"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, August 15, 2006

உறவுகள்-ஒரு சிறுகதை.


மெதுவாய் மரத்தின் மேல் அமர்ந்தேன்.
"யெப்பா ! என்ன அலைச்சல்டா! போதும்...! போதும் .! "

என்ன மரத்தின் மேல் இருக்கேன் ? எப்படி ஏறினேன்.!?
இது என் பக்கத்து வீட்டு வாசல் மரமாச்சே...!
இப்பத் தான் கண் அசந்து படுத்தோமில்ல..இங்க எப்ப வந்தோம்...

ஏய்! அங்க வரது அக்கா மாதிரியில்ல இருக்கு...
"என்ன ..எப்ப வந்தீங்க?"ஏன் இப்படி அழுதுட்டு ஓடுது அக்கா?
என்னது! என்னைப் பார்க்கலயா?இல்ல.. நான் மரத்தில் இருப்பது தெரியிலயா??
மெதுவாய் இறங்க முற்பட்டேன்..!!

மெதுவாய் முகத்தை துடைத்தாள் என் அம்மா..
இப்பக்கூட மகன் முகம் வாடக்கூடாதோ..?

"இன்னும் அத்தை வரலேயப்பா! ஒரு எட்டு போய் நான் பாத்திட்டு வந்துட்றேன்.." இது என் மாமா.

" லேஞ்ஜி கட்டவாவது வருவானில்ல... உங்க அண்ணன்?" இது என் ஒரே தங்கை என் மனைவிடம்.

"மச்சான்! திரும்ப ஃப்ளைட் டிக்கெட் ஃபுக் பண்ணலே? டிராவல்ஸ் ஆபிஸ் எங்கிருக்கு ??" இது என் தம்பி சுரேஷ்.

"எல்லாருக்கும் சொல்லியாச்சா! "இது என் பால்ய நண்பன்.

" ராத்திரியே தூக்கிருக்குனும்ப்பா !சுரேஷுக்கு ஃப்ளைட் கிடைக்கலாயாமே!" இது என் அண்ணி.

"யாராவது இந்த ஊதுபத்திய மாத்த மாட்டீங்களா?" இது என் மனைவி.

"அந்த கண்ணாடிக்கூண்டு நல்லாயிருக்கில்லே! !போன் நம்பர் வாங்கி வை !?" இது என் சித்தி.

"ஒரு வழியா தூக்கிட்டாங்க ?? என்ன நான் சொல்றது??" இது என் பக்கத்து வீட்டு நண்பர்.

இதுக்கு மேல இதை இங்க வைக்கிறது நல்லா இல்லைங்க !? " இது என் அப்பார்ட்மென்ட் செக்ரெட்டரி.

மெதுவாய் அதை தூக்கிக்கொண்டு நடந்தார்கள்.

Monday, August 14, 2006

உறவுகள்

ரதியாய் மனம் தொட விழைந்து
மணம் இழந்த மலர் நான்..


என் இதழ்கள் நிறம் மாறும் முன்..
உன் இதழ் விரிய இதயம் திற!

மின்மினிகள் உனகெதற்கு..
மகரந்த மலராய் நானிருக்க!
உன் வெண்குதிரையில்லாவிட்டாலும்
மனக்குதிரையிலாவது இடம் தா!
பொன்வண்டாய் நீ முகர இவ்வல்லி மறுக்குமோ!
மீனுக்கும் நீர் பகையோ??

தணலாய் இருந்த என்னை தழலாய் மாற
நாம் என்ன விலகவா பழகுவோம்!

இந்த இலவு உறவுக்காகவது விரைந்து வா!

முதிர்கன்னியென்கின்றனர் என் எல்லா இதழ்களும்
முதிர்ந்து உதிரும் முன் ??

ஆமாம்,யாரடா நீ மன்மதா !