"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, October 10, 2006

சிக்குன் குனியாவும் சின்ன அய்யாவும் ?புதுதில்லி:
தொடர்ந்த டெங்கு காய்ச்சலால் தலைநகரம் அல்லோலகப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இது போதாது என சிக்குன் குனியா வேறு சுமார் நேற்று மட்டும் 28 பேரையாவது பாதித்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நமது அன்புமணி அவர்களுக்கு போதாத காலம் போலும்...இனியும் அவரால் மறைக்க முடியும் எனத்தோணவில்லை.
சின்ன அய்யாவிற்கு தமிழகத்தில் சிக்குன் குனியா சாவில்லை என்ற மீடியா ஆதரவு திருப்தி போலும்.பின்னே இங்கேதானே இப்போதைக்கு தேர்தல் ?இது போதாது என நமது மருத்தவ ஆராய்ச்சிக்கழகம் வேறு அநத 28 பேரில் 7 பேர் சிக்குன் குனியாவிற்க்கு பாதித்துள்ளனர் என அறிவித்துள்ளது.


சுகாதார அலுவலகர்கள் நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேராவது சிக்குன்குனியாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிகின்றனர்.


மீடியாக்களைப் பொறுத்த மட்டில் தமிழகத்தில் இந்நோய் இல்லை.இது ஏன் என்று அனைவருக்கும் தெரியும்.
சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.

மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.

“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.

முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை'’ என்றார்.

அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).

மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.

சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.
----நன்றி:Posted by bsubra on October 6th, 2006--

இவ்வோட்டெடுப்பில் பங்கேற்று உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

அரசுக்கு முக்கியம் தேர்தல் மட்டுமா?சிக்குன் குனியா?


அரசுக்கு இது தேர்தல் பிரச்சனை?
தமிழகத்தில் இந்நோய் இல்லை?
இந்நோயால் தமிழகத்தில் யாரும் சாகவில்லை?
இதெலாம் ஒரு சர்வேயா?

 Current Results


நமது தமிழ்நாட்டில் இரு பெரிய கட்சிகளும் வரிந்துக்கட்டி இறங்கியுள்ள இந்த தேர்தல் களத்தில் இப்போதைய கதாநாயகன் "சிக்குன் குனியா" மட்டுமே!

'அம்மா' நீங்க கூட வெட்டியாய் மேடை போட்டு "மைனாரிட்டி...மைனாரிட்டி" எனக்குறை மட்டுமே கூறிக்கொண்டிராமல் , இந்த அரசு செய்யத்தவறியதை நீங்கள் ஒரு மேடை அமைக்கும் செலவில் ஒரு ஊருக்கே மருந்தளித்து காக்கலாம்.

இதில் வேடிக்கை என்னெவெனில் நமது   http://www.tnhealth.org/ தமிழக குடும்ப சுகாதார நலத்துறை பின்வருமாறு அறிவிக்கிறது.(அதாவது தமிழ்நாட்டில் சிக்குன்குனியா இல்லை..)

CHIKUNGUNYA IN TAMILNADU

1. CAUSED BY :CHIKUNGUNYA VIRUS

2. FAMILY : TOGAVIRIDAE

3. GENUS : ALPHA VIRUS

4. SPECIES :CHIKUNGUNYA

5. TRANSMITTED BY : AEDES AEGYPTI MOSQUITO

6. MOSQUITO - DAY BITING

       CHARACTERISTICS - BREEDS IN CLEAN WATER
                        - IN ALL STORED WATER FOR DRINKING,WASHING AND                            BATHING,RAINWATER COLLECTED IN UNUSED MATERIALS LIKE                            COCONUT SHELLS, MUD POTS,PLASTIC CUPS,TYRES.

7. SYMPTOMS :FEVER, HEADACHE, JOINT PAIN AND SWELLING CAUSING DEBLITATION

8. DISEASE
              CHARACTERISTICS - SELF LIMITING DISEASE.

              - NO ANTIBIOTICS NEEDED

              - TAKES 10-15 DAYS

              - NO OTHER COMPLICATION REPORTED

              - NOT CAUSING FATALITY

9. SOME OUT BREAKS :
:FEBRUARY 2005 FRENCH ISLAND OF REUNION-2,58,000CASES

: 2005 – MAURITIUS – 3500 CASES

: 2006 – ANDHRAPRADESH – 2000CASES

:DEC 2005 – KARNATAKA- 80000CASES

: MARCH 2006 – MAHARASHTRA-2000CASES

: FEB/MAR 2006 –ORISSA – 5000 CASES

10.VACCINE : NO VACCINE FOR PREVENTION.

11.TREATMENT : ANTIPYRETICS/ANALGESICS,ASPIRIN IS TO BE AVOIDED

12.CONTROL : SOURCE REDUCTION OF BREEDING SITES OF MOSQUITOES.
MEASURES.
                                           ****


2 comments:

We The People said...

இன்று எனக்கு வெற்றிகரமாக சிக்குன் குனியா வந்துள்ளது!! நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேனா?? ஒருவேளை நான் தான் முதல் நோயாளியா தமிழ்நாட்டி??

இந்த காமெடி பலமாய் ஜல்லியடிக்கும் நம் சூரிய தொலைக்காட்சி குழுமம் (sun Network) தமிழ்நாட்டில் சிக்குன் குனியா சுத்தமாக ஒழிக்கப்பட்டதாகவும், ஒரு நோயாளி கூட இந்நோயினால் சாகவில்லை என்றும், இந்நோயி உயிர்கொல்லி நோயல்லா என்று சன் நியூஸ் சொல்கிறது. அதே வேலையில் கேரளாவில் இயங்கும் இதே நெட்வொர்கின் சூரியா டி.வி கேரளாவில் 70 பேர் இறந்துள்ளதாக கூறுகிறது!! ஒரு வேளை கேரளா மட்டும் தான் அது உயிர் கொல்லி நோயோ??!! எல்லாம் ஒரு ஓட்டு அரசியல் தான் தலைவா!!! ஒரு வேளை உள்ளாட்சி தேர்தல் முடிந்தால் இவர்கள் ஒத்துக்கொள்வார்களோ!! அப்ப இது வரை சிக்குன் குனியாவால் இறந்தவர்கள் எல்லாம் என்ன கணக்கு.

சின்ன அய்யாவும் போனவாரமே சொல்லிட்டாரு யாரும் சிக்குன் குனியாவால் சாக முடியாதாம். Secondary complicationனால் தான் மக்கள் இறக்கிறார்களாம். primary complication,secondary complication என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கவில்லை. ஏதேதோ டெக்னிக்கல் வார்த்தைகளை வைத்து அசத்தராரு!!! இன்று எனக்கு சிக்குன் குனியாவுக்கு மருந்து வாங்க மருத்துவர் (ஒரிஜினல்) சென்ற போது குறைந்தது ஒரு 30 நோயாளியாவது காலை பத்து மணி முதல் 11:30 மணிக்கும் வந்ததாக மருத்துவர் சொன்னார்??? எல்லாம் பிரம்மையா??? இப்படி வேகமா பரவிவர நோயை மறைத்து அரசு ஓட்டுக்காக safe card எறக்கறாங்க!!! மக்கள் நலனுக்கு அவ்வளவே மதிப்பு போல!!! அது சரி பாதிக்கபோவது மக்கள் தானே.. முதல்வரின் மக்கள் அல்லவே!!

TAMIZI said...

நீங்கள் தான் அந்த முதல்வரோ!?