வேற்றுமையில் ஒற்றுமை!
லண்டன் மாதிரி அழகான பசுமையான நகரை நான் எங்கும் பார்த்ததில்லை !என்று சொன்னார்- பெருநகரவளர்ச்சித் திட்டத்திற்க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கோப்பில் கையோப்பமிட்டவாறே!- எங்கள் பிரதமர்.
சட்ட ஒழுங்கு மிக நன்றாக உள்ளது!தீவிரவாதிகளை வேரோடு அழித்துவிட்டோம் என்றார்-குண்டு துளைக்காத காரில் வந்திறங்கி ஐந்தடுக்குப் பாதுக்காப்பின் கீழிருக்கும்-எங்கள் உள்துறை மந்திரி.
பணவீக்கமும்,நிதி நிலைமை சீராக உள்ளது என்றார்- உலகவங்கியிடம் மேலும் ஈராயிரம் கோடி கடன் கேட்கும் கோப்பில் பார்வையிட்டபடி-எங்கள் நிதி மந்திரி.
எப்படித்தான் இங்க வாழுறாங்களோ! முட்டாள் ஜனங்கள்! என்று சொன்னார்- அரசு உதவி பெற்று படித்து அமெரிக்காவில் வசிக்கும்- எங்கள் என்.ஆர்.ஐ.
வெள்ளைக்காரன் மாதிரி ஆள இவங்களுக்கெல்லாம் தெரியல என்று சொன்னார்- தியாகிப் பென்சன் பாரத்தில் கைநாட்டு இட்டவாறே- எங்கள் முன்னாள் போராட்ட வீரர்கள்.
பொதுச்சேவை என்பது என் தந்தை தந்த வழிகாட்டுதல் என்று சொன்னார்- புதுசாய் ஆரம்பித்த சுனாமி டிரெஸ்டின் மூலம் மெம்பருக்கு பத்துக் கோடி டாலர் என்று அறிந்த- எங்கள் முதலாளி வர்க்கம்.
நல்ல தலைவன் இல்லாங்காட்டி நாம் முன்னேற முடியாது என்று சொன்னார்- கவுன்சிலர் தேர்தலுக்கு ஓட்டுப் போட கணிசமாக கிடைத்த பணத்தை எண்ணியவாறே- எங்கள் அடித்தட்டு வர்க்கம்.
லஞ்சம் இந்த நாட்டினை விட்டே ஓடவேண்டும் என்று சொன்னார்- தம்பி! போக்கிரி பால்கனி டிக்கெட் ரெண்டு கொடு என்றபடி-எங்கள் மத்திய வர்க்கம்.
நாங்கள் எல்லோரும் இந்தியர்கள் தான்! இதில் உங்களுக்கென்ன சந்தேகம் !?
1 comment:
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அனானிகளின் ஆட்டம் கண்டிக்கத்தக்கது என்றார் அவர் - அனானியாளர் சங்கத்தலைமயாயிருக்கிறது ரொம்ப கஷ்டம் என்றபடி- எங்கள் பிரபல வலைபூப்பதிவர்
அப்படியே இதையும்..
:)))
நன்றி.
அந்த வலைப்பூ தலைவரின்
தலைமை ரசிகர் மன்றம்.
4, விவேகானந்தர் குறுக்குச்சந்து,
துபாய் மெயின் ரோடு.,துபாய்.
Post a Comment