நல்முத்துப் பேரன்கள்!
கபடியில் தங்கம் வென்றது இந்தியா- இனிப்பு செய்தி.
கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கபடி விளையாட்டில் கிடைத்துள்ளது.
அதுவும் பரம எதிரியான(!?) பாகிஸ்தானை வென்றது குறிப்பிடத்தக்கது.
காலைவாரிவிடுவதில் வல்லவர்கள் என உலகம் போற்றும் இந்தியாவில், காலைவாரிவிடுவதில் வெற்றிபெற்றதிற்கு வாழ்த்துவோம்.
இது உள்குத்து இல்லைங்க! உண்மையில் நமது சாதனை ஆசிய அளவில் என்ற்றும் இருக்கிறது. இது உலக அளவில் மாறவேண்டுமென்பது அனைவரின் விருப்பம் மற்றும் வேண்டுதலும் கூட.
தங்கம் வென்ற சகோதர்களே! வாழ்த்துகள்!
(நன்றி-புகைப்பட உதவி :தினமலர்)
கபடியைப் பற்றிய ஒரு சிறு நினைவுகூறல்:
இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்).
இவ்வாட்டம் விளையாட மட்டையோ பந்தோ ஏதும் தேவை இல்லை. வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு" அல்லது மூச்சுவிடாமல் 'நாந்தான் உங்கப்பன்டா ...' என்றெல்லாம் பாடலாம்) என்று பாடிக்கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும் பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
ஆடுகளம்:
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை தரை மண் அல்லது மரத்தூள், மணல் பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல.
ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும் (இன்னும் எழுத வேண்டியுள்ளது)
1 comment:
Once upon a time.. long long ago so long ago I was also a player.. but என்னான்னா.. ரொம்ப ஒல்லியா இருப்பேனா.. சீக்கிரம் அமுக்கிடுவாங்க.. சோ எப்பவும் ஆடாமல் வெளியிலேயே மிஸ் நீக்க வச்சிடுவாங்க..
Post a Comment