அன்புடன் ச.சங்கர்
3. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு -12-17-06 : சிவஞானம்ஜி
4. சென்னை சந்திப்பு-1 : பொன்ஸ்
5. சென்னை சந்திப்பு-3 : பொன்ஸ்

Monday, December 18, 2006

சிவப்பதிகாரம்


நேற்று சென்னை-வலைப்பதிவு கூட்டத்தில் பங்கேற்று சூடாய் பேசியும், கேட்டும், புது நண்பர்களிடம் கைகுழுக்கி... மொத்தத்தில் சந்தோசமாய் களைத்துப் போனேன்.

மனசு முழுவதும் பதிவர் கூட்டத்தின் உரையாடல்களே ஓட்டிக்கொண்டிருந்தது. தூங்கமுடியாது போலிருக்கிறதே! என்றெண்ணி ஒரு நண்பரும் நானும் திரைப்படம் செல்வதென்று முடிவு செய்து சிவப்பதிகாரம் சென்றோம்.

கவிதையாய் கிராமியப் பின்னணியில் துவங்கியது.

வரிசையாய் கிராமியப்பாடல்கள் காதில் வந்து விழ, வெறும் குத்துப் பாடல்களும் வடக்கித்திய பாடகர்/பாடகிகளின் மெல்லிய கஜல் பாடும் குரல்களின்றி கணீர் என்று கேட்டகுரல்கள் மிகவும் மகிழ வைத்த்தது.

'பருவாயில்லை' என்றெல்லாம் வரிகள் இல்லாமல் நல்ல தமிழில், உச்சமாய் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல்களை கேட்கும் போது, நிறைய இழந்துவிட்டோம்..இன்னும் இழக்க எத்தனையோ! என்று மனசு விம்மியது.

அதுவும் நாங்கள் வழக்கமாக பார்க்கும் அவ்வரங்கில் பாட்டுப் போட்டால் போதும், புகைப்பார்கள் கிளம்பி நடக்கத்தொடங்கிடுவார்கள்.
ஆனால், ஒருவர் கூட இப்பாடல் ஒளி/ஒலித்த போது நகராது கண்டு , ஒவ்வொருத்தன் உள்ளேயும் ஒரு கிராமத்தான் இருக்கத்தான் செய்கிறான் என்ற வாக்கியம் உண்மை என உணர்ந்தேன்.

பிறகு துவங்கிய இரண்டாம் பாதியில் தான் கதையே!

எல்லோரும் போல் ஒரு அறிவுரையோடு முடிக்காமல், படம் பார்ப்பவரைப் பார்த்து " ஏதாவது செய்யனும் சார்! " என்றபோது ஊனமுற்றவன் போல் உணர்ந்தேன்.

சமுதாயமும் குடும்ப வட்டம் என்ற கைச்சங்கிலியும் எத்தனை நாட்கள் தான் உணர்வுகளைக் கட்டிப் போடுமோ தெரியவில்லை.

வழக்கமான பேராசிரியர்கள் இல்லை.( வெ.ஆ.மூர்த்தி போன்றவர்கள்)

வழக்கமான மாணவர்கள் இல்லை.( சின்னி செயந்த், விவேக்)

காமெடியாக மாணவர்கள் காட்டப்படவில்லை.

"ட்டாய்ய்ய்ய்ய்ய்" என்றெல்லாம் வசனங்கள் இல்லை.

"இவன் பாக்கறதுக்கு தான் கருப்பு சூடானால் சிவப்பு" போன்ற பஞ்ச் டயலாக்குகள் இல்லை.

பழைய மியூசியத்தில் உள்ள அரதப்பழசான கதைகளை தூசு தட்டி ரீமிக்ஸ் பாடல்கள், வசனங்கள் இல்லை.

நமீதாக்களையும் குத்தாட்டங்களையும் இரட்டை மூவர்ண தமாசுகளை எதிர்பார்பவர்களுக்கு இப்படமில்லை.

இப்படி எத்தனையோ இல்லைகள்....

ரகுவரன் மிக அருமையாக நடித்திருக்கிறார். அவர் மாதிரி 'மாதிரிகள்' இல்லாதுதான் நம் குறையா?? என்று மனசு கேட்ட போது அப்துல்கலாம் முதல் எம்.எஸ். உதயமூர்த்தி வரை வந்து போனார்கள். பிறகென்ன செய்யவேண்டும் என்று மனசு பலவாறு சண்டையிடத் துவங்கியது.

படத்தில் வசனம் மிகக்குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

" Try to be Black or White Dont be in Gray"
" எத்தனை நாள் கெட்டதைப் பார்த்து பேசாமல் இருந்தீங்க! அது மாதிரி தான் நான் நல்லதை செய்ற இந்தக் கொலைகளைப் பத்தி பேசலை!"எப்போதாவது சில படங்கள் பார்த்தால் மனம் சில்லிட்டு பேச முடியாமல் போகும். அப்படி ஒன்று தான் சிவப்பதிகாரம்.


அமைதியான அறையில் தீடீரென மீட்டப் பட்ட வீணையின் தந்திகளை போல் நீண்ட நேரம் மனசில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் போன்ற ஒர் உண்ர்வு தோன்றியது மட்டும் உண்மை.கடைசி செய்தி:

நேற்று ஒரு பிரபலத்தொலைக்காட்சியில் இப்படத்தைப் பற்றி வந்த விமர்ச்சனம்: " ஒரு கல்லூரி மாணவர்கள் அரசியல்வாதிகளை தொந்தரவு செய்தால் என்ன பாடுபடுவார்கள் என்பதை சொன்ன ஒரு படம் என்றது."


இது எப்படி இருக்கு!!பதிவர் வட்ட சந்திப்பு பற்றி தொடர்புள்ள இடுகைகள்:
1. பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை : தமிழ்நதி
2. சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு -சுடச்சுட : அன்புடன் ச.சங்கர்
3. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு -12-17-06 : சிவஞானம்ஜி
4. சென்னை சந்திப்பு-1 : பொன்ஸ்

Wednesday, December 13, 2006

தடாலடியாக ஒரு வேண்டுகோள்!
தடாலடியாக ஒரு அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்.நான் வலைப்பூ உலகிற்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் நிறைய மாற்றங்கள் கண்டேன்.

1.அரசியல் /இன/மத கலப்பின்றி எழுதுவது முடியுமா?
2.இலக்கியம் என்று கூறி வெட்டி வாதங்கள் மட்டும் போதுமா?
3. கார்டூன் / ஜோக் என்று வெட்டி ஒட்டுவேதே சிறந்ததா?
4. சமுதாயச் சிந்தனை என்று உலகளவில் அறிவுரை வழங்குவதா?
5.பின்னூட்டப் போர் மட்டுமே போதும் என நேரம் கழிப்பதா?
6. இதெல்லாம் விட குழுமஉறுப்பினராகி சண்டைகளில் பங்கேற்பதா!

மேற்கூறியவை, இன்றைய வலைப்பூ வேதங்களாகி விட்ட நிலையில், கெளதம்ஜி போன்ற ஒரு சிலரின் வலைப்பூக்கள் என்னைக் கவர்ந்தது.

மேற்கூறிய வகைகளில் இவரும், ஏன் நானும் கூட எழுதியிருக்கலாம். ஆனால், யார் மனதையும் புண்படுத்தாத ஒரு சில பதிவாளர்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டேன்.

தேன்கூட்டில் அதிகம் பார்வையிடப்பட்டவை என்றொரு போட்டி. தமிழ்மணத்தில் அதிகம் பின்னூட்டம் பெற்றவை என்றொரு போட்டி.

தேன்கூட்டில் உள்ள குழப்பமான தேர்வுமுறையில் இன்னும் உள்ள மாதந்திரப்போட்டி. தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவு என்று அழைக்கப்பட்டு, இதுவரை அது எப்படி முறைப்படுத்தப்படுகிறது என்று புரிந்து கொள்ள இயலாத ஒரு முறை.

இப்படியெல்லாம் நான் பார்த்து குழம்பிய காலக்கட்டத்தில், தடாலடிப் போட்டி என்று பார்த்து, மிகவும் ஆவலுடன் கலந்து கொண்டேன்.


ஆனால், அந்தப் போட்டி இன்று நிறுத்தி வைக்கவும் நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.

ஆம் நண்பர்களே! கெளதமிற்கு தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தவன் நானே!

!?!!?!!!

ஆனால், அந்த வேண்டுகோள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது போல் தெரிகிறது. நான் விடுத்த வேண்டுகோள் இது தான்.

உண்மையான பெயரில் எழுதுவது என்பது பாலகுமாரன் காலத்திலேயே இல்லை. ஆனாலும், இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் வெறும் புகழுக்காக மட்டும் பதிவதில்லை. நம் எழுத்தையும் சிலர் படிக்கிறார்கள் என்ற ஒரு சிறு மகிழ்ச்சி மட்டுமே தவிர வேறில்லை.

இதில் தடாலடிப்போட்டியின் பங்கு சிறிதோ,பெரிதோ ஆனால், குறிப்பிடத்தக்கது.

எனவே சிலரின் படைப்புகளுக்கு மட்டுமே தொடர் பரிசு என்பது சில சந்தேகங்கள் வர இடமளிக்கிறது. அதை சில பதிவர்கள் நேரிடையாகவே என்னிடம் சொன்னபோது, நான் வருத்தமடைந்து உடனடியாக கெளதம்ஜியிடம் பகிர்ந்தேன்.
மற்றவர்க்கும் வாய்ப்பளியுங்களேன்!? என்ற போது, அவர் அவரின் நியாய வாதங்களையும், தேர்ந்தெடுக்கும் முறையையும் சொன்னார். (இதை அவர் பதிவிலும் சொல்லியுள்ளார்)

மேலும், ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதலாவதாக வரலாம் ! எப்படி 2,3, ஆறுதல் என வரச் சாத்தியம் என்றேன்.

ஆனால்,நல்ல விடைகளை ஒருவரே அனுப்பும் போது எப்படி நான் ஒதுக்குவது என்றும் சொன்னார்.

அதுவும் உண்மைதான்.

இருந்தாலும், புதியவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏதேனும் வாய்ப்பு பாருங்களேன் என்ற ஏக்கத்தை அவரிடம் பதிந்தேன்.
அவருக்குள்ள நிர்வாகச்சிக்கல்களைச் சொன்னார். இந்த போட்டி போன்று வேறு ஏதேனும் துவங்க அனுமதி வாங்குவது கடினம் என்றார்.

ஆகவே, கெளதம்ஜி தம் சேவை நிறுத்தப்பட வேண்டியது அல்ல.

பத்திரிக்கை, வானொலி,தொலைக்காட்சி என்ற ஒரு வட்டத்தை விட்டு, வலைப்பதிவு என்ற புதிய தமிழ் வளர்க்கும் ,ஒரு புதிய தலைமுறை வளர, தமிழ் அழியாதிருக்க பாடுபட்ட ஒரு குழுமப் பத்திரிக்கை கூட முன் வராவிட்டால் எப்படி?

வருமா? வரவேண்டுகிறோம் !

ஏனெனில், என்று பதிவுகள் கெளதம் சார்ந்த அந்த வெகுசனப் பத்திரிக்கையில் வெளிவரத்துவங்கியதோ, அப்போதே இப்பதிவுகளின் பார்வையாளர்கள் சில லட்சம் ஆனது உண்மை. அதுதானே எழுதுபவர்தம் விருப்பம்.

இதை நான் பின்னூட்டமாக ஏன் வெளியிடவில்லை என்ற போது, அது நம் வலைப்பூ பின்னூட்ட அரசியலின் அடுத்த அத்தியாயம் ஆகிவிடுமெனச் சொன்னேன்.


புகைப்படத்திற்கு கமெண்ட்டுகள் எனத்துவங்கி, இன்னும் மற்ற படைப்புகளையும் தர உதவ வேண்டுகிறோம்.
ஆகவே, கெளதம்ஜி வெளிவராது போய் விடும், சில நல்ல கருத்துகளும், சிந்தனைகளும் புதைந்து போகாது இருக்க உதவுங்கள்.
எங்களிடையே, விமர்ச்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையை வளருங்கள்.

ஒரு பத்திரிகையாளாரால் மட்டுமே விமர்ச்சனங்களை சரியாக உணரவைக்க முடியும்.

எனவே, என் போன்றோரின் எண்ணத்தில் குறையில்லை. வார்த்தைகளில் இருந்திருக்கலாம். நான் என் கருத்தை உங்களுக்குப் புரியவைப்பதில் இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலாம்.


என் சக வலைப்பதிவாளர்களே! ஒரு நல்ல துவக்கத்தினை வேரோடு அழிய விடாதிருக்க முயல்வோம்.

கடைசியாக, ரோஜாவுடன் முள் இருந்தாலும், முள்களோடு ரோஜா இருந்தாலும் ரோஜாச் செடி என்று தான் கூறுகிறோம். முள்செடி என்றல்ல.

பின்குறிப்பு: இதற்கு நேர்முனையான பின்னூட்டமிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன் அவருக்கு. ஏதேனும் விட்டுப்போய்ருந்தால் நினைவு படுத்துங்கள். நன்றி.
குறிப்பாக லக்கிலுக்காரின் மன வேதனையடைய, கெளதமின் அறிவிப்புக் காரணாமாயிருந்தது கண்டு வேதனையடைந்தேன். அவர்மீது எந்தக் காழ்ப்புணர்வும் எனக்கு இல்லை. அவர்தம் நல்படைப்புகள் தொடரவும் நல் நட்பு வளரவும் விரும்புகிறேன்.

Thursday, December 07, 2006

நல்முத்துப் பேரன்கள்!


கபடியில் தங்கம் வென்றது இந்தியா- இனிப்பு செய்தி.

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கபடி விளையாட்டில் கிடைத்துள்ளது.

அதுவும் பரம எதிரியான(!?) பாகிஸ்தானை வென்றது குறிப்பிடத்தக்கது.

காலைவாரிவிடுவதில் வல்லவர்கள் என உலகம் போற்றும் இந்தியாவில், காலைவாரிவிடுவதில் வெற்றிபெற்றதிற்கு வாழ்த்துவோம்.

இது உள்குத்து இல்லைங்க! உண்மையில் நமது சாதனை ஆசிய அளவில் என்ற்றும் இருக்கிறது. இது உலக அளவில் மாறவேண்டுமென்பது அனைவரின் விருப்பம் மற்றும் வேண்டுதலும் கூட.தங்கம் வென்ற சகோதர்களே! வாழ்த்துகள்!

கடைசி செய்தி:

ஆசியப் போட்டியில் 5வது முறையாக தொடர்ந்து இந்திய கபடி அணி தங்கக் கோப்பையை வென்றது.கடந்த 1990ம் ஆண்டு பீஜீங்கில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் முதன்முறையாக கபடி சேர்க்கப்பட்டது முதல் இந்தியா தொடர்ந்து தங்கப் பதக்கத்தை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

(நன்றி-புகைப்பட உதவி :தினமலர்)

கபடியைப் பற்றிய ஒரு சிறு நினைவுகூறல்:இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்).


இவ்வாட்டம் விளையாட மட்டையோ பந்தோ ஏதும் தேவை இல்லை. வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு" அல்லது மூச்சுவிடாமல் 'நாந்தான் உங்கப்பன்டா ...' என்றெல்லாம் பாடலாம்) என்று பாடிக்கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும் பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

ஆடுகளம்:

ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை தரை மண் அல்லது மரத்தூள், மணல் பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல.

ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும் (இன்னும் எழுத வேண்டியுள்ளது)

Wednesday, December 06, 2006

சிறு சேதி !
இன்றைய காலக்கட்டத்தில் நகைக்கக் கூட நேரமின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு நண்பர் குழுமம் அனுப்பி மகிழும் சிறு சேதிகள் (SMS) , படிக்கும் கணங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்றால் அது மிகையில்லை.


மேலும், நம்பிக்கை தரும் சிறு சேதிகளும் அவ்வாறே! ஒவ்வொரு சேதியை உருவாக்கவும் யாரோ ஒருவர் நேர விரயம் செய்கிறார் என்றாலும், அது சிலர் மனதை பூக்க செய்கிறது.
அது போல் நான் பெற்ற சேதிகளின் ஒரு சிறு 'தொகுப்பூ' உங்களுக்காக!


நல் கருத்துகள் :


1. நம்மை விரும்பியவர்களை ஏமாற்றாதே! ஏமாற்றியவர்களை விரும்பாதே!2. ஒரு நல்ல நண்பன் உன் முதல் கண்ணீர் துளியைப் பார்ப்பவன்! இரண்டாம் கண்ணீர்துளியை கையில் ஏந்தி, மூன்றாம் துளியை நிறுத்தி, நாலாம் துளியை சிரிப்புடன் வர வைப்பவன்.


3. நம் எல்லோருக்கும் சரிசமமான திறமைகள் இருப்பதில்லை. ஆனால், எல்லோருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள சரிசமமான வாய்ப்புகள் அளிக்கிப்படுகிறது.


4. முயற்சிகள் தோல்வியடையலாம். முயற்சி செய்ய தோற்று விடாதே!


5. மேடு பள்ளமில்லாத பாதைகள் நல்ல ஓட்டுநரை உருவாக்குவதில்லை! அலையில்லாத கடல் நல்ல மாலுமியை உருவாக்குவதில்லை! மேகங்கள் இல்லாத வானம் நல்ல வானூர்தி வல்லுநரை உருவாக்குவதில்லை! தோல்விகள் இல்லாத வாழ்க்கை நல்ல மனிதரை உருவாக்குவதில்லை!


6. வெற்றிக்கனவுகள் என்பது தூங்கும் போது வருவதில்லை. அவை நம்மை தூங்கவிடாது செய்வது.


7. ஆறு போகும் பாதையில் போக நீந்தாதிரு! நீ போகும் பாதைக்குச் செல்ல நீ நீந்தியாக வேண்டும் !


8. ஒரு பழத்தில் உள்ள விதைகளை நீ எண்ணிவிடலாம்! ஆனால், அவ்விதைகளில் எத்தனை விருட்சங்கள் உள்ளன என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். விதைகளை எண்ணுவதை விட்டுவிட்டு, விதைகளை விதைக்கப் பழகு!


9. நீ வெற்றி பெற்றால் யாரிடமும் விளக்கத் தேவையில்லை! ஆனால், தோல்வியுற்றால் யாரும் விளங்கக் காத்திருப்பதுமில்லை!


இளைஞர்களுக்கான(ஹி ஹி) தத்துவங்கள் :


1. பெண் தோழி என்பவள் பல்விளக்கும் பிரஷ் போன்றவள். பல்விளக்கும் பிரஷை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிகாதே! 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடு.2. எப்பொழுதும் நீ பேசாது, எந்தப் பெண்ணையும் நிறைய பேச அனுமதிக்காதே! பிற்காலத்தில் , நீ தன்னந்தனியே பேச நேரிடும்.


3. நர்ஸ் நம்ம கையப் புடிச்சா அது 'செக்கப்' , நாம நர்ஸ் கையைப் புடிச்சா அது 'பிக்கப்' !


4. திருவள்ளுவர் 1330 குரள் சொன்னாலும், அவர் 1 குரலில் தான் பேச முடியும்.


5. நீ சிக்கலில் மாட்டித் தவிக்கும் போது அறிவு சொல்றதைக் கேட்காதே! அது சரி இருந்தாதானே கேட்பாய்!?


6. " ஏம்பா! உனக்கு புலி நகம் வேணும்னா ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வா! ஏன்னா! அன்னைக்குத் தான் எப்பவும் நகம் வெட்டுவேன் !


7. நான் கடவுளிடம் கேட்டேன்! உங்கள் காதலுக்கும் எனது காதலுக்கும் வித்தியாசமென்னவென்று, அவர் சொன்னார் " எனது காதல் வானத்திலுள்ள பறவை போல, உனது தட்டிலுள்ள பறவை போன்றது! அவ்வளவே".


நகைச்சுவை:1. உலகின் மிக குறுகிய ராஜினாமாக் கடிதம்: " மதிப்புக்குரிய ஐயா! உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன்."

2. உனக்கு நினைவிருக்கிறதா! சின்ன வயதில்,ஒரு நாள் நாம் பொம்மைக் கடைக்குச் சென்றோம். நீ கடைக்காரரிடம், "அந்தக் குரங்கு பொம்மை வேண்டும் ? " என்றாய். அவர் சொன்னார் " அது கண்ணாடி என்று! "


3. உன்னை நினைத்தாலே எனக்கு தூக்கமே போய் விடுகிறது! சிறு வயது முதலே எனக்கு பேய்! பிசாசு! என்றால் ரொம்ப பயம் தெரியுமா ?!


4. " ஏய் ! உன்னோட ஒரு வாரம் வந்து தங்கட்டுமா? சொல்லுப்பா!" இப்படிக்கு 'மெட்ராஸ் ஐ."


5.
ஆசிரியர் : " நமது கண்ணபிரான் பிறக்காமிலிருக்க, கம்சன் என்ற அவரது மாமன் கண்ணபிரானின் தாய்,தந்தையரை சிறையில் அடைத்து, அவருக்கு முன் பிறந்த 7 குழந்தைகளையும் கொன்றான்"


மாணவன்1 : " ஏன் சார்?"


ஆசிரியர் : " அதாவது கம்சன் ஜாதகப்படி , 8 வது குழந்தை தான் கம்சனை கொல்லுமென்பது விதி! எனவேதான் அப்படி செய்தான்!"


மாணவன்2: " அது சரி சார்! அதுக்கு கண்ணன்பிரான் அப்பா! அம்மாவை ! ஒரே சிறையில் அடைக்காமிலிருந்தாலே போதுமே ?! "
சர்தார்ஜி ஜோக்குகள் :

1.

சர்தார்ஜி1 : " இந்த பீரில் நிறமில்லை! "


சர்தார்ஜி2 : " இந்த பீரில் திடமில்லை!"


சர்தார்ஜி3 : " இந்த பீரில் சுவையில்லை!"


பார் அட்டெண்டர்! : " அடப் பாவிகளா! அது சோடாடா !"


2.


டாக்டர் : " வயிறு சம்பந்தமான இந்த நோய் வராமிலிருக்க தினமும் இரண்டு சொம்பு தண்ணீர் குடிங்க!"


சர்தார்ஜி : " அய்யோ! டாக்டர்! எங்க வீட்டில் ஒரு சொம்பு தானே இருக்கு ! "


3.


குட்டி சர்தார்ஜி : " கடவுளே ! எப்படியாவது மும்பையை இந்தியாவின் தலைநகராமாக்கி விடு!"


கடவுள் தோன்றிக் கேட்டார். "ஏன்பா? "


குட்டி சர்தார்ஜி : " ஏன்னா! நேத்து பரீட்சையில் அப்படித்தான் எழுதினேன்!"


4. டாக்டர் : "கொசு கடிக்காமிலிருக்க இந்த மருந்தை தடவுங்க!"

சர்தார்ஜி : " அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சு தடவறது!?"

5.


கடைக்காரர் : " சார் ! இந்தக் கண்ணாடியில் என்ன விசேசம் என்றால், 10வது மாடியில் இருந்தும் கீழே போட்டுங்க! தரையிலிருந்து 1 அங்குலத்திற்கு மேல்வரை உடையாம இருக்கும்!"


சர்தார்ஜி : " எனக்கு 2 பார்சல்"


6.


குட்டி சர்தார்ஜி : " அப்பா! இன்னிக்கு ராத்திரியிலிருந்து நம்ம பணக்காரர் ஆயிடலாம்.

சர்தார்ஜி : " எப்படிடா!? "

குட்டி சர்தார்ஜி : " இன்னைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதென்று சொல்லித்தரப் போறாங்க!"


*********

Friday, December 01, 2006

8ஸ் !

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் இந்நாளில்...

கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டும் இனிவருவன...


Friday, November 24, 2006

கண்ணாமூச்சி ரே! ரே !?

ஒண்ணுமில்லைங்க. ஒரு சிறு விளையாட்டுப் போட்டிங்க!

உங்க மனசில் உங்களுக்குப் பிடிச்சவங்களை நினைச்சுக்கிட்டு '+' குறியீட்டை உற்றுப் பாருங்க!

அப்புறம், உங்களைச் சுற்றி என்ன நடக்கெதென்பதே தெரியாம போயிடும். .

ஹி..ஹி...சும்மா ஒரு தமாசுக்குத் தாங்க.
***

Thursday, November 23, 2006

விளம்பர இடைவேளை ?!
நமது வலைப்பதிவாளர் எல்லோரும் நிறைய "எப்படி" எழுதி களைச்சுப் போனதினால் இந்த சிறு விளம்பர இடைவேளை.Wednesday, November 22, 2006

ஆய்த எழுத்து ?


உருமாறுவது மனித உருவம் மட்டுமல்ல ! மொழிகளின் உருக்களும் தான் !!

காலப்போக்கில் இலக்கணம் மாறும் என்பதும் உண்மை.

நான் முயன்ற வரை இந்த யூனிக்கோடு முறையில் ஆய்த எழுத்தை எப்படி உருவாக்குவது எனத் தெரியவில்லை.

படங்களைப் பாருங்களேன். எவ்வாறெல்லாம் தமிழ் உருமாறியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.வலையுலக நண்பர்களே ! நாம் கொண்டாடும் மொழியே உருமாறக் கூடியது. 60 வயதிற்கு மேல் ஆனவர்களின் எழுதச் சொன்னால், அதில் ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு என்று நம்மில் பெரும்பாலோனவர்கள் 
மறந்து போனதைக் காணாலாம்.

ஆகவே, பெரும்பாலோனர் மறந்த ஆய்த எழுத்தை மட்டும் ஏன் வலைப்பதிவாளர்கள் எழுத்தில் பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

ஒரு நல்ல ஊடகத்தை, இந்த வியாபார காந்தங்கள் ஊடக வியாபரத்திற்கும், தனிக்குழும மேன்பாட்டிற்கும் பயன்படுத்துவதைப் பார்த்தால் மனசை நெருடுகிறது. பொன்னான நேரத்தை வீணடிக்கிறோமோ என சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.

நான் வலையில் பதியத் துவங்கி சில மாதங்களே ஆகிறது. இந்த சில வாரங்களாக ஒருவரையொருவர் காழ்ப்புணார்ச்சியுடன் அடித்துக்  கொண்டும் , கூட்டணியமைத்து பின்னூட்டப்போர் நிகழ்த்துவதைக் காணும் போது வேதனை தான் வருகிறது.

யாரையும் குறிப்பாய் கூற விரும்பவில்லை.
யாரோ ஒரு பதிவில் சொல்லியது போல், அப்படி நாம் எழுதித் தான் ஆக வேண்டுமா!? என்று கூட தோன்றுகிறது.விடைபெற்றுச் செல்லாமென்றால் வழியனுப்ப யாருமில்லை!!

சரி தான் . போதுமென்று நினைக்கிறேன். பின்பு என்னையும் அரசியலுக்கு இழுப்பார்கள்.

ஆகவே! புலவர்களுள் சர்ச்சை தேவைதான்! ஆனால், அது சண்டையாக மாறிவிடக் கூடாது. எனவே! சாந்தமாக உரையாடுங்கள். ( எழுத்தாடுங்கள் !? )

வாழ்க ! வளமுடன்!

Tuesday, November 21, 2006

இலவசம் -( தேன்கூடு போட்டிக்காக மீள்பதிவு)


கடந்த முறை தேன்கூட்டிலும்,தமிழ்மணத்திலும் வெளியிட முயன்று தொழில்நுட்ப பிரச்சினைகளால் முடியாது போனது. எனவே,மீள் பதிவாய் பதிகிறேன். தேன்கூட்டு போட்டிக்காக 13/11/06 அன்று எழுதப்பட்டு 37 வது எண்ணில் 'இலவசம்'  என்ற தலைப்பில் உள்ளது.

பின் குறிப்பு:
இது விளம்பரம் அல்ல. ஒரு மீள்பதிவு மட்டுமே. நன்றி.


இனி " இலவசம்"....


என்னப்பா! இன்னைக்கும்  ராப்பொழுது இப்படித்தானா? என்றான் காரி அருகில் இருந்தவனிடம்.அவனுக்கு ஒரு மூன்று நாட்களாவது தூங்க வேண்டும் போலிருந்தது.எப்படியும் இன்னமும் ஒரு இரண்டு நாளாவது ஊரே விழாக்கோலமாகத்தான் இருக்கும்.

திருமூல நாயனார் கூத்து நடந்து கொண்டிருந்தது.இடையே " சிறுச்சேரி சபையின் சார்பாக நாளை இரவு 'மயான நடனம்' என்ற கூத்து நடைபெறுமென ஒரு சிறு எக்காளமிட,ஒற்றைப்பறை அடித்து அறிவித்தார்கள். மெதுவாய் காரி எழுந்து கூட்டம் விலக்கி ஊருணி நோக்கி நடந்தான்.

தூரத்தில் சந்திரன் மெதுவாய் இறங்கிக்கொண்டிருந்தான்.இன்னும் ஒரு யாமத்தில் ஊர் மறுபடியும் சபைக்கூட்டி விருந்தளிக்க வேண்டும்.

அடுத்த நாள் வேளாளக்கூட்டத்தின்  விருந்து. நல்ல உணவு வகைகள் இருப்பதாக கூறப்பட்டது.மெதுவாய் குடும்புகளைத்தாண்டி ஊருணி அருகே உள்ள சிறு குளத்தருகே வயிறை சுலபமாக்கி விட்டு தூரத்தில் தெரிந்த மடுவை நோக்கி மெல்ல நடந்தான்.அங்கு தான் ஏழு நாட்களாக கள்பானை வைக்கப்பட்டு ,குடிக்கும் அனவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

பிரமாணக்குடும்பு அருகிலுள்ள  சபை என்பதால் பெரும்பாலோனோர் குடிக்காததைப்போல் நடித்து, மூன்றாம் யாமத்தில் தலையில் காய்ந்த பனை ஓலையிட்டு மறைத்து, போகும் போது கோவணத்துடன் சென்றனர். வழக்கம் போல் பிரமாணக்குடித் தலைக்கட்டைச் சார்ந்த இளைஞர் கூட்டம் கூட ஒன்று மெதுவாக வந்து சிரித்து விட்டு ஒரு கள் பானையைத் தனியாக வாங்கிச்சென்றது.

தூரத்தில் ஒரு எக்காளம் கேட்டது. ஒரு துணைத்தளபதி தன் படைகளுடன் சேரிக்குள் வந்தார். கூத்து அப்படியே நின்றது.அங்கிருந்தவர்களும், பெண் வீட்டாரும் வந்து வணங்கி நின்றனர். படை மெதுவாக சபைக்குப்பின்புறம் போய் நின்றது.

'' இங்கு யார் திருமண வீட்டார் " என்றான் துணைத்தளபதி .

மெலிந்த அந்தணர் ஒருவர்  முன்வந்து " சொல்லுங்கள்" என்றார் வெற்றிலை வாயில்.

அவரை உற்றுப் பார்த்தபடி " இன்னும் ஒரு நாளோடு  வைபங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்! திருமாங்கல்யம் ஆயிற்றல்லவா!" என்றார்.

கூட்டத்தில் சலசலப்பு. பெரும்பாலோனர்  முணுமுணுத்தனர்.
தொண்டையைக் கனைத்த துணைத்தளபதி " இது நமது மன்னரின் கட்டளை! " என்றவுடன் எல்லோரும் திகைத்து நின்றனர்.
"இங்கு யார் ஊர்த்தலைக்கட்டு "என்றார் துணைதளபதி.

முன்வந்து  வணங்கிய அந்த நடுத்தர வயது பிராமணரிடம் " உங்களிடம் நானூறு பேருக்கு தேவையான உணவு தயாரிக்கத்தேவையானை உள்ளனவா" என்றார்.
தலைவர் " உள்ளது ! ஆனால், எவ்விதமானது ! எதற்கு !? "என்றார்.
கூட்டம் அமைதியாயிருந்தது.

"நம் மதிப்புர்குரிய  ஸ்ரீ ஸ்ரீ இளவரசர் தன் பரிவாரங்களுடனும் உங்கள் சிறுவென்றூர் வர இருக்கிறார் ?!"

எல்லோரும்  திகைப்பால் சலசலக்கத் துவங்கினார்கள்.

"ஏதேனும் சிறப்பிருக்கிறதா! இந்த விஜயத்தில்? " எனக்கேட்டார் ஊர்த்தலைவர்.

" மன்னிக்கவும்! எனக்கிடப்பட்ட கட்டளையை உங்களிடம் சொல்லிவிட்டேன். இன்றிலிருந்து  மூன்றாவது நாள் முன்பகலில் அவர்கள் வரலாமென  செய்தி! " என்றபடி மடியிலிருந்த ஒரு சிறு மூட்டையைத் தலைவரிடம் கொடுத்தான்.

"இதில் ஐநூறு செப்புக்காசுகள் உள்ளன. ஊர்க்கருவூலத்தில் போதுமானவை இருக்குமென்று நினைக்கிறேன்! போதாது எனில் மீண்டும் தரப்படும். நல்ல உணவுகளை  தயார் செய்ய ஆயுத்தம் செய்யுங்கள்! மற்ற கட்டளைகளை விடியலில் வர இருக்கும் இளவரசரின் மெய்காவல் படை அறிவிக்கும்" என்றபடி கூட்டத்தைப் பார்த்து "எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள் இது ஒரு முக்கியமான அறிவிப்பு! உங்கள் வீட்டில் யாராவது அந்நிய விருந்தாளிகள் தங்கியிருந்தால் உடனடியாக நாளை காலைக்குள் வெளியேற்றுங்கள்!

நாளை முதல் இந்த சிறுவென்றூர் வட்டாரம்  ஸ்ரீ ஸ்ரீ இளவரசரின் மெய்க்காவல் படையின் கட்டுப்பாட்டிலிருக்கும்.இது இரண்டாம் நிலைத்துணைப்படை தளபதி செந்தழலின் உத்தரவு." என்றபடி குதிரையை மடுவின் அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டிபோட்டார்.

தூரத்திலிருந்த காரி பெருமூச்சுடன் " இனி வேறுவிதமானஆராவாரங்களா?" என்று  கையிலிருந்த கள் மொந்தையை ஒரே மூச்சில் குடித்துவிட்டு பாறையில் போட்டுடைத்தான். மீண்டும் சேரியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி மெதுவாக நடந்தான். விரல்களற்ற வலது கையைத் திருப்பிப் பார்த்தான். சில வருடங்களுக்கு முன்னர் வரை கைக்கோளப்படையின் முதல்நிலைத்துணைத்தளபதியாயிருந்து இன்று ஆட்டுக்கு செடி வெட்டிப்போடக்கூட யாரையாவது எதிர்பார்க்க வேண்டியுள்ளதினை நினைத்தால் சிரிப்பு தான் வந்தது. போரில்லையெனில் மறவனுக்கு மதிப்பேது. முன்னர் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் தண்டனை போல் ஒரு கை மணிக்கட்டு வரை தகடூரின் கள்வர்போரில் துண்டானது.

****
அது சற்று விடியல் நேரம்.தூரத்தில் பறவைகளின் மெல்லிய சடசடப்புக்கேட்டது.

"செஞ்சடை! செஞ்சடை!"

சோம்பல் முறித்து எழுந்தான் காரி. யாரோ அவன் பெயரிட்டு அழைப்பதுபோல் இருந்தது.

சட்டென்று துள்ளி அமர்ந்தான். இந்த பெயர் இங்கு யாருக்கும் தெரியாதே!

சற்றே நடுக்கமான குரலில் "யாரது !" என்றபடி வெளியே வந்தான்.

பத்து பதினைந்து பேராக இருந்ததில் நடுவாக இருந்து "நலமா! செஞ்சடை? " எனக்குரல் வந்தது.

சட்டென அடையாளம் தெரிந்தது.அது அருண்மொழி.சோழப்பேரரசின் வருங்காலத் தூண்களில் ஒருவர். பிரதான மந்திரி பிரம்மராயரின் குமாரர். இளவரசின் வலதுகரம்,


திடுக்கிட்டு எழுந்து வாசலிலேயே குனிந்து வணங்கினான்.சோழர் படையில் பதவிக்குத்தான் மரியாதை.

"வணங்குகிறேன்! செஞ்சடை! நீண்ட நாட்கள் ஆகிவிட்டதில்லையா ! சேரதேசத்தில் தானே கடைசியாகச் சந்தித்தோம்?"

" ஆம்! அருண்மொழியாரே! அந்தக் கடிகைப்போரில் நீங்கள் இல்லையெனில் அன்றே என் உயிரி போயிருக்கும். மன்னரும் அருமை இளவரசரும் நலம் தானே?"

"அனைவரும் சிவனின் அருளால் நலமே! ஏன் இப்படி வனவாசம் போல் தனிமை வாழ்க்கை!? இரண்டே மாதங்கள் மட்டும் தான் ஓய்வுப்பணமும் பெற வந்தீராமே! ஆய்வுக்கணக்கர் சொன்னார்.?"

அமைதியாய் தூரத்தை வெறித்தான் காரி என்ற செஞ்சடை.

"ஆமாம்! நான் இங்கு இருப்பது உங்களுக்கெப்படித் தெரியும்! இளவரசரின் வருகையறிந்ததும் நான் நேற்று முழுவதும் யார் கண்ணிலும் படாமல் இங்கு தானே இருந்தேன்!"

சத்தமாக சிரித்தான் அருண்மொழி.
"உன்னைப்பற்றிய சேதிகள் யாவும் பதினைந்து நாட்களுக்கும் முன்னரே நமது ஒற்றர் படை மூலம் வந்தாயிற்று! "
" என்ன! செஞ்சடை! மன்னரோ! இளவரசரோ! இல்லை முதன்மைப் பாதுகாப்பிலுள்ள யாரும் போகும் இடம் உடனடியாக அறிவிக்கப்படுவதில்லை என்பது நமது காவல் மரபுகளைச் சார்ந்தது என்பதை மறந்து விட்டாயா! "

" நான் என்னை மறக்க முயன்றுக்கொண்டிருக்கிறேன் அருண்மொழி!"

காரியின் கண்களை உற்றுப் பார்த்தான் அருண்மொழி.

மெதுவாக படைவீரர்களிடம் " நீங்கள் சாலையில் சென்று ஓய்வெடுங்கள்! அடுத்தமுறைக்கு பிரிக்கப்பட்ட வீரர்களை வடக்கே கவனமாயும் குறிப்பாக ஊருணியருகே உள்ள புதர்களில் எச்சரிக்கையுடன் காவலிருக்கச் சொல்லுங்கள் ! நான் சில நாழிகையில் வந்து சந்திக்கிறேனென்று பழுவேட்டையாரிடம் சேதி சொல்லுங்கள்" என்று மேலும் சில உத்தரவுகளைத்
தாழ்ந்த குரலில் அறிவித்துவிட்டுத் திரும்பினான் அருண்மொழி.

"என்ன! பழுவேட்டையாரா! அவர் வருமளவுக்கு என்ன? " என்றான் வியப்புடன் செஞ்சடை.

"வியப்பைக்கொஞ்சம் மீதம் வைத்துக்கொள்ளுங்கள் !" என்று கூறி தாழ்ந்தகுரலில் பேசத்துவங்கினான் அருண்மொழி.

******

மெதுவாக கதிரவன் சாயும் அந்த நேரத்தில் ஒற்றை எக்காளாத்துடன் இரு குதிரை வீரர்கள் ஊர் எல்லைக்குள் நுழைந்தனர்.

ஊர் சட்டென பரபரப்பானது.

"ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜ ராஜேந்திரசோழர் வருகிறார்! " என மூன்றாவதாய் வந்த ஒரு ஒற்றை வண்டி அறிவித்தபடி ஊருக்குள் நுழைந்தது.

அதைத்தொடர்ந்து ஒரு சிறு படையும் பின்னர் இளவரசரின் தனிக்காவல் படையும் வர, நடுவே கருமையான ஒரு பெரிய குதிரையில் மெய்க்காவல்படை சூழ கம்பீரமாக இராஜேந்திரர் வந்தார்.

ஊர் மொத்தமும் மெய்சிலிர்த்து "சோழ நாடு வாழ்க! சோழ மாமன்னர் வாழ்க! இளவரசர் வாழ்க! " என்றுக்கூக்குரலிட்டு வாழ்த்தியபடி நெடுஞ்சாலிட்டு வணங்கியது.

கைகளை உயர்த்தி அனைவரையும் வாழ்த்தியும், வணங்கியும் மெதுவாக அங்கு போடப்பட்டிருந்த ஒரு சிறு மேடையில் ஏறி இளவரசர் நின்றவுடன் மெய்க்காவல் படை பிரிந்து மேடையைச் சுற்றி நின்றுக்கொண்டது. அருகேயிருந்த பிரமாணக்குடித்தலைவர் வாழ்த்துப்பாடி இளவரசருக்கு மாலை அணிவித்தார்.

மெதுவாக ஒரு பெரியவர் மெல்லிய குரலில் மன்னரின் மெய்கீர்த்தியைப் பாடத்துவங்க முதலில் இராஜேந்திரரும் பின்னர் அனைவரும் உரத்த குரலில் பாடத்துவங்கினர். மெய்க்கீர்த்திப் பாடி முடிந்ததும் அனைவரும் " சோழ நாடு வாழ்க ! " என்று ஒரு குரலிட்டு கை உயர்த்தினார்கள். மெதுவாய் அரவம் அடங்கக் காத்திருந்து இளவசரர் பேசத்துவங்கினார்.

" மாமன்னர் வாழ்க! சோழநாடு வாழ்க! அன்பிற்குறிய சிறுவென்றூராரே! இந்த திடீர் விஜயம் உங்களுக்கு மிகவும் வியப்பைத் தரலாம்! உண்மையிலேயே நீங்கள் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றத்தான் நாங்கள் வந்துள்ளோம்"
எல்லோரும் புரியாமல் நின்றிருந்தனர்.

மெதுவாக திரும்பிப் பார்க்க இளவசரின் உதவியாளர் ஒரு சிறு மூட்டையையும் ஒரு ஓலையையும ஊர்த்தலைவரிடம் கொடுத்தான்.

" அந்த ஓலை மன்னர் இட்ட கட்டளை தாங்கியுள்ளது! அதில் உள்ளதை பிறகு உங்கள் தலைவர் படிப்பார்" என்றபடி அருண்மொழியை அருகே அழைத்தார்.

அருண்மொழி அருகே வந்து வணங்கினார்.

"அனைவரும் அறிவீர் என நினைக்கிறேன் ! நமது அருண் மொழியை ! இவரின் நேரிடைப்  பாதுக்காப்பில்தான் வரும் தேர்ந்தெடுத்தல் நடைபெறும்! அதாவது இந்த
நாளை முதல் இந்த சிறுவென்றூர்வட்டாரத்தை சோழ நாட்டு மாதிரி வட்டாரமாக மாற்றுகிறேன்.அதாவது குடவோலை என்ற முறை மாறி உங்கள் தலைமையை நீங்களே தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி இந்த முறை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த தலைமைத்தேர்ந்தெடுத்தல் அமையும். தலைவருக்கு கீழ் ஒவ்வொரு சேரியிலிருந்தும் ஒரு உபதலைவரும் ஒரு உறுப்பினருமாக இந்தப் புதிய சபை அமைக்கப்படும். தலைவர் என்பவர் நேரிடையாக மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் மக்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த உறுப்பினரையும் ,ஏன் தலைவரையும் கூட நீக்க வகை செய்யப்பட்டுள்ளது.அதாவது நமது அருமைப்பெரியவர் முக்காலமறிந்த கருவூர்த்தேவரின் வழிகாட்டுதலின் பேரில் நமது மாமன்னரின் தலைமையில் அனைத்து சான்றோர்களையும் உறுப்பினராய்க்கொண்ட ஒரு வழி நடத்தும் குழு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும். இந்தக்குழுவிற்கு வரும் புகார்கள் மிக ரகசியமாய் ஒற்றைப்படைகொண்டு தீர்மானித்து தண்டனையோ! பதவி நீக்கமோ! தரும்."
என்று கூறி கூட்டத்தைப் பார்த்தார்.

அந்தணர்க் கூட்டத்தின் தலைவர் "இதில் பழைய குடவோலை வழிமுறைகள் உள்ளனவா ?  இதில் போட்டியிடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் ? " என்றார்.

இராஜேந்திரர் சிரிப்புடன் "சொல்லுங்களேன் அவற்றை "என்றார்.


அவர் தொண்டையைக்கனைத்துக்கொண்டு,அதாவது வட்டாரங்களுக்கானதலைவர் எனில் அந்த நபர்,

1. குறிப்பிட்ட அளவு அதாவது ஒரு காணிநிலமாவது வைத்திரு வேண்டும்.

2. சொந்த வீட்டில் குடியிருப்பவராகயிருக்க வேண்டும்.

3. முப்பதிலிருந்து அறுபது வயதுக்குட்பட்டவர்கள்.

4. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று நிபுணத்துவம் மிக்கவாராயிருக்கவேண்டுமென்பது முக்கியம்.

5. உடல்வலிமையும் உள்ளவலிமையும் உள்ளவர்கள்

6. இதுவரை வாரியத்தலைவராக இருந்திராதவர்

7. அவ்வாறு வாரியம் செய்தவர்களுக்கு உறவினராக அல்லாதவர்

இவ்வளவே !! என்றார் அந்தணர்குலத் தலைவர்.

"இதில் ஒரு சில மாற்றங்கள் தான் வரப்போகிறது இந்தப் புதிய முறையில், அதாவது நான் முதலில் சொன்னது போல், ஒரு சிறப்பு கண்காணிப்புக்குழு தலைமைகளை வழி நடத்தும்.மேலும் வேத நிபுணத்துவம் தேவையில்லை என்றும் நல்ல பண்பாளாராய் இருந்தால் நலம் என்றும் மாற்றியமைக்கப் படுகிறது! "

ஒரு அந்தண இளைஞன் "இது அந்தணருக்கு எதிரான சதி?" என்றான்.

"கைது செய்யுங்கள் அவனை!? " அருண்மொழி கத்தினான்.

"இல்லை! அருண்மொழி ! காலம் காலமாக அனுபவித்து வந்ததல்லவா!
ஆகவே தான் இந்தக்கூச்சல் !! விட்டு விடுங்கள்! ஆனால், மறுபடியும் யாரேனும் தேவையில்லாதவை செய்தாலோ? பேசினாலோ! உடனே 40 கசையடிகளுடன் கைது செய்யுங்கள்"

" வரும் முழுநிலவு நாளன்று இந்த தேர்தெடுப்பு நடக்கும்!அதற்கான முழுச்செலவையும் அரசு ஏற்கிறது !அதற்கு தான் அந்த சிறு மூட்டையில்பொற்காசுகள் தரப்பட்டது. உங்களுக்கான மாற்றமிது ! உங்களிடமிருந்து ஒத்துழைப்பை மாமன்னரும், நானும் எதிர்பார்க்கிறோம். அது வரை இப்போதுள்ள தலைவரே பொறுப்பிலிருப்பார். ஆனால்,அருண்மொழியின் அனுமதியின்றி அவர் இடும் உத்திரவுகள் செல்லாது ! போதும்! சபை கலையலாம்! வாழ்க ! சோழ நாடு!" எனக்கூறி தன் முத்திரை இலச்சினையை அருண்மொழி கையில் அணிவித்தபடி குதிரையேறி விடைபெற்றார் இராஜேந்திரர்.

கூட்டம் பெரும் கூக்குரலில் இளவரசரை வாழ்த்தி வழியனுப்பியது.


*********

முழு நிலவிற்க்கு முந்தைய நாளிரவு. அனைவரும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தனர்.

அந்தணக்குடியில் மட்டும் ஒரு சிலர் தவிர அனைவரும் தெற்கு அக்கிரகாரத்தில் தலைவர் வீட்டு அருகேயிருந்த சிறு மடத்தில் குழுமியிருந்தனர்.

"சொல்லுவோய் என்ன உத்தேசம்! மொத்தமாக கிளம்பி மறுபடியும் சேர நாட்டுக்கே போயிடலாமா!" என்றார் தலைவர்.

"அது சரி ஒரு தலைமுறையாச்சு! இப்பெல்லாம் முன்குடும்பி அந்தணர்களுக்குத்தான் அங்கு மதிப்பு. அதுவில்லாமல் சக்தி உபவாசகர்கள் என்று புதுசா ஒரு கும்பல் வேறு கிளம்பிருக்காம்" என்றார் அந்த நடுத்தர வயது அந்தணர். அவருக்கு அடுத்த தலைமை தருவதாய் முடிவாகி ஏற்கனவே நிறைய செலவு செய்திருந்தார்.

"அதீல்லீங்காணும் ! பிரச்சனை என்னன்னா! நம்ம இளவரசர் அவர் சார்பா நிறுத்தியிருக்கிற அந்த காரி தான். அவன் என்னமோ இளவரசர் படைத்தளபதியாய் இருந்தவனாமே"

"தளபதி இல்லைங்காணும் துணைத்தளபதிதான்"

"ஏதோ ஒரு இழவு ! ஒரு வேளாளானயிருந்தாலும் பரவாயில்லை ! நம்மள துச்சமாக மதிக்கிற ஓரு மாமிசப் பட்சிணி எப்படி நம்ம தலைவரா ஏத்துகிறது.
யார் இளவரசருக்கெதிராக ஆளை நிறுத்துவது ? அப்படியே நின்னால் வெற்றிப்பெற்றால் சரி ! தோத்துட்டால் அம்புட்டுத்தான்! அதோடு ஆட்டம் சரி!"

"எங்கிட்ட ஒரு திட்டம் இருக்கிறது" என்றார் புதுத்தலைமைக்கு ஆசைப்படும் அந்தணர்.

சற்று தூரத்தில் அந்த மடத்தின் பின்புறம் ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான்.

****

பெரும்பாலும் யாருமே தூங்காது விடியத் துவங்கிய சமயம். நடக்கின்ற விஷயம் கேள்விப்பட்டு அருகிலிருந்த ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள். ஆனால், ஒரு சிறப்புப் படை ஊர் எல்லையிலேயே அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தது.

கருவூரார் தலைமையில் நடந்த ஒரு சிறு யாகம் முடிந்து அனைவருக்கும் பூசைப்பிரசாதம் வழங்கப்பட்டது.மெதுவாக ஊர்மக்கள் ஊர் நடுவேயமைக்கப்பட்டிருந்த அந்தப் புதிய சாவடிகளை நோக்கி நகர்ந்தனர்.
வழியெங்கும் விழாக்கோலம் போல் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு சேரிக்கும் தனித்தனியே குடிசை அமைக்கப்பட்டு அங்கு அமர்ந்திருந்த தலையாரியிடம் அனுப்பப்பட்டு அவர்கள் பற்றி விசாரிக்கப்பட்டது. பின்னர் நடுவே பொதுவாய் அமர்ந்திருந்த தடுப்புகள் அமைக்கப்பட்ட சாலையினுள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கையில் ஒரு ஓலையும் தரப்பட்டது. எல்லா ஓலைகளும் ஒரு பொதுவான நிறத்திலிருந்தது. சற்றே நடுவில் இருந்த சிறு மறைப்பின் பின்னர் இரு பெரிய பானைகள் வைக்கப்பட்டு அதில் காரியின் பெயரும் அந்தணர் பெயரும் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஒரு பானை சிவப்பு மண்ணிலும் , மற்றொன்று கறுப்பு நிறத்திலிமிருந்தது.

ஏற்கனவே! காரிக்கு கருப்பும், அந்தணருக்கு சிவப்புமெனெ ஊர் கூடி முடிவெடுத்திருந்தது. ஓலையை குடத்திலிட்டவர்கள் பின் புறமிருந்த வாசல் வழியாக அனுப்பப்பட்டு அங்கிருந்த மைதானம் போன்ற இடத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு இனிப்பு பானமும் கைநிறைய பயறுவகைகளும் வழங்கப்பட்டது. மெதுவாக வெளியேற முயன்ற சிலரின் தலையைத் தட்டி தனியாக அமரவைக்கப்பட்டனர்.

உச்சிவரும் வேளை,கருவூரார் சபையைக்கூட்டினார். அருண்மொழி மெதுவாகத் துணைத்தளபதியிடம் கண்ணைக்காட்டினான். ஒரு சிறு படை பிரிந்து சபையைச்சுற்றி நின்றுகொண்டது .  மற்றும் ஒருசிறுபடை இரு பானைகள் தூக்கிவந்த வண்டிக்கு காவலாக வந்து சபை நடுவேயிருந்த மேடையில் வைத்தது.

காரியும் ,அந்தணரும் அழைக்கப்பபட்டு மாலை மரியாதை செய்யப்பட்டார்ககள் .
காரி கண்கள் குளமாக அருண்மொழியைப்பார்த்தான். பழுவேட்டாரை பார்த்து கலங்கிப்பின்னர் கருவூராரைப்பார்த்து வணங்கினான். சபை ஒரு உற்சாகத்துடனும் கூச்சலுடனும் அமர்ந்திருந்தது.

கருவூரார் கையிலிருந்த அந்த மூடப்பட்ட உருளையைப்பிரித்தார்.
அதில் இருந்த ஓலையைப்பிரித்து கிழக்குப்பார்த்து வணங்கி படித்தார்.

"சிறுவென்றூரைச் சார்ந்த ஐந்து சேரிகளும், இரு பிரமாணகுடும்பைச் சார்ந்த வேளாளக் கூட்டமும் பிரமாண அக்கிரகாரமும் சேர்ந்து தலைமைப் பொறுப்பேற்கும் பதவிகாக வந்த ஓலைகளின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து நானுற்று இருபத்தி ஆறு. அதில் சில ஓலைகள் பானையில் சேர்க்காமல் தரையில் போடப்பட்டிருந்தன. அவை மொத்தம் நூற்றெழுவெதெட்டு. காரி என்றசெஞ்சடை பெற்றவை இரண்டாயிரத்தென்பத்தொன்பது மீதம் சிவாச்சார்யாரான வேதநாயகத்திற்கு மீதமிருக்கும் ஆயிரத்து நூற்றுச் சொச்சமும்
செல்கிறது.

ஆகவே! புதிய தேர்ந்தெடுப்பு வட்டாரக்கொள்கைப்படி 
நம் காரி என்ற செஞ்சடை தலைமைப்பொறுப்பை ஏற்கிறார்.
ஆனால், நேற்று நமது மன்னர் அனுப்பிய வழிகாட்டுதல் குழுவின்
மாற்றக்குறிப்பின்படி இரண்டாமிடத்திற்க்கு வருபவர்கள் துணைத் தலைமையாகவும்  அறிவிக்கிறோம்.  அதன் படி நமது வேதநாயகம் துணைத்தலைமை ஏற்கவும்  எல்லாம் வல்ல அந்த சிவன் சித்ததில் முடிவாகிறது! " என்று அறிவித்து வானைப்பார்த்து வணங்கினார்.

பெரும்பாலான இளைஞர்கள் கூச்சலுடன் எழுந்து ஆடினர்.
வயதானவர்கள் தோள் துண்டைதூக்கிப்போட்டனர். காரி  ஓடிப்போய் கரூவூரார் காலி விழுந்தது வணங்கி பின்னர் அருண்மொழியைக்கட்டிக்கொண்டு அழுதான்.

" எல்லாம் துறந்து எங்கோ கிடந்த எனக்கு எதுக்கு இது! "என்றான்.

"இது இறைவன் சித்தம் ! "என்றார் கருவூரார்.

வேதநாயகம் குழப்பத்துடன் மெதுவாக கூட்டம் பிளந்து வெளியேறினார். ஆனால்,அங்கேயிர்ந்த படைவீரர்கள் அவரை நிறுத்தி மீண்டும் சபை நடுவே நிறுத்தினர்.

எல்லா அந்தணர்களும் சபை நடுவே செல்ல முற்பட்டு அடக்கப்பட்டனர்.

"ஏன்! ஏன்! "என்று ஆங்காங்கே குரல் எழுந்தது.

அருண்மொழி அனைவரையும் கையமர்த்திவிட்டு பேசத்துவங்கினான்.

நமது ஒற்றர் படை தந்த செய்திப்படி இவ்வந்தணர் செய்த முறைகேட்டிற்க்காக மன்னரின் ஆணைப்படியும் வழிகாட்டுதல் குழுவின் துணைத்தலைவர் என்கிற முறையில் இவரை கைது செய்கிறேன். இவர் மீதுள்ளக் குற்றச்சாட்டு என்னவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ' என்று நிறுத்தினான் அருண்மொழி.

"சொல்! சொல்!" என்று கூட்டம் ஆர்பரித்து கத்தியது.

இப்போது சபைக்கு நடுவே ஒரு பெட்டி கொண்டு வரப்பட்டது. அதோடு சில இளைஞர்களும் கையில் கயிறு கட்டப்பட்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

"இவர் செய்தக் குற்றம் வழிகாட்டுதல் குழுவிற்கு ஒரு குழப்பத்தையே தந்துவிட்டன. அதாவது , நேற்று நள்ளிரவு ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒரு சிறு வாழைப்பழம் வைக்கப்பட்டு அதனருகே ஒரு ஓலையும் வைக்கப்பட்டது.
அந்த வாழைப்பழத்தில் மூன்று செப்பு காசுகள் இருந்ததன. மேலும், அந்த ஓலை இவருக்கு எங்கள் குழுவால் அளிக்கப்பட்டிருந்த ஓலையை ஒத்திருந்தது.
ஆனால், முன்னரே ஒற்றர் படை மூலம் செய்தி வந்ததால் ,
சில வீட்டிற்க்கு வைக்குமுன்னரே எங்கள் துணைப்படையால் 
மொத்தமாக கைது செய்யப்பட்டனர்! 

வரும் காலத்தில் இதனை கவனிக்க ஒரு தனி குழு அமைக்க, 
நான் வழிகாட்டுதல் குழுவிற்கு சிபாரிசு செய்வேன்!
இவர் குற்றவாளி என்றாகி விட்டதால் துணைத்தலைமையின்றி 
நமது காரி பொறுப்பேற்க்கும் வைபவம் மிக விமர்ச்சையாக நமது இளவரசர் தலைமையில் விரைவில் நடக்கும்! வாழ்க சோழ நாடு! வாழ்க மாமன்னர்!"  என்றமர்ந்தான் அருண்மொழி.

சில அந்தணர் தவிர பெரும்பான்மையானவர் வெளியறினர்.

கைது செய்யப்பட்ட வேதநாயகத்தின் கைகளை கட்டிய அருண்மொழி

கூட்டம் காரியைத் தலையில் வைத்துக்கொண்டாடியது.

முக்காலம அறிந்த கருவூரார் வேதனையுடன் அந்தணரைப்பார்த்து, 
"இது துவக்கம் தான் !?  இரண்டாயிரம் ஆண்டானாலும் இது தொடரும் ! ம்..ம்.ம்..ம்..ம் . இலவசம் "என்றார்.

அருகிலிருந்த பழுவேட்டையார் "என்ன அது ! இலவசம்! புதிய வார்த்தையாய் இருக்கிறதே!' என்றார் .

"இலவசம் ! ! இதை நான் இப்போது சொல்லியே ஆக வேண்டியக்கட்டாயத்திலிருக்கிறேன் " என்ற படி மெதுவாக வானம் பார்த்தார்.


*********முடிவ(வு)ற்றது*********

சுகமோ சுமைகள்?


இது தவறாயிருந்தாலும் வாழத் தானே வருத்திக்கொள்கிறார்கள்.


யார் மிகச் சிறப்பான சுமைதாங்கி ? சொல்லுங்களேன ??.

 

Friday, November 17, 2006

தேர்தலுக்கு தேர்தல் ?
அதிரடி அறிக்கைகள் மற்றும் பேச்சுகளுக்குப் பேர் போன 
பா.மா.க. ஒரு அருமையான விசயத்தைத் துவக்கி வைத்துள்ளது.

அது எம்.பி., எம்.எல்.ஏ, தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறை பாமகவில் அறிமுகம் என்பதே.

இந்தியாவில் முதன்முறையாக, பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் புதிய முறையை பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் மாநில பயிலரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

இங்கு இக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தொடர்பான பயிற்சிகள் சில ஆண்டுகளாக நடை பெறுகிறது. பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் நிர்வாகிகளின் தலைமைப் பண்பை அதிகரிக்கவும், அவர்களின் தனித்திறனை மேம்படுத்தவும் புதிய முறைகளை ராமதாஸ் புகுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் கூட்டமும், அரசியல் பயிற்சி வகுப்புகளும் தைலாபுரம் பயிலரங்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில்பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இது முடிந்ததும், இவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 30 நிமிடம் நடந்த இத்தேர்விற்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார். இக்கட்சியின் எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும், பேராசிரியர் சிலர் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் அளித்தனர். (தேர்வு முடிவுகள் தெரியவில்லை.)

இதுபோன்ற தேர்வு, அரசியல் பயிற்சி பெறுகின்ற பாமகவினர் ஒவ்வொருவருக்கும் நடத்தி மதிப்பெண் வழக்கப்படும் என்றும், இந்தியாவில் இதுவரை எந்தக் கட்சியும் தனது கட்சியினருக்கு இதுபோன்ற பயிற்சியும், தேர்வும் நடத்தியதில்லை என்றார் ராமதாஸ். பாமகவைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கும், 5 ஆயிரம் ஆண்களுக்கு கட்சி தொடர்பானபயிற்சிகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு கட்சிகளில் இவ்வளவு பேருக்கு பயிற்சிகள் இதுவரை அளிக்கப்பட்டதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
கண்ணாடி முன் நிற்கும் பயிற்சி: பாமகவினர் காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொள்ள வேண்டிய பயிற்சியைப் பற்றி ராமதாஸ் விரிவாக விளக்கினார். கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தவாறு, நான் தன்னம்பிக்கை மிக்கவன், சக்திமிக்கவன், நான் சாதனையாளன், என்னால் முடியும், வெற்றி நிச்சயம் என்று கையை உயர்த்தியபடி கூற வேண்டும். இப்படிச் செய்வதால், உற்சாகத்தோடு கட்சிப் பணியாற்ற முடியும் என்றார் ராமதாஸ்.


இது போன்ற பாசறைகள் ரத்ததின் ரத்ததங்களுக்கும் , உடன் பிறப்புகளுக்கும் பழகிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், முதன்முறையாக ஒரு மதிப்பூட்டு முறையை அறிமுகப்படுத்தி நல்ல துவக்கமாக மாற்றியிருக்கிறார் ராமதாஸ் என்றால் அது மிகையல்ல.

அதே சமயம் எவ்வளவோ நல்ல கெட்ட விவாதங்கள் சூடாய் இருக்கும் போதும் இது போன்றவற்றைச் செய்வது என்பது வாழ்த்துக்கு உரியது.

இனி ஒரு புரட்சி போல் ஏதேனும் நடக்கும் வரை ,

மக்களுக்கு இவர்கள்  அல்லது அவர்கள் என்றே choose the best இருக்கும் வரை,

நல்லவரா தெரியாது !ஆனால் ரொம்ப மோசமான ஆள் எல்லாம் கிடையாது!  என்ற ஆதங்கத்துடன் நாம் ஓட்டுகள் அளிக்கும் வரை,

என்ன நடந்தாலும் கவலையில்லை !? எனக்குத் தேவை 800 சதுர அடி, ஒரு சிறிய கார், என் குழந்தைக்கு கான்வென்ட் , ஐந்து இலக்கச்சம்பளம் என்ற ஒரே கொள்கையுடன் மட்டுமே வாழ்ந்து வரும் சமுதாயம் இருக்கும் வரை,

எப்படியாவது ஒரு புதுப்பதிவும் 10 பின்னூட்டமும் என்ற என்போன்ற வலைபதிவாளார்கள் இருக்கும் வரை.... :)

நடக்கட்டுமே இது போன்ற விசயங்கள் ?!

நம்புவோம் ! நல்லது நடக்குமென ?!


கொசுறு :
கீழ்க்கண்ட கார்டூனில் இருக்கின்ற மாதிரி அழ கத்துத் தரமாட்டார்கள் என நம்புவோம்.


Thursday, November 16, 2006

பணம் பத்தும் செய்யுமா?


சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் ரியல்-எஸ்டேட் எனப்படும் வர்த்தக விலையேற்றம் மற்றும் பிரச்சினைகளைப் பார்த்தேன்.அந்த வியாபரத்தின் மறுப்பக்கங்களை அப்பதிவு விரிவாக ஆராய்ந்திருந்தது.

திரிசங்கு சொர்க்கம் என்பார்கள். மேலேயும் போகமுடியாமல்,கீழேயும் போக முடியாமல் மாட்டிக்கொண்டுத்தவிக்கும் நிலை என்பதற்கு உதாரண
வார்த்தையாக திரிசங்கு சொர்க்கம் சொல்லப்படுகிறது. இது தான் இன்றைய கார்பரேட் உலகுப் பணியாளாரின் நிலைமை.

அரிஸ்டோகிராட் சொஸைடி என்ற ஒரு மேல்த்தட்டு வர்க்கம் எப்பொழுதும்
அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு சிருங்காரவாழ்க்கை இன்று நடுத்தர வர்க்கத்தை எட்டியுள்ளது. நம் I.T. என்ற மென்/வன் பொருள் வர்த்தகம் மற்றும் outsourcing என்ற பிறநாட்டு வணிகங்களின் பின்னக அலுவலக வேலைகளின் அமைப்புகள் எனப் பணத்தை அள்ளி வீசும் ஒரு பொருளாதார சூழல் நிலவுகிறது.

இவர்களுக்கு இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் கவலையில்லை.

ஓட்டுப்போட்டால் தானே அந்தக்கவலை. ஆனால், இவர்களுக்கு வாக்காளர் அட்டை மிகத்தேவை,பின்னே அதுதானே கடன் வாங்கத்தேவைப்படுகிறது. சரி! இந்தச் சிருங்கார ஆட்டங்கள் எத்தனை நாளைக்கு ?? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. அனைவருக்குமே, 2000 ஆண்டு நடந்த ஆள்வெளிக்கொணர்வு நிகழ்வுகள் மறக்காமல் இல்லை.

ஆனால், இந்த அனைவருக்குமே என்பதில் 5வருடம் இந்தத்துறையில் குப்பைக்கொட்டியவருக்கே பொருந்தும். முன் சொன்ன இந்தச் சிருங்கார ஆட்டங்கள் பாதிக்காத, பெரும்பாலும் இந்த மத்திம வயது(30+) கனவான்கள், அவர்தம் தந்தை வாழ்நாளில் பார்க்காத சம்பளம் வாங்கியதே பெரும் சாதனை தான் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில்,சிலிக்கன் வேலி என்ற பள்ளத்தாக்கு தந்த அருமையான வாழ்க்கையை பெரும்பாலும் அழகாக ( இல்லையெனில் அப்படிநினைத்துக்கொண்டு) திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்தத் திட்டமிடல் பழகாத 5இலக்க மாதச்சம்பளங்கள் பெரும் இளம்வயதினரை(20+) நான் மிக வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

இவர்களது வாழ்க்கை திட்டமிடப்பட்டதா! இவர்களால் இந்த வீழ்ச்சிப்பார்க்காத வளர்ச்சி நமது பங்கு வர்த்தகம் போல் ஆபத்தானதா? என என்ணி குழம்பியிருக்கிறேன். தோல்விகள் காணாத வாழ்வு சரியா? என்ற ஒரு கேள்வி நெடுநாளாக என் மனதில் உண்டு. இவர்கள் ஒரு 5 மாதம் சம்பளம் இல்லை என்றால் சேமிப்பைக்கொண்டே வாழ்ந்துவிடுவார்களா!

இப்படி என்னை எண்ண வைத்தது நேற்று வந்த ஒரு மின்கடிதம் அதில்
ஆராயப்பட்ட ரியல் எஸ்டேட் வர்த்தகம் பற்றிய கருத்துகளில் எத்தனை சதவீதம் உண்மை என எண்ணால் கூற இயலவில்லை.ஆனால், ஒரு எச்சரிக்கை மணி மட்டும்மனதில் அடித்தது.

1.ஷேர் மார்க்கெட் எனும் பங்கு வர்த்தகம்

2.மியூச்சுவல் ப்ண்ட் (அனுமதிக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை என்ற வார்த்தை சரியாயிருக்குமா!)

3.இன்ஸுரண்ஸ் எனும் காப்பீடு சம்பந்தப்பட்ட முதலீடுகள்

4.பேங்க் டிபாஸிட்-தனிப்பட்ட வங்கி பணமுதலீடுகள்

5.ரியல் எஸ்டேட் - வீடு மற்றும் நிலங்கள் வாங்கும்-விற்கும் வர்த்தகம்.

மற்றும் டிஸ்கோத்தே முதல் ரிஸார்ட்ஸ் வரை பொழுதுபோக்கு அம்சங்கள்.

மேற்கூறியவையாவது வியாபரம் எனக்கூறி நேரிடையாக பணம் பறிக்கின்றன. ஆனால், மேற்ச்சொன்ன இந்த வகையானவர்களை நம்பி புதுசா ஒரு மருத்ததுறையே உருவாகியுள்ளது. அதற்குப் பெயர் stress management & Age managment. அதாவது மன அழுத்த மேலாண்மை மற்றும் வயதாவதினை மேலாட்சி செய்தல் (இது பொருத்தமாத்தான் இருக்கு).

இந்த மருத்துவ கும்பல் அருமையாக பணம் கொழிக்கிறது. இறப்போர் எண்ணிக்கை குறைய , பிறப்போர் எண்ணிக்கை கூட உலகம் ஒரு சமநிலை இழந்து தடுமாறும் இந்த வேளையில் இது போன்றோர் கூறும் வார்த்தைகள் அப்படியே நம்பவைக்கிறது. அதுவும் இந்த மெடிக்ளைம் எனப்படும் மருத்தக்காப்பீடு முறை வந்த பின்பு இவர்கள் போடும் ஆட்டம் தாங்கமுடியலை.

கடந்த மாதம் என் நண்பர் ஒருவர் என்னிடம் " வயிறு வீங்கனாப்போல்
ஒரு இறுக்கமாயிறுக்கு ?! என்னாவாயிருக்கும்" என்றார்.

"கங்கிராட்ஸ்! நீங்க அப்பாவாகப்போறீங்க! " என்றெலாம் கடிக்காமல்
"ஜோடா வாங்கி குடீயப்பு! ஏப்பம் விட்டா அம்புட்டுத்தேன்!? " என்ற பழகு
வைத்தியம் சொல்லாமல், " மச்சான்! குவாட்டர் ஓல்ட் மங்க் எடுத்துக்கோ! அதில் கொஞ்சம் பெப்பர் போட்டுக்கோ! லட்டு தான் சைட்-டிஷ்! அப்புறம் குடிச்சுட்டு குப்புறக்கா படுத்து தூங்கு! அப்பாலிக்கா பாரும்மா! " என்ற நண்ப வைத்தியம் கூறாமல்,"கொஞ்சம் திப்பிலிகாய் வற்றலும்,சித்தரத்தை ஒரு கையளவு இவற்றை தேன் சேர்த்து சாப்பிட்டால்,வருடத்தின் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இன்பமாய் போகும்" என்றெல்லாம் சொல்லாமல் ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்குப்போயிருந்தோம்.

அந்த மருத்தவர் முதல்பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டார்.இது I.T. கும்பல் என்று. அவரது அடுத்த கேள்வி." மெடிக்ளய்ம்தானே? எய்டு கார்டு இருக்காப்பா?"நண்பர் தலையசைத்த விநாடி பிரிஸ்க்ரிப்ஸன் பேடைத் திறந்து,

"சொல்லுங்க!" என்றார்.

"வயறு உப்புசமா இருக்கிறது" என்றவுடன் ஒரு நாலு வரி எழுதினார்.
"அப்புறம் ? "

" சரியா காலைக்கடன்போக முடியல இரண்டு நாளா"

மேலும் ஒரு வரி கூடியது.

"அவ்வளவுதானே" என்றார் மளிகைக்கடைக்காரர் போல்.

நண்பர் குழப்பத்துடன் இருக்க புரியாத மருத்துவ சங்கேத வார்த்தைகளில்
அருகிலிருந்த நர்ஸிடம் பேசி,

"இந்தாங்க ! இவங்களோட போங்க...! ப்ரெய்ன் ஸ்கேன்,மோஷன்,யூரின்,ப்ளட்
டெஸ்ட்ஸ் அப்புறம் இ.ஸி.ஜி." எல்லாம் எடுத்திடுங்க!? ரிஸல்ட் வந்தவுடன் மேற்க்கொண்டு டிஸ்கஸ் பண்ணுவோம் " என்றபடி நண்பரைப் பார்த்து

"கார்டு கொடுங்க சார்?" என்றார்.

நண்பர் அந்த குளிர்சாதன அறையில் வேர்த்து வயிறுப்பிரச்சனை சரியாகி "சார்! எங்க HR departmentக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திடரேன் " என்று சாக்கு சொல்லிவிட்டு,ஏற்கனவே, அட்வான்ஸாக(?!) 1000 ரூபாய் கட்டியிருந்த படியால், சொல்லிக்காமல் அந்த மருத்துவமனை விட்டு வெளியேறினோம்.

அவருக்கு ஒரு பாட்டி வைத்தியத்தால் அந்தப்பிரச்ச்னை சரியாகிவிட்டது என்றாலும்,ஒருவருக்கு வசதி இருந்தால் இன்ஸுரன்ஸ் போன்றவை இருந்தால் கொள்ளையடிக்கும் கும்பல் எப்படியெலாம் செய்கிறது பார்த்தீர்களா?

கடைசியாக கருத்துக்கூறியாக வேண்டுமே! என்னா சொல்றது !
ஆகவே! பணம் பத்தும் செய்யும்! என் இனிய நண்பர்களே! பணம் மிக முக்கியம் தான். அதைவிட முக்கியம் அதனை எப்படி பாதுகாகிறது என்பது தான்.
நியாயமான முதலீடுகளைச்செய்யுங்கள்.

வளர்ச்சி என்றபெயரில் காட்டப்படும் பங்கு வர்த்தனை அட்டவணைகளையும், அறிவுரைகளையும் நிதானமாக கவனித்து ஒரு சிறு பங்கை முதலீடு செய்யுங்கள். இங்கே தான் ஏர்போர்ட் வரப்போகிறது என யாராவது மெரினா பீச்சை கூட உங்களிடம் விற்று விடுவார்கள்.

அதுவும் ஒரு கும்பல் இருக்குங்க! " நாந்தான் அப்பவே சொன்னேனில்ல!
" என்பார்கள் எல்லாம் கைமீறிப்போனபின்பு.

அப்பாடி, ஒரு வழியாக மெஸேஜ் சொல்லியாச்சு!

ஆனால், நான் உங்களிடம் சொன்னது உங்களுக்கு சிரிப்பு
வரவழைக்கச் சொன்னது இல்லை!

உங்கள் வாழ்க்கை பார்த்து யாரும் சிரித்து விடாமல் இருக்க!


*****
பின் குறிப்பு :
இங்கு நான் முன் சொன்ன மின்கடிதத்தினை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன். மொழிபெயர்க்க தேவையில்லை எனக்கருதிகிறேன்.
படிப்பீர்கள் என நம்புகிறேன்.
Hi,
(below email "Save the IT People from Debts" was wonderful and we should go through it and also forward to all our friends)
Real Estate price hike is known open robbery from IT guys by brokers / whoever it is and it's not only Flats / Real Estate, IT guys undergo open robbery from all rich shop owners / a person who wanted to become rich as fast as possible...
The salary whatever we get, it's our hard-earned money, most of the times sitting in the night, away from family functions, friends, etc...but all our money or most of the money are going to someone who just takes advantage of our stressful life (both mentally and physically) and our new western life style.
I do not find anything wrong in having a US / UK life style, but many open thieves (starting from Ministers to our local Restaurant owner) just swindling all our "legal money" and as we do not have any other choice becoming poor / debtor day by day.
Well most of the price hikes are just unbelievable and there is absolutely no justification (few examples given below).
Chicken Biriyani (Karaikudi 3 weeks back) - Rs. 65
Today (since last 2 weeks) same Karaikudi Chicken Biriyani (believe me, there is absolutely no change) - Rs. 78, there is no justification for such a big increase.
Pop Corn (Sathyam Complex) previously (month and half back) - Rs. 20
Today (almost the same quantity) - Rs. 30 (again, i do not find any justification)
Corn in Garuda Mall previously (month back) – Rs20 Small, Rs 30 Medium and Rs 40 High
Now, No “actual” small and real small has become 35 now and 45 for high... [Are they the farmers who have given their blood to grow this ]
(In Sathyam complex, many price hikes are really too much for no reason...)
Chips packet (Gangotree) previously (three months back) - Rs. 15
Since last two Months the same packet costs - Rs. 20 (again, I do not find any justification)
Room Clean (just once) - Rs. 200, that's bcos they cleaned IT guys room.
(The moment you say that you are from Software company, the price automatically increases...)
We guys already pays big taxes from our salaries and goes on paying other taxes too (starting from Hotel Sangeetha "Vadai" to Scotch in a bar), it's time to think and pledge ourselves that we stop spending just for one month...
Reason(s) why we should stop spending alteast for a month:
1. 70% of the IT guys occupies the restaurants.
2. 80-90% of the IT guys goes to coffee shop, hang around places, bakeries, etc.
3. Most of the IT guys goes to Sathyam complex, Movies
If we stop going / spending just for a month, their business automatically goes down and they would have no other choice except to bring down the price, that's what happened when IT industry was down three years back.
Somehow directly or indirectly we are responsible for this unjust price hike and now, only we could prevent this open robberies, please add your comments or experiences and keep forwarding this email to all your known people, I am sure even if 25% of us realizes and acts accordingly, it could and would make lot of difference to us.
(let's try and prevent unjust price hike)
Save the IT People from Debts
* Property market in Year 2001 -2004 was quiet Ok , People were able to buy Flats in reasonable rates .
*Year 2005 -2006 , Some of the well known builders started the rates boom , flat which was at the cost of Rs.900 Sq Ft now became 2200 to 2800
Q: Are there any additional facilities ?
--> No Same Scheme/Area , Flat sold at 10 Lacks Now selling at 25 Lacks .
Q: Why Property increased so High ?
--> IT people competition to buy sweet home ..
Q: Who is going to Benfit from this Property Boom ?
--> Only Builders and some of the Politicians
Q: How is the Bank's support on Home Loans ?
--> Last Year , Bank gave the loan's at flexible mimimum rate,Now Banks has sufficient number of customers ,
(Trap) Slowly Banker's increasing interst at % 0.5 every month .
IT People Who bought house for 22 Lacks for 20 Yrs , Now became 23 Yrs with raise of 0.5 %
Q. How some IT people can face the problems in Future ?
--> Companies are Project Based , If Projects are not there then People will not be there .
Q. IT salaries are high in Market , How much actually IT-people getting in Hand ?
--> People, Who bought house of 22 Lacks to 40 Lacks They need to pay EMI
15,000 to 35,000 for 20 Yrs. If Bank keeps same interst rates .
Suppose Salary is 35- 40 K Per Month, 20K will be the EmI
Q. Is there any "Terms & Condition or Processes to increase rates" ?
--> No , Depends on Buiders Greediness . Every builder follows the different strategies
Builder sold one flat 1500 Per Sqft in Morning and 1800 Per Sqft in the Evening ,
There are no records maitained ..
Q. Who made builders smart & greedy ?
--> Greedy IT people ..
No body is asking , Flat was sold at 12 Lacks , Why now 24 Lacks ?
Q. Is Corporation water & MESB available to all schemes ?
--> Some of the area don't have the Corporation water at all , People surviving on Water Tankers.
** MESB .. Under Table ,can be managed easily .
Q. What will be the condition If We are not able to Clear the Loan ?
--> Depends on individual capabilities
Q. What wiil be the actual 'area of living' or carpet area if the builder proposes 1000 sft?
....> The actual carpet area will be 800-850 sft only. The common area is also included in the proposal.
If two flats are in the same floor, then the builder cheats both the residents by collecting
How do Builders cheat buyers? ... Let us see with a simple example
Builder XXXX proposes a flat in a decent residential area.
Rate ( Unit Price ) - Rs. 3500 sft.
Registration - Rs. 40 per sft.
EB and drainage - Rs. 50,000
Covered Car park - Rs. 1,25,000
Corpus fund - Rs. 50000.
For a 1000 sft flat ( 850 sft carpet area ), the approximate cost will be Rs.37,65,000. In the same plot area ( measuring 2 grounds) the builder would have constructed 8 or 10 flats.
Let us see how a builder earns his profit
Total sales for the builder - 37, 65,000 *10 = 3, 76, 50000 ( 3.76 crores)
Cost of the land - Rs. 40 laks per ground
1) Total cost of the land - 80 lakhs for two ground ------- A
Total builtup area for 10 flats - 10*1000 sft = 10,000 sft
Construction cost per sft ( for normal specification) = Rs. 900 per sft
2) Total construction cost - 10,000 * 900 = Rs. 90,00,000 -------------- B
3) Other expenses for the builder - Rs. 20 per sft = Rs. 2,00,000 ................. C
Total expenses for the builder = A+ B+C
= Rs. 80,00,000 + Rs.90,00,000 + Rs. 2,00,00
= Rs. 1,72,00,000 ( 1.72 crores approx)
Total Sales = Rs. 3.76 crores - Rs. 1.72 crores
Total profit of the builder = Rs. 2.04 crores.
Let us see the share of each resident
1. Cost of land = Divided share among the other 10 residents
= Rs. 80,00,000 / 10
= Rs. 8,00,000
2. Construction cost = Rs. 900 * 1000
= Rs. 9,00,000
3. Other expenses = Rs. 2,00,000 ( approx)
Total = Rs. 19,00,000 ( Nineteen lakhs)
The total share for each resident is Rs. 19,00,000 ( Nineteen lakhs only )
but he pays Rs. 37.5 laks for the flat.
Q. How We can stop Builders -Property Boom ?
1) IT People should think about buying flats for atleast next 1-2 Yrs .
2) Onces rates are reasonable , With some legal process get the Booking .
3) Check Facilities, Convince, Road Approach, schools & Mainly co-operation water
4) Ask Questions If I buy 1/2 BHK at 12 to 30 Lacks , Do I get reasale value in future?
5) Today you are capable for paying 1000 -3000 maintains per month ? Will will be the same case
after 20-30yrs after retirement .
6) In All, Don't stretch more to get the more & more loans other wise it will create unnecessary
pressure and tension .
7) Read the above mentioned calculation carefully, when you are about to buy a flat pls keep this in mind.
*****

Tuesday, November 14, 2006

குங்குமத்தில் வலைப்பதிவுகள்


 தடாலடியாக குங்குமத்தில் வந்த நமது வலைப்பதிவாளர்களின் பதிவுகள் இங்கே உங்கள் பார்வைக்கு.

குங்குமம் ஆசிரியர் குழுமத்திற்கும் ,பொறுப்பாசிரியர் கெளதம்ஜி அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.

இது போன்ற ஊக்கமருந்து எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.(நல்ல வேளை இந்த ஊக்க மருந்துக்கெல்லாம் தடையில்லை) பிற்காலத்தின் பதிவர் வட்டம் ஒரு சீர்மிகு ஊடகமாக மாறும் ..மாற வேண்டுமென விரும்பும் உங்களைப்போல் நானும் ஒருவன்.