"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, March 29, 2007

நடிகர்திலகங்கள்!

O.T.I. செய்தி:

சென்று திரும்புகின்ற நமது விளம்பர நடிகத் திலகங்கள் புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள்.

அவர்கள் நடிப்புத் திறன் பற்றி தயாரிப்பாளர் அஸ்கிபுஸ்கி கூறுகையில்,

"அவர்களின் விளம்பரப் படங்களினைப் பார்த்துள்ள நான் ஏற்கனவே ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.( அப்போது எடுத்த மேக்கப் டெஸ்ட் தான் கீழ்க் கண்ட LA..AGAIN புகைப்படம்.)


"ஆனால், உலகப்போட்டிகளில் அவர்களின் நடிப்பு என்னை உருக்கி விட்டது. மிகச்சுலபமான பந்தாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அவுட்டான விதமும் ( இந்த இடத்தில் அஸ்கி கண்ணீர் விட்டு அழுதார்), மேலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அடிக்காமல் விட்ட அவ்வீரமிகு மைந்தர்களின் நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் பதிக்க வேண்டிய ஒன்று " என்று கூறினார்.


அப்போது அவர் வெளியிட்ட சில படங்களின் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு!!மேலும், அமெரிக்காவில் இருந்து ஸரோஜ் நாயுடு சாமி அனுப்பிய ஒரு செய்தி:

புதிய நடிகர்களினைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரியண்ணணும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமா(க்)கியுள்ளாராம்.


அவசரச் செய்தி:

அதிரடி நாயகர்கள் இணந்து மிரட்டும் ஒரு சரித்திரபடமும் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏஜென்சி செய்திகள் சொல்லுகின்றன.


இனி இன்றைய கிசு கிசு:

கொதிப்படைந்த லொல்லு அவர்கள் நான் அவர்களை விட நன்றாக நடிப்பேன் என்று மேக்கப் போட்டுக்கொண்டதாக சில புகைப்படங்களை இன்று ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.