"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, November 02, 2006

ஒரு நாள் முதல்வன்







நேற்று சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது பார்த்த ஒரு சிறு செய்தி மனதை என்னவோ செய்தது.

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மருத்துவர்களால் கைவிடப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.சுமார் 10 வயதே ஆன அப்பாலகனுக்கு ஒரு சிறு வயது ஆசை..ஆசை என்பதை விட லட்சியமாய் இருந்திருக்கிறான். அந்த லட்சியம் ஒரு போலீஸ் அதிகாரியாகி நாட்டுக்கு சேவை செய்வதென்பதாம். அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல் கனவுக் கண்டிருக்கிறான். ஆனால்,அவனது பெற்றோர்கள் அதனை வெறும் கனவாய் விட்டிடாமல், அவனது இறுதி நாட்கள் முடிவான நிலையில், அவனது லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்தார்கள். அதன் பயனாக ஆந்திர டி.ஐ.ஜி. யுன் உத்தரவின் பேரில் ஒரு நாள் காவல் துறை அதிகாரியாக பணி உத்திரவு அளிக்கப்பட்டது.

(இதற்கு மேல் என்னால் தகவல்களைத் திரட்ட முடியவில்லை..யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்)

//இதற்கு ஏற்பாடு செய்தது "Make a Wish Foundation" என்ற தொண்டு நிறுவனம்.
sabapathysaravanan.//
பின்னூட்டமாக வந்த இந்தத் தகவல் சார்ந்த வலையைத்தேடிய போது பிரமிப்பாய் இருந்தது.
உலகில் செயல்களை பெரும்பாலோனர் (என் போன்ற) வெறும் பேச்சோடு மறக்கின்றனர்.

அந்த தொண்டுநிறுவனத்திற்க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
  


http://www.wish.org/about/the_first_wish


அந்த தாயின் முகத்தில் வந்த ஆனந்தக் கண்ணீரும்,அச்சிறுவனின் முகத்தின் கம்பீரத்தையும், மகிழ்வையும் பார்த்து கண்ணீர் வந்தது.
அந்தப் பெற்றோரையும் அந்த மனித நேயமிக்க அதிகாரிகளையும் பார்த்து வணங்கத்தோன்றியது.

இப்போது மேலும் சில விபரங்கள் கிடைத்துள்ளது.

பெயர்: மஹாக்கோதரி( Mahak Kothari )
வயது : 8
பதவி : inspector of police
இடம் : inspector of the Jubilee Hills police station

மேலும் விபரங்களுக்கு http://www.hindu.com/2006/11/01/stories/2006110100612200.htm



இன்னும் எத்தனை நல்லவரை இத்தேசம் இழக்கப்போகிறதோ!

 

1 comment:

Anonymous said...

நெஞ்சைப் பிழிய வைத்த இனிய "ஒரு நாள் முதல்வன்" நீண்ட நாள் வாழ உளமாற பிரார்த்திக்கின்றேன்.

மனித நேயம் படைத்த அன்பு நெஞ்சங்களின் நேயச் செயல்கள் தொடரவும்.

வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன்
இறை நேசன்