"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, March 29, 2007

நடிகர்திலகங்கள்!

O.T.I. செய்தி:

சென்று திரும்புகின்ற நமது விளம்பர நடிகத் திலகங்கள் புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள்.

அவர்கள் நடிப்புத் திறன் பற்றி தயாரிப்பாளர் அஸ்கிபுஸ்கி கூறுகையில்,

"அவர்களின் விளம்பரப் படங்களினைப் பார்த்துள்ள நான் ஏற்கனவே ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.( அப்போது எடுத்த மேக்கப் டெஸ்ட் தான் கீழ்க் கண்ட LA..AGAIN புகைப்படம்.)


"ஆனால், உலகப்போட்டிகளில் அவர்களின் நடிப்பு என்னை உருக்கி விட்டது. மிகச்சுலபமான பந்தாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அவுட்டான விதமும் ( இந்த இடத்தில் அஸ்கி கண்ணீர் விட்டு அழுதார்), மேலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அடிக்காமல் விட்ட அவ்வீரமிகு மைந்தர்களின் நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் பதிக்க வேண்டிய ஒன்று " என்று கூறினார்.


அப்போது அவர் வெளியிட்ட சில படங்களின் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு!!







மேலும், அமெரிக்காவில் இருந்து ஸரோஜ் நாயுடு சாமி அனுப்பிய ஒரு செய்தி:

புதிய நடிகர்களினைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரியண்ணணும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமா(க்)கியுள்ளாராம்.


அவசரச் செய்தி:

அதிரடி நாயகர்கள் இணந்து மிரட்டும் ஒரு சரித்திரபடமும் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏஜென்சி செய்திகள் சொல்லுகின்றன.


இனி இன்றைய கிசு கிசு:

கொதிப்படைந்த லொல்லு அவர்கள் நான் அவர்களை விட நன்றாக நடிப்பேன் என்று மேக்கப் போட்டுக்கொண்டதாக சில புகைப்படங்களை இன்று ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.






Tuesday, March 27, 2007

தடாலடிப் போட்டி- விமர்ச்சனங்கள்!?

முன்னர் அறிவிக்கப்பட்ட தடாலடிப் போட்டிக்கான உங்கள் விமர்ச்சனங்கள் பின்னுட்டங்கள் இங்கு இப்பதிவில் வரவேற்கப்படுகின்றன. உங்கள் போட்டிக்கான பின்னூட்டங்கள் போட்டிப் பதிவிலேயே இடலாம்.
நன்றி.

தடாலடிப் போட்டி!

தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.


பரிசு:
ஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும்.
( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)

போட்டி:

கீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.



விதி முறைகள்:

1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.

2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.

3. நகைச்சுவைப் பதிவாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம்.

4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.

5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.

6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.

7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.

முக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:

போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...
நன்றி.


பதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 2 -ஏப்ரல்,2007.

முடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

10. சிலரின் வேண்டுகோளுக்கிணங்க இப்போட்டிப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமிட இங்கு செல்லவும்.

11. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.

Monday, March 26, 2007

விளையாட்டாப் போச்சு!!

செய்தி:
நான் விளையாடப் போயிருந்தாலே இந்தியா கோப்பையைக் கைப்பற்றியிருக்கும். - லல்லு பிரசாத் யாதவ்.

நம்ம மூத்த பெரியண்ணன் ஜார்ஜ் புஸ் கடுப்பாகி உடனே பாக்- டீமுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

பேசாமல் இவங்களை அனுப்பியிருந்தால் கூட கெலிச்சிருக்குமோ என்னவோ!?



Friday, March 23, 2007

கனவில் சென்னை!

கூவம் சுத்தப்படுத்தப்பட்டு உள் நாட்டுப்போக்குவரத்து துவங்கியது. சாலைகளினோரம் சோலைகள்....
ஒரு மெட்ரோ ரயில்...
ஒரு படகும் பின்னே மேம்பாலமும்...

Tuesday, March 20, 2007

இசை விமர்ச்சனம்!

தம்பி பூனையார் அவர்களின் கருத்துக்களினைப் பாருங்களேன்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பற்றி:


புதுமை இசையமப்பாளார் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பற்றி:


தேனிசைத் தென்றல் தேவா இசைப் பற்றி:
அருமை வாரிசு யுவனின் இசைப் பற்றி:


இது இசை ஞானியின் இசை பற்றி :


இது இவ்வளவு இசைச் சங்கமம் கேட்டவுடன் நடந்த நிகழ்வு:



Tuesday, March 13, 2007

கார்டூன் வன்முறைகள்.


கார்டூன் என்ற வரைபடக்கதை சொல்லும் முக்கிய ஊடக முறை வால்ட் டிஸ்னி
என்ற ஒரு மனிதரால் உலகப் புகழடைந்தது.

இன்றும் நம் மனதின் ஆட்டோகிராப்களாய் உள்ள சில கதாநாயகர்கள் பற்றி லக்கிலுக்கின் விரிவான பதிவைக் கண்டால் உங்களுக்கு நினைவு வரும்.

ஆனால், அன்று ஆர்ச்சியும், ஸ்பைடர் மேன்( இவர் வில்லனாகத் தான் வருவார்), முகமூடி, இரும்புக்கை மாயாவி போன்றவர்களின் அச்சு ஊடக வன்முறை நம்மை ( அதாவது சென்ற தலை முறை இளைஞர்களினை..... 30+ எனபது சரியா இருக்குமா!!?) பெரும்பாலும் பாதிக்கவில்லை.

அவன் கையில் காமிக்ஸ் கிடைச்சாப் போதும் உலகை மறந்திருவான் என்று என் அப்பா பெருமையுடன் பேசக் கண்டிருக்கிறேன்.

தேர்வுகள் முடிவை விட லயன் காமிஸின் கோடைக்காலச் சிறப்பு மலருக்காக காத்திருந்த காலங்கள் அவை.

ஆனால், இன்று மருத்துவர்களும், மனவியல் வல்லுநர்களும் " உடனடியாக குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை தடுத்து நிறுத்துங்கள் " என்று அலறுகிறார்கள்.

ஏன் ! என்று யோசித்த போது நாம் படித்தோம் இத்தலைமுறை பார்க்கிறது என்பதா என்றால், ஒவ்வொரு ஞாயிறும் ஸ்பைடர் மேனும், heman -ம், மிக்கி மெளசும், டொனால்ட் அங்கிளும் நாமும் பார்த்தபிறகே வந்துள்ளோம் இல்லையா!

இதன் தாக்கம் எனக்கும் ஒரு வாரிசு வந்து, அவள் தொலைக்காட்சி பார்த்த வாறே உண்ணும் போது தான் புரிந்தது.

அன்று நமக்கு சோறூட்ட பாட்டிகளும்( ஆத்தா) நிலாவும் இருந்தது.

இன்று பாட்டிகள் ஊரில், நிலா முற்றம் செல்ல மின் தூக்கியில் மொட்டை மாடி செல்ல வேண்டும். எனவே, நமது இல்லத்தரசிகள் மிகச் சுலபமாய் ( என்ன! ஒரு அரை மணி நேரம் தானே என்று !? அதுவும் சீரியல் பார்க்கும் நேரம் போக) சோறூட்ட ஆரம்பித்து இன்றைய தலைமுறையின் வன்முறை முகத்தின் முதலாக்கியிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்ல.


ஆனால், இன்றும் அனைத்துத் தரப்பினரும் ரசித்து பார்க்க வைக்கும் அருமையான கார்டூன் சார்ந்த படங்களும் ( ஸ்டூவர்ட் லிட்டில் போன்ற), மனதினை நெருடச்செய்யும் ( ஈ.டி போன்ற) படங்களும், வியப்பிலாற்றும் வகையில் உள்ளது.

எனது தெரிவுகள்:

லயன்கிங் கார்டூன் படத்தில் வரும் சிம்பா , மும்பா ( Pumbaa,Simba) வரும் ஒரு நிகழ்ச்சி தமிழில் ஒலிமாற்றம் செய்யப் பட்டு வருகிறது. அருமையான நகைச்சுவை வசனங்கள் மற்றும் பொருத்தமான குரல்தேர்வு. அந்த உயிருக்கு உயிரான நண்பர்கள் அடிக்கும் லூட்டி ரசிச்சு சிரிக்கலாம்.

போகோ (pogo) என்ற சேனலின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அருமையிலும் அருமை. அதுவும் குறிப்பாக ஆஸ்வோல்டும்(oswald), நாடியும் ( noddy) மிகவும் அருமை. நல்ல கருத்துகளையும் மிதமான இசையும் அருமையான வண்ணப்படங்களும் கொண்ட இவை இரண்டும் டாப் என்றே நினைக்கிறேன்.


மேற்கூறியவை அளவில் சிறியவை ஆனால், இவையல்லாது பவர் ரேஞ்சர் போன்றவற்றை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்ற பலரின் கோரிக்கை பல நாட்களாகவே கிடப்பில் போடப் பட்டுள்ளது. சில விபத்துகளும் சாவுகளும் நடந்தும் அரசு இதை கவனிக்கவேயில்லை.

குழந்தைகள் வாழ்வினை கட்டணச்சேனலாக்கி, கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாயிருக்கும் சேனல்களினை உடனையாகத் தடை செய்யவேண்டும்.

அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகள் வன்முறைக் கற்றுக்கொள்வதில் விருப்பம் தெரிவிக்கலாம் ! ஆனால் நடுத்தரவர்க்கம் அல்ல!! முக்கியமாய் எங்கள் குழந்தைகளல்ல!

வரும் தலைமுறைகளுக்கு பாட்டிக் கதைகள் இல்லாமல் செய்து விட்ட பெருமை உங்கள் உலகமயமாக்கலும், எங்களினை பொருள் தேடி திரைக்கடலோட வைத்த பொருளாதாராக் கொள்கைகளும் தானே!

அடுத்த தலைமுறைக்கு வன்முறை கற்றுக் கொடுக்காதீர்கள். பின்னர் எங்களைப் போல் விண்ணப்பங்களிட்டு காத்திராது, வாளினை எடுப்பர் என்பதினையும் மறந்து விடாதீர்கள்.

---
இப்பதிவிற்கு தொடர்புடைய இடுகைகள்:
காமிக்ஸ் ரசிகர்களுக்கு! நன்றி லக்கியாரே! நல்ல நினைவூட்டலுக்கு...

Thursday, March 08, 2007

தினம் மகளிர்தினம்!?


பெண் உரிமை பற்றிப் பெரியார் அவர்களின் கருத்து:

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.


" ‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம்.... ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் "



தமிழ் இலக்கியத்தில், ஒரு பெண்ணுக்கு, கற்பு நிலையைப் பேணும் நிலை மூன்றாகச் சொல்லப்படுகின்றது:-

1. கன்னிப்பருவக் காவல்: அதாவது திருமணத்துக்கு முந்திய கன்னிப் பருவத்தில் கன்னிமையைக் காத்தல்.
2. கடியிற் காவல்: அதாவது திருமணமான பின்பு தன் கணவனோடு இல்லறம் நடாத்தும்போது ‘பதிவிரதா தர்மத்தை’ப் பேணுதல். இது மனையறம் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
3. கைம்மைக் காவல்: தனது கணவன் இறந்தபிறகு, அவனது நினைவாக நோன்பு நோற்று, தன் மனத்தையும், உடலையும் காத்தல். இது ‘மாதவம்’ என்று அழைக்கப் படுகின்றது, போற்றப் படுகின்றது.

திருக்குற்றாலப்புராணம் பெண்கள் கற்புக்கரசிகளாக விளங்குவதற்கு 12 செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அவை:
1. சிறுகாலை எழுதல்.
2. உடன் சமையல்கட்டிற் புகுதல்.
3. நன்றாக கூட்டிச் சமைத்தல்.
4. சுவை குன்றாது அதனைப் பரிமாறுதல்.
5. வீட்டைத் திருத்துதல்.
6. வருந்தும் காலத்திலும் விருந்து உபசரித்தல்.
7. குழந்தைகளைப் பெறுதல்.
8. பெறும்போது இன்புறுதல்.
9. அச்சம், மடம், நாணம் உடையவளாக இருத்தல்.
10. கணவன் உறங்கிய பின் உறங்குதல்.
11. அவன் எழுவதற்கு முன் எழுதல்.
12. காலை எழும்போது அவனைத் தொழுது எழுதல்.

இவ்வாறெல்லாம் வாழ இயலுமா! இதை கலாச்சாரம், பண்பாடு என்று கற்ற அறிவு சொன்னாலும் சகோதிரியாய் , தாயாய், மகளாய் அனைத்துமான தோழியாய் பெண்ணைப் பார்க்கும் போது, ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வளவு கட்டுக்கோப்பு! என்றே எண்ணத்தோன்றுகிறது.



என்னைப் பொருத்தவரை பெண்ணிய வளர்ச்சிகள்:
கைம்பெண்கள் எனப்படும் கணவன் இறந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வாழ்க்கை வேதனைகள் இன்று குறைக்கப் பட்டுள்ளது. அதற்கு சமுதாயம் மட்டுமே காரணம் அல்ல. அப்பெண்கள் தீரத்துடன் போராட எடுத்துக்கொண்ட வலிவு தான் காரணம்.

தாயே ஆனாலும், நல்ல காரியம் என்று வெளியே போகும்போது, அவள் விதவையாயிருந்தால் எதிரே வரக்கூடாது !என்ற மூடநம்பிக்கை வரையறையெல்லாம் தூக்கியெறியப்பட்டன.

இளம் வயது திருமணம், பெண் கல்வி போன்றவை சில (10-20) ஆண்டுகளில் தான் மாறியுள்ளது. இன்னும் வளர்ச்சி வேண்டும்.

இன்று தொழில்நுட்ப பூங்காக்களின் செல்லப் பிள்ளைகள் பெண்களே !!

கடைசியாக,
பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமை என்றெல்லாம் பேசி நேரம் கழித்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று பெரும்பாலும் இல்லை. ஏனெனில் அவர்கள் செயலில் காட்டத் துவங்கி விட்டனர்.

ஆனால், இது போதுமா! இல்லையா! என்பது பெண்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விடயம்.



Saturday, March 03, 2007

கப் கண்ணா கப்!





சென்ற உலகக் கோப்பையய் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திர முடியாது.
உலகின் பல பகுதியில் வாழும் இந்தியரையும், இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையில் வாழும் சகோதர சகோதரிகளையும் இணைக்கும் அதாவது மகிழ்ச்சியுடன் கை உயர்த்திப் பாராட்டும் ஒரே விடயம் இப்போதைக்கு அப்துல்கலாமும் அதற்கடுத்து கிரிக்கெட்டும் என்றால் மிகையாகாது.

அதுவும் பாகிஸ்தானும் இந்தியாவும் களத்தில் உள்ள போது இரு படைகளின் மோதலை காண்பது போல் அனைவருக்கும் ஒரு எண்ணம்.

ஆகவே, நமது படை வீரர்கள் தாம் இவர்கள் என்று எண்ணுமளவிற்கு மாறிப் போன நமது கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்கள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டங்களில் மாட்டாது கோப்பையை வென்றெடுத்து வருவார்கள் என்பது ஒவ்வொரு ரசிகரின் இந்தியரின் வேண்டுதல்.


மேலும் விவரமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.



கடைசியாக ஒன்றுங்க! சென்ற முறை மாதிரி "come on india come on! " என்று சொல்ல வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். பின்னே! போன தடவை அப்படித்தான் நம் வீரர்கள் மக்கள் ஆசையாக கூப்பிடறாங்கன்னு கிளம்பிவந்துடாங்களாம்.
:)
அப்புறம்,கொஞ்சம் கார்டூன்கள்.















Friday, March 02, 2007

எல்லோரும் நல்லாயிருக்கனும்!?




ஆனந்தன்: "மத்த கட்சி வழி எல்லாம் தப்புன்னா! இந்த நாட்டை உங்க கிட்ட கொடுத்து,நீங்க தான் ராஜா! மந்திரி! நீ தான்அரசியல்வாதி ! நீங்க தான் ஆட்சி செய்யனும்னு வந்தால் என்ன செய்வீங்க!?"

தமிழ்ச்செல்வம் : "நாங்க இன்னும் அரசியல் கட்சி தொடங்கல! தொடங்கின பிறகு கேளு..!!அதுவரைக்கும் காத்திரு!"

ஆனந்தன்: "நிஜமாகவே செங்கோல் கொடுத்து ஆளுன்னு சொன்னால், நீங்க என்ன செய்வீங்க?!"

தமிழ்ச்செல்வம் : "எல்லாத்தையும் மாத்துவோம்!"

ஆனந்தன்: "என்னத்த!!??"

தமிழ்ச்செல்வம் : "முதலில் அரசியலில் யார் வரனும்னு ஒளிவு மறைவில்லாம இருக்கனும்!பணக்காரன் வரக்கூடாது! வெள்ளைக்காரனும், பணக்காரனும் ஆட்சி செய்து ஏழைகள் வாழ்ந்தது போதும்!! "

ஆனந்தன்: "பணக்காரனை வெளியில் துரத்தினால் போதுமா!?"

தமிழ்ச்செல்வம் : "சாதி! கீழ்சாதின்னு தொடாமல் அடிமை மாதிரி இருந்தவங்க இனிமந்திரி சபைக்கு வரனும் !!முதலாளித்துவம் ஒழியனும்! அரசியல்வாதிகள் போலீஸ்காரனை கைத்தடியா நடத்தறது நிறுத்தனும்! ஊழல்!! ஒரு துளியும் கூடாது!! அதிகாரம், ஆட்சி அதிகாரம் என்பது ஆய்தமில்லை!

ஆனந்தன்: "வறுமை ஒழியனும்! இல்லாமை ஒழியனும்! சாப்பாடு இல்லாம யாரும் இருக்கக் கூடாது! எல்லோரும் நல்லா இருக்கணும்!! எல்லோரும் நல்லா இருக்கணும்!! "








புரியாதவர்களுக்கு ஒரு சிறு கதைச் சுருக்கம்:

திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்) இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும்,நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர். எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடிபடுத்திக்கொள்கின்றாரிவரத் தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார். இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும்,ஆன்ந்தும் பகைவர்களாகின்றனர். இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார். இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார். இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்க முடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.

[தொகு]விருதுகள்
1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா)வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ்வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன

படத்தை மீண்டும் பார்க்க விரும்புவர் இங்கே சொடுக்கவும்.