"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, October 13, 2006

தேர்தல் போட்டியில்-மக்கள் மனதில் யாரு?அவங்களுகென்ன பேரு?

இன்று இங்கு (தமிழகத்தில்)நடைபெற்று வரும் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் கலைஞர் அவர்களின் கூட்டணி ஆட்சியின் தராசாய் இருக்குமென்றால் அது மிகையாகது.

வெளியேறு ஓட்டுக்கணிப்பு(exit pool) நடத்திப் பார்ப்போம் என்ற விழைதலால் இந்தப் பதிவு.
உங்கள் ஓட்டு ரகசியமாய் காக்கப்படும். அதாவது சிலர் அனானிக்களைப் பிடிக்கிறேன் பேர்வழி என நிதானமாய் கருத்துக்களைக் கூறுபவர்கள் வயிற்றிலும் புளி கரைக்க உதவியாய் இருந்தனர்.அது போன்ற எந்த ஆராய்ச்சியும் நடைபெறாது என உறுதி கூறுகிறேன்.

இவனுக்கு என்ன அக்கறை எங்கள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்களே...!நானும் இன்று ஓட்டளிக்கச்செல்லவில்லை.(இதுவரை) ..
நமது சனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
என்னவோ போங்க..
ஆனால், வலைப்பதிவாளர் பெரும்பாலும் (அதுவும் அரசியல் மட்டுமே நிறையப்பேசும் ) ஓட்டளித்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.(பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி வேறு இப்ப ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.)

எனது நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் வசிக்கும் நமது சகோதரர்கள் அவர்களின் ஊராட்சி யார் கையில் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள் என்பது பொதுவாய் அனைவருக்கும் தெரிந்தால் நன்றாய் இருக்கும் அல்லவா?

எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் அணிகளை மட்டுமே நாம் கணிக்கப்போகிறோம்.


என்னாலியன்ற சில குறிப்புகள்.


1.தி.மு.க. மற்றும் கூட்டணி.


குறிப்பு: மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர்.
சாதனை: இலவச அறிவிப்புகள்
பலம் : அநேகமாக அனைத்துக்கட்சிக்கூட்டணி மற்றும் கலைஞர்.
பலவீனம்: மிக குறுகிய காலத்தில் அடுத்த சோதனை மற்றும் எதிரணியினரின் வாரிசு அரசியல் எதிர்ப்பு.
வேதனை: கூட்டணிக்குழப்பங்கள்
கோஷம்: மத்தியில் நாங்கள்,மாநிலத்திலும் நாங்கள் ஆகவே ஊராட்சியிலும் நாங்கள் இருந்தால் மட்டுமே அனைத்து உதவிகளும் மக்களுக்கு வரும்.

2.அ.தி.மு.க. மற்றும் கூட்டணி.


குறிப்பு: முதன் முறையாக அதிக பலம் வாய்ந்த ஒரு தனி எதிர்க்கட்சி.
சாதனை: வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதை தெளிவாய் எடுத்து வைத்தது.
பலம் : நம்பிக்கை வாய்ந்த ஜெ.தலைமை மற்றும் வை.கோ. வின் மேடை முழக்கங்கள்.
பலவீனம்: நம்பிக்கை வாய்ந்தவர் அருகில் இல்லாத தலைமை.
வேதனை: அம்மா என்றவர்கள் இவ்வளவு சீக்கிரம் அய்யா என்றது.
கோஷம்: மத்தியில்,மாநிலத்திலும் அவர்கள் செய்தவை போதாதா? மற்றும் விலைவாசி உயர்வு வாதங்கள்.


3 . தே.மு.தி.க. . மற்றும் கூட்டணி.


குறிப்பு: முதன் முறையாக அதிக மக்கள் ஆதரவு பெற்ற தனிக்கட்சி.
சாதனை: ஒரு எம்.எல்.ஏ. மற்றும் பா.மா.கா. கோட்டை விருத்தாசலதைப் பிடித்தது.
பலம் : மேடை முழக்கங்கள் மற்றும் விஜயகாந்த். மற்றும் மக்களிடம் பரவலாய் உள்ள மாற்றுகட்சி மனோபாவம்.
பலவீனம்: நிரந்தர சின்னம் இல்லாதது அப்பறம் வேறு என்ன பணம் தான்.
வேதனை: மீடியாவின் சரியான ஆதரவு இல்லாதது.
கோஷம்: இத்தனை வருடம் அவர்கள் செய்தவை போதாதா? மற்றும் ஊழல் பற்றிய வாதங்கள்.
*********


முடிவுகள் பொதுவானவை .அனைவரும் உடனுக்குடன் பார்க்கலாம்.ஆனால் மற்றவரின் ஆதரவைப் பார்க்கும் முன் உங்கள் மனதில் இருக்கும் அந்த பர்சனாலிட்டிக்கு ஓட்டளித்தபின் முடிவுகளைப் பாருங்களேன்.இது பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதோ இங்கே ஓட்டெடுப்பு நடக்கிறது.மக்கள் மனதில் யாரு?அவங்களுகென்ன பேரு?


தி.மு.க. மற்றும் கூட்டணி.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி.
தே.மு.தி.க. . மற்றும் கூட்டணி.
இவை ஏதும் வேண்டாம்?
தேர்தலில் நம்பிக்கை இல்லை?

 Current Results1 comment:

TAMIZI said...

ஈரோடு-மதியம் 1 மணி நிலவரம்- 40% ஓட்டு பதிவு.
கோவை-மதியம் 3 மணி நிலவரம்- 53 % ஓட்டு பதிவு.