"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, June 14, 2006

சிலருக்கு உதவலாம் இவை.

Tuesday, June 13, 2006

மலரின் நினைவுகள்.


ரோஜா!

கவினழகு கொண்ட கார்மேகாக்கூட்டம் எங்கள் சின்னரோஜாவின் சிரிப்பில் மெளன ஊர்வலமானது..

காதலைப்போலவே உன் வாழ்வும் கருகும் சிலநேர நிர்பந்தம் தானோ!
பெற்றோரின் கண்ணீரில் கரையும் காதலைப் போல.. (உன்னைப்) பெற்றாரின் கைகளில் கசங்கினாயோ!

உன் சொந்தமும் பந்தமும் நீ கைகளால் கற்பழிக்கப்படும் வரைதானோ!
காதலின் முன்மொழியான நீ மட்டும் முடிவாகி கசங்கினாயே!
கூந்தலை மணம் செய்து மணம் செய்த நீ... விதவையாகாமலேயே மரித்து போனாயோ!

உன் கதை கேட்டால் கவிதை கூட சற்று அழும்...?
வண்டுகளுக்கு ஊட்டம் கொடுத்த நீ ! ஏன் மன்மத வில்லின் மகத்தான அம்பாய் மாறினாயோ!

இன்று வண்டுகள் கூட தேன்ப்புட்டிகளை நோக்கி பறக்கும் போது..! நீ மட்டும் இன்னும் சருகுகளாய்..??

பல கலப்பு ரோஜாக்களுக்கு மணம் செய்து வைத்த உனக்குப் பட்டயம் அளிப்பது யார்?
அன்று காதலுக்கு கையூட்டான நீ ..! என்று காகிதப் பூக்களால் கடைசி வரிசையில்...!!

தேனீக்களுக்கு இடமளித்த உயிரிழந்த உன்னை இப்போது சாக்கடை ஈக்களும் புறக்கணிக்கிறதோ!
தென்றலில் தலையசைக்கும் நீ மானிடப்புயலால் மசக்கையானாயோ!

மொட்டான நீ மலர்ந்ததால் தானோ உனக்கும் சாவுமணி.
பூப் போன்ற பெண்ணே நீ பூப்பறிப்பதேன் !

உன்னைக்கவி பாட யாருமில்லையே? ஒரு வேளை நீ தமிழ் பூ இல்லையோ !

என் இனிய ரோஜாவே ஏன் முள் தாண்டி நீ வந்தாய்... முடிவாகிப் போனாயே...

நீ நித்தலமாய் நிச்சயம் பிறப்பாயோ?

அனைத்து ஊர்வலங்களிம் பங்கெடுத்த உன் சவஊர்வலத்தில் ஏன் குப்பைகள் மட்டும்..!

இது வளர்சிதை மாற்றமெனினும் யாராவது ஓர் ரோஜா மாலை வாங்கி வாருங்கள்... என் ரோஜா இறந்து விட்டாள்..!!

Friday, June 09, 2006

திரும்பி பார்க்கிறேன்!























நண்பர்களே..

மெதுவாய் திரும்பிப் பார்த்தால் எல்லோரும் சில மைல்கள் கடந்து தான் வந்திருப்போம்..

எப்போது தமிழ் என்ற ஆழமான உணர்வு உருவானது என்று மெதுவாக சிந்தித்த பொழுது ,
என்னைப் பொறுத்த வரைப் பெரும்பாலும் யாரையாவது அல்லது எல்லோரையும் தன் நோக்கி கவர்வதே நோக்கமாக உள்ள போது பெரும்பாலோனவர் மொழியைத்தான் எடுத்துக்கொள்கிறார்கள்..

(நானும் நம் தமிழை...)

இப்படியாக நானும் ஓர் டைரி வாங்கினேன்..

என்னனோவோ எழுதி...
அதை எல்லாம் கவிதை என எண்ணிக்கொண்டு , அறைக்கு வரும் ஒரு சில நண்பர்களையும் ஓட விட்டிருக்கிறேன்..என் படைப்புகளை படிக்கச்சொல்லி...

எனக்கு நினைவு தெரிந்து எனக்குப் பிடித்த என் முதல் கவிதை...

" ஊனமுற்றோர் சங்கத்தில் என்னை
உறுப்பினாராக்க முடியுமா ? கேட்டுச் சொல்லுங்கள் !
நான் என் இதயத்தை இழந்தவன் !! "

இதைப் படித்து பாரட்டிய சிலரால் நானும் எழுத துவங்கினேன்..

அப்படி எழுதும் பொழுது தான் அந்த சுகத்தினை அறிந்தேன்.

எப்போதும் காதில் யாரோ என்னவோ காதில் கூறிக்கொண்ட்ருப்பதைப் போன்ற ஒரு உணர்வு..



"அக்னிக்குஞ்சொன்று கண்டேன் "

"நல்லோதோர் வீணை செய்தே " என்று அதீத கற்பனைகள் வேறு...


எப்படியானாலும் என் எழுத்துக்கள் எனக்கு (எனக்காவது) மிகவும் பிடிக்கும் தானே..!

மேற்க்கண்டவாறு எழுதிக்(?) கொண்டிருந்தப் போது வழக்கம் போல் அல்லாது சமூகப்படைப்பாக சிலதும் எழுதத்தோன்றியது..

சில சமயம் அது எனக்கு கட்டுரை வடிவம் போலும் எனக்கு தோன்றியது..

அதில் ஒன்றை (சுமார் ஆறு பக்கங்கள்) நான் இணைப்பாய் தந்துள்ளேன்..
உள்ளபடி சொல்லுங்கள் என் மற்றவற்றையும் பதிகிறேன்..

தவறு எனில் இடித்துரைக்க வேண்டுகிறேன்..

நன்றி..