"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, October 31, 2006

உறவுகள்-மறந்தும் மரத்தும் போனவை!யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாகிவிட்டாதாலோ என்னவோ நாம் நம் அருகில் இருந்த பல உறவுகளை இழந்து விட்டோம்.உறவு என்பது ரத்தசம்பந்தமானவற்றையே பெரும்பாலும் குறிக்கின்றது.
நாம் உறவுகளிடமிருந்து என்ன எதிபார்க்கிறோம்? பண உதவியா? ஆதரவு வார்த்தையா? என்னைக்கேட்டால் இரண்டு கேள்விகளுக்குமே ஆம்! என்று தான் பதிலளிப்பேன்.

ஆனால் உறவுகளுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் கூடாது ? இருந்தால் உறவு கெட்டுவிடுமே! இது பெரும்பாலானர் கருத்து!
நானும் ஆமோதிக்கிறேன்.ஆனால்,கெட்டு விடாமிலிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மிகக்கடினமான நேரத்திலும் உதவிக் கண்டிப்பாகத் தேவை என்ற வேளையிலும் இக்கோட்பாட்டை எப்படிக் கடைப்பிடிப்பது. அப்போது யார் உறவென்றாலும் உதவி கேட்பது தானே மனிதமனம்.நமக்குத் துன்பத்தில் துணைப்புரிய வேண்டுமென ஏங்கித்தவிக்கிறோமே! ஆனால், நாம் அப்படி யாருக்காகவது செய்திருக்கிறோமா ? என்ற கேள்வியைக் கேட்டு விட்டு ஏங்கினால் நன்றாயிருக்குமல்லவா?

எனவே தாம் வள்ளுவத்தில் கடலைவிட,இவ்வுலகை விட பெரிதென எதிர்பாராது செய்த உதவியைக்குறிக்கிறார்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

இதெல்லாம் நடப்பு உறவுகள்.ஆனால்,இந்தத்தலைமுறை இழந்து வரும் நமது மூத்த உறவுகளாகிய நமது தாத்தா பாட்டி போன்றவர்களின்றி எவ்வளவோ இழக்கப்போகிறது.
அன்பு, அரவணைப்பு, நல்ல கருத்துகள்,கதைகள் என எவ்வளவோ நமக்கு கிடைத்தது.ஆனால் வரும் தலைமுறை எதிர்நோக்கியுள்ள இப்போட்டி உலகில் இதற்கெலாம் நேரம் இருக்குமா?? ஒரு வேளை இந்த வலை உலகம் தான் அவர்களுக்கு பிற்கால வாழ்க்கை என்றாகிவிடுமோ!

இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோது, தமிழகத்தில் தமிழ் பேசி வாழும் நமக்கே இவ்வளவு வருத்தெமெனில் கடல் கடந்து வாழும் தமிழர் தம் மனம் என்ன பாடுபடுமென் எண்ணியிருந்தபோது கண்ணில்பட்ட ஒரு ஒளி-ஒலி(video)யை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.(இன்னும் நிறைய பிறகு பேசுவோம்.)


 

இணைப்பிற்கு இங்கே சுட்டவும்.
I found the video on Youtube (via Google).


2 comments:

TAMIZI said...

ஒரு சோதனை முயற்சி.

செந்தழல் ரவி said...

நல்ல பதிவு...