"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, March 27, 2007

தடாலடிப் போட்டி- விமர்ச்சனங்கள்!?

முன்னர் அறிவிக்கப்பட்ட தடாலடிப் போட்டிக்கான உங்கள் விமர்ச்சனங்கள் பின்னுட்டங்கள் இங்கு இப்பதிவில் வரவேற்கப்படுகின்றன. உங்கள் போட்டிக்கான பின்னூட்டங்கள் போட்டிப் பதிவிலேயே இடலாம்.
நன்றி.

7 comments:

Anonymous said...

நாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.

- சென்னையிலிருந்து லக்கிலுக்

கும்மாங்கோ said...

காந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே ?

நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை

ரவிசங்கர் said...

எட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன? இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது? தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் தளர்த்தலாம்

தமிழி said...

ரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வரும் பதிவை போலியல்ல ??!! என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை! ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது!

மேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா! நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்!

கருத்துக்கு நன்றி ரவிசங்கர்.

தமிழி said...

கும்மாங்கோ! உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.
நன்றி.

லக்கிலுக் said...

நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்!

கவிதா|Kavitha said...

காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..

சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)

காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)