"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, February 05, 2007

இன்னும் சில மணித்துளிகளில்..!

இன்னும் சிலமணித்துளிகளே உள்ளது..


சற்றுமுன் வந்த செய்தி:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காக பெங்களுர் வாழ் தமிழக மென்பொருள் வல்லுநர்கள் அறையை/வீட்டை விட்டு வெளியேறாது காத்திருக்கின்றனர்கள்.

(விரிவான செய்திகள் இங்கே! )

இந்த கேவலமான வேற்றுமையில் ஒற்றுமை இன்னும் எத்தனை நாளைக்கு நம் அருமையான தானைத் தலைவர்களுக்குச் சோறிடுமோ தெரியவில்லை....
இந்தியா என்ற அமைப்பு எதைச் சார்ந்து உள்ளதென்று கேள்விக்குறியாகி நிற்கிறது.
ஒரு மாநில நக்சலைட்டுகள் "வெளி மாநிலத்தாரே! வெளியேறு! " என்கின்றனர்.

நமது அருமை அன்புக் கேரளம் " இடம் தான் உனது! தண்ணீர் எனது" என்கிறது.

ஆந்திரா "ஆறு அது ஆழமில்லை! எனவே சிறுஅணைதான் கட்டுகிறோம் " என்கிறது.

தமிழா! உனக்கு எங்கு சென்றாலும் உதைதான்!!??

ஆனாலும், பயப்படாதீர்! அண்டை மாநில மற்றும் நாட்டு மக்களே! நாங்கள் வந்தாரை வாழத் தான் வைப்போம் !எங்கள் வாழ்வை தந்தாவது !!
"முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள், இவள்
செப்பு மொழி
பதினெட்டுடையாள்,எனில்
சிந்தை ஒன்றுடையாள்! .."


பாரதியே! இப்போது முப்பது கோடியும் இல்லை! நாங்கள் மொய்ம்புற ஒன்றாகவுமில்லை....!!

வாழ்க பாரதம்! வாழ்க வளமுடன்!


பின்குறிப்பு:
இப்பதிவிற்கு தொடர்புள்ள இடுகைகள்:
காவேரி பெண்ணே வா வா! - கோவி.கண்ணன்

2/3 ? 3/4 ? - இட்லிவடை.

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்-மோகன்தாஸ்

இமாலயத் திட்டங்கள் -திண்ணையில் சி. ஜெயபாரதன்.

9 comments:

கோவி.கண்ணன் said...

நான் காவேரிக்கும், தீர்ப்புக்கும் வரவேற்பு கொடுத்துவிட்டேன்

தமிழி said...

//கோவி.கண்ணன் said...
நான் காவேரிக்கும், தீர்ப்புக்கும் வரவேற்பு கொடுத்துவிட்டேன்
//


வருவாய் வாழி காவேரி! என்று எப்போதோ வரேவேற்றும் வரவில்லை!

எப்போதாவது வருணபகவான் வம்படியாக அனுப்பிவித்தால் தான் உண்டு போலிருக்கிறது..

அவள் வருவாளா! என்று பாடலாமா!
:)

sreesharan said...

தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமைந்தால் இரண்டு விசயங்களுக்கு நாம் கவலைப்பட வேண்டியிருக்கும்
1. தமிழர்களுக்கு எதிரான வன்முறை
2. தீர்ப்பை கர்நாடக அரசு எந்த அளவிற்கு நிறைவேற்ற முன்வரும்.

அருண்மொழி said...

ஜெய் ஹிந்த்.

தமிழி said...

ஏற்கனவே, வந்த உச்சநீதிமன்றம் வழி நடத்தும் இடைக்கால நடுவர் மன்றத் தீர்ப்பு என்னவாயிற்று!!? என்பதனை அனவரும் அறிவரே!

நம் அரசியல்வாதிகளுக்கும் நீதிமான்களுக்கும் " நீயா! நானா! " என்ற போரில் மாட்டியது எளிய மக்கள் மட்டுமே!

நம்புவோம் இம்முறை நடுவண் அரசும், அக்கூட்டணியிலுள்ள நமது முதல்வர் அவர்களும் பெற்றுத்தருவார்களென...

இவ்வாய்ப்பையும் விட்டுவிட்டால், நமது பேரன் பேத்திகளும் இது போன்ற பதிவுகளை எழுதிடுவார் என்றே எண்ணத்தோன்றுகிறது....

We The People said...

அங்க பிரச்சனையை தூண்டிவிடுவது மக்கள் இல்லை சாமி, அந்த அந்த மாநிலத்தில் ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகள் தான்! இப்படி எதாவது செய்யலைன்னா அவர்களால் ஓட்டுக்கு பிச்சை எடுக்கப்போகமுடியாது!

//ஒரு மாநில நக்சலைட்டுகள் "வெளி மாநிலத்தாரே! வெளியேறு! " என்கின்றனர்.//

ஐயோ உங்களுக்கு தெரியாதா அங்க நடக்கறது சுதந்திர போராட்டம்!!!

:))))))

தமிழி said...

//அங்க பிரச்சனையை தூண்டிவிடுவது மக்கள் இல்லை சாமி, அந்த அந்த மாநிலத்தில் ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகள் தான்! இப்படி எதாவது செய்யலைன்னா அவர்களால் ஓட்டுக்கு பிச்சை எடுக்கப்போகமுடியாது!

//ஒரு மாநில நக்சலைட்டுகள் "வெளி மாநிலத்தாரே! வெளியேறு! " என்கின்றனர்.//

ஐயோ உங்களுக்கு தெரியாதா அங்க நடக்கறது சுதந்திர போராட்டம்!!!

:)))))) ///

வெள்ளையனிடமிருந்து பெற்று விட்டோம்! அரசியல் கொள்ளையினமிருந்து??

" என்று தணியும் எங்கள் மாநில சுதந்திரத்தாகம்!
என்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே!

நாடோடிமன்னன் said...

உதை என்னவோ நிச்சயம். வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால் விவசாயிகளின் தண்ணீர் தேவைக்காக கம்ப்யூட்டர் இஞ்சினியர்கள் உதை வாங்க போவதுதான்.

இது நாடா இல்லே வெறும் காடா? இதை கேட்க யாரும் இல்லை தோழா..!

செயபால் said...

சிறீலங்காவில் போலிசும், ஆமியும் குண்டர்களுடன் சேர்ந்தே அடித்ததால் தமிழர் ஒன்றும் செய்ய முடியாமல் அடி வாங்கினர். ஆனால் சட்ட்ம் ஒழுங்கு எல்லாம் சரியாக இருக்கும் இந்தியாவில் ஏன் தமிழர் அடி வாங்க வேண்டும். என்ன உலகமையா இது?
போலீசு என்ன செய்யப் போகிறது?
அது சரி, விரும்பியே அடி வாங்கத் தயாராக இருப்பது போல் தெரிகிறது. பிறகென்ன சொல்ல.
பாரதியே நீ செத்து விட்டது நல்லது ஐயா.