"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, October 02, 2006

விடுதலை-தேன்கூடு போட்டிக்கு அல்ல.


நம்மை ஆண்டவர்களையும், ஆளப்போகிறவர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே. ஒரு முக்கியமான நாட்டுக்குத் தேவையான ஒன்று என்னவென்றால்,எத்தனையோ
I.P.S, I.A.S, I.F.S மற்றும் பல படித்தவர்களின் தலையெழுத்து இந்த பள்ளிப்படிப்பை மட்டும் கொண்டவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
http://www.nilacharal.com/enter/celeb/kalaignar_karunanidhi.html

http://www.nilacharal.com/enter/celeb/jayalalitha.html

http://www.nilacharal.com/enter/celeb/SoniaGandhi.asp

http://www.nilacharal.com/enter/celeb/vk.html

மேலும் சில தலைகளின் விபரங்கள் இதோ..

http://www.nilacharal.com/enter/celeb/manmohansingh.html
http://www.nilacharal.com/enter/celeb/pc.html
http://www.dmaran.nic.in/biodata.htmஇவர்களைப் பற்றி எதற்கு இப்ப என்று மறுதலித்தும் கேலிப்புன்னகை புரிபவர்களுக்கும்
உலக வங்கி நம் தமிழ்நாட்டின் வறுமை நிலைமயைப்பற்றிய ஒரு கருத்துத்தொகுப்பை சுட்டிக்காட்ட விரும்பிகிறேன்.

அந்தக் இணைப்புக்கு இங்கே சொடுக்கவும் !!

அரசியல்வியாதிகளே! பொதுமக்கள் உங்கள் அரண்மனையினில் பங்கு கேட்கவில்லை.
1.நல்ல குடி நீர்
2.நல்ல சுகாதார வாழ்வு
3.நல்ல படிப்பு
4.நல்ல வேலைக்கான ஒரு உத்திரவாதம்

இதனைத் தந்து காப்பாற்றும் ஒரு நல்ல தலைவன் ...இவற்றைத்தானே அவன் எதிர்ப்பார்க்கிறான்.
ஒரு குறிப்பிட்ட சாரரும் சிலரும் வெறும் பணத்துக்காகவும் சாராயத்துக்காகவும் ஓட்ட்டளித்த காலம் இப்போது அவ்வளவாய் இல்லை என்று தானே நீங்கள் அரிசி,தொலைக்காட்சி,நிலம்,பசுமாடு மற்றும் வேட்டி-சேலை என இலவசங்களை அனைவர்க்கு என்று வாக்குறுதி அளிக்கிறீகள்.இங்கே ஒவ்வொரு பாமரனுக்கும் எழும் கேள்வி என்னவெனில் இவ்வாறு வாக்குறுதி அளித்து ஓட்டுப்பெறுவது லஞ்சம் தருவதா இல்லையா? ஆம் எனில் ஏன் இது வரை தண்டனையில்லை.

மக்கள் அவர்கள் வாழ்வாதாரப் பிரச்சனையில் இருந்து வெளியேறி விட்டால் இது போன்ற கேள்விகள் வந்து தொல்லை தரும் என கம்னியூசம் முதன் அனைத்துக்கட்சிகளும் இன்று ஓரணியில் சேர்ந்து(இதில் அவ்வப்போது வாபஸ் நாடகங்கள் வேறு) இருப்பதைப்பார்த்தாலே தெளிவாகிவிட்டது.

நம் மக்கள் எப்போதோ மாக்களாகி விட்டார்கள் என்பது எனது வருத்தம்.

இதுவரை இருந்த தலைவர்கள் சக்தி எல்லாம் போதாது.
என்னைக்கேட்டால் இனி நமக்கு காந்தியமும் புரியாது முசோலினிசமும் ஸ்டாலினிசமும் விளங்காது. நாம் ஆட்டு மந்தைகளாகி வெகுநாட்களாகி விட்டன.
ஒவ்வொரு தேர்தலும் இங்கு விழாக்களாகவே கொண்டாடப்படுகிறது.அன்று அவ்வேழைகளுக்கு பிரியாணியும் ,சாரயமும் ,சினிமாவும் இலவசம்..கூடவே வாக்குறுதிகளும்...


அந்நியரிடம் இருந்து பெற்ற விடுதலை இன்று நமக்கு அந்நியமாய்..


எங்கோ படித்த ஒரு துணுக்குச்செய்தி நினைவுக்கு வருகிறது.
காந்தியின் மறைவுக்குப் பிறகு
"நாங்கள் இத்தனை காலம் காப்பாற்றி வந்த உங்கள் தலைவரை கேவலம் ஒரு வருடம் கூட உங்கள் சுதந்திர நாட்டால் காப்பாற்ற முடியவில்லை!! "என்று ஒரு முன்னாள் பிரிடீஷ் அதிகாரி சொன்னாராம்.

தலைவரை மட்டுமல்ல நாட்டையும் அடமானம் வைக்க இபோதுள்ள தலைவர்கள் வெளிநாட்டுப்பயணம் செய்தவண்ணம் உள்ளனர்.அப்பொழுது வெள்ளையன் அவனாகவேத் தேடி வந்து இங்கு நம்மை அடிமைகளாக்கினான்.அந்த சுகம் மறக்காத இந்த தலைவர்கள் இப்போது நம் வரிப்பணத்தில் பறந்து சென்று எங்களிடம் அடிமைச்சக்தி ஏராளாம் இங்கு முதலீடு செய்யுங்கள் உங்கள் கழிவுகளை எங்கள் நாட்டில் கொட்டுங்கள் எனக்கேட்டு அவர்களுடன் சிரித்துக் கைகுழுக்குவதையும் செய்திகள் என நாம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது.சத்தியாகிரகத்தால் பெறாமல் நாமும் ஹிராசாமி-நாகசாகி போல் ஒரு வலுவான வலியுடன் விடுதலை பெற்றிருந்தால் இன்றும் இன்னமும் நாம் விடுதலையாய் வாழ்ந்திருக்கலாம்.

1 comment:

Anonymous said...

விடுதலைங்கற தலைப்பை பார்த்துத்தேன் வந்தேன். நல்லாக்கீது. இத்த போட்டிக்கே அனுப்பலாம். நிறைய பேரு கண்ணில படும்.