"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, December 18, 2006

சிவப்பதிகாரம்


நேற்று சென்னை-வலைப்பதிவு கூட்டத்தில் பங்கேற்று சூடாய் பேசியும், கேட்டும், புது நண்பர்களிடம் கைகுழுக்கி... மொத்தத்தில் சந்தோசமாய் களைத்துப் போனேன்.

மனசு முழுவதும் பதிவர் கூட்டத்தின் உரையாடல்களே ஓட்டிக்கொண்டிருந்தது. தூங்கமுடியாது போலிருக்கிறதே! என்றெண்ணி ஒரு நண்பரும் நானும் திரைப்படம் செல்வதென்று முடிவு செய்து சிவப்பதிகாரம் சென்றோம்.

கவிதையாய் கிராமியப் பின்னணியில் துவங்கியது.

வரிசையாய் கிராமியப்பாடல்கள் காதில் வந்து விழ, வெறும் குத்துப் பாடல்களும் வடக்கித்திய பாடகர்/பாடகிகளின் மெல்லிய கஜல் பாடும் குரல்களின்றி கணீர் என்று கேட்டகுரல்கள் மிகவும் மகிழ வைத்த்தது.

'பருவாயில்லை' என்றெல்லாம் வரிகள் இல்லாமல் நல்ல தமிழில், உச்சமாய் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல்களை கேட்கும் போது, நிறைய இழந்துவிட்டோம்..இன்னும் இழக்க எத்தனையோ! என்று மனசு விம்மியது.

அதுவும் நாங்கள் வழக்கமாக பார்க்கும் அவ்வரங்கில் பாட்டுப் போட்டால் போதும், புகைப்பார்கள் கிளம்பி நடக்கத்தொடங்கிடுவார்கள்.
ஆனால், ஒருவர் கூட இப்பாடல் ஒளி/ஒலித்த போது நகராது கண்டு , ஒவ்வொருத்தன் உள்ளேயும் ஒரு கிராமத்தான் இருக்கத்தான் செய்கிறான் என்ற வாக்கியம் உண்மை என உணர்ந்தேன்.

பிறகு துவங்கிய இரண்டாம் பாதியில் தான் கதையே!

எல்லோரும் போல் ஒரு அறிவுரையோடு முடிக்காமல், படம் பார்ப்பவரைப் பார்த்து " ஏதாவது செய்யனும் சார்! " என்றபோது ஊனமுற்றவன் போல் உணர்ந்தேன்.

சமுதாயமும் குடும்ப வட்டம் என்ற கைச்சங்கிலியும் எத்தனை நாட்கள் தான் உணர்வுகளைக் கட்டிப் போடுமோ தெரியவில்லை.

வழக்கமான பேராசிரியர்கள் இல்லை.( வெ.ஆ.மூர்த்தி போன்றவர்கள்)

வழக்கமான மாணவர்கள் இல்லை.( சின்னி செயந்த், விவேக்)

காமெடியாக மாணவர்கள் காட்டப்படவில்லை.

"ட்டாய்ய்ய்ய்ய்ய்" என்றெல்லாம் வசனங்கள் இல்லை.

"இவன் பாக்கறதுக்கு தான் கருப்பு சூடானால் சிவப்பு" போன்ற பஞ்ச் டயலாக்குகள் இல்லை.

பழைய மியூசியத்தில் உள்ள அரதப்பழசான கதைகளை தூசு தட்டி ரீமிக்ஸ் பாடல்கள், வசனங்கள் இல்லை.

நமீதாக்களையும் குத்தாட்டங்களையும் இரட்டை மூவர்ண தமாசுகளை எதிர்பார்பவர்களுக்கு இப்படமில்லை.

இப்படி எத்தனையோ இல்லைகள்....

ரகுவரன் மிக அருமையாக நடித்திருக்கிறார். அவர் மாதிரி 'மாதிரிகள்' இல்லாதுதான் நம் குறையா?? என்று மனசு கேட்ட போது அப்துல்கலாம் முதல் எம்.எஸ். உதயமூர்த்தி வரை வந்து போனார்கள். பிறகென்ன செய்யவேண்டும் என்று மனசு பலவாறு சண்டையிடத் துவங்கியது.

படத்தில் வசனம் மிகக்குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

" Try to be Black or White Dont be in Gray"
" எத்தனை நாள் கெட்டதைப் பார்த்து பேசாமல் இருந்தீங்க! அது மாதிரி தான் நான் நல்லதை செய்ற இந்தக் கொலைகளைப் பத்தி பேசலை!"



எப்போதாவது சில படங்கள் பார்த்தால் மனம் சில்லிட்டு பேச முடியாமல் போகும். அப்படி ஒன்று தான் சிவப்பதிகாரம்.


அமைதியான அறையில் தீடீரென மீட்டப் பட்ட வீணையின் தந்திகளை போல் நீண்ட நேரம் மனசில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் போன்ற ஒர் உண்ர்வு தோன்றியது மட்டும் உண்மை.



கடைசி செய்தி:

நேற்று ஒரு பிரபலத்தொலைக்காட்சியில் இப்படத்தைப் பற்றி வந்த விமர்ச்சனம்: " ஒரு கல்லூரி மாணவர்கள் அரசியல்வாதிகளை தொந்தரவு செய்தால் என்ன பாடுபடுவார்கள் என்பதை சொன்ன ஒரு படம் என்றது."


இது எப்படி இருக்கு!!



பதிவர் வட்ட சந்திப்பு பற்றி தொடர்புள்ள இடுகைகள்:
1. பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை : தமிழ்நதி
2. சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு -சுடச்சுட : அன்புடன் ச.சங்கர்
3. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு -12-17-06 : சிவஞானம்ஜி
4. சென்னை சந்திப்பு-1 : பொன்ஸ்

3 comments:

வெங்கட்ராமன் said...

/*******************************
மனசு கேட்ட போது அப்துல்கலாம் முதல் எம்.எஸ். உதயமூர்த்தி வரை வந்து போனார்கள்
*******************************/

நாம் அவர்களை பின்பற்ற வில்லை.

எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை உங்களுக்கு பிடிக்குமா, எனக்குப் பிடித்தவர்களில் முதலிடம் அவருக்குத்தான்

பொன்ஸ்~~Poorna said...

தமிழி,
என்னங்க இது, சந்திப்பு பற்றிய விஷயங்களை இத்தனை சுருக்கிட்டிங்க.. இன்னும் எழுதுவீங்கன்னு இல்லை நினைச்சேன்...

RBGR said...

இல்லைங்க பொன்ஸ்,
அன்று நான் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் எனக்கே இன்னும் கிடைக்கவில்லை.

வந்த பதிவர்களில் சுடச் சுட "கூட்டு முயற்சியாக உதவி செய்ய ஆசை.(உணவு, உடை, குழந்தைகள் படிப்பு செலவை ஏற்பது என்பது மாதிரியாக).ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை எழுதுங்களேன்."
என்று ச.சங்கர் அவர்கள் அன்புடனும், தமிழ்நதி அவர்கள் அவரின் ஆதங்கத்தையும் தெரிவித்துவிட்டார்கள்.

இன்று, ம.சிவக்குமார் அவர்கள் கையெழுத்துகள் பற்றிய அறிவுப்பும் பார்த்தேன்.மகிழ்ந்தேன்..

'திரு' அவர்களின் கருத்துகள் எத்தனை பேரின் இதயத்தைத் தொட்டது என கவனித்துக்கொண்டிருந்தேன்.....

சந்திப்பு பற்றிய தொகுப்பாய் எழுதாமல் சந்திப்பின் நோக்கமும் அது நிறைவேற சரியான பாதை ஏதாவது உண்டா எனத்தேடிக்கொண்டிருக்கிறேன்,

ஏதாகிலும் கிடைத்த உடன் பதிகிறேன்..
நன்றி, பொன்ஸ்.