"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, February 08, 2007

தமிழன் எப்போதும் இளைத்தவனல்ல!!


காவிரி என்ற ஒரு நதியை மட்டுமல்ல, அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்! என்ற கருத்தை வெறும் பேச்சாக மட்டுமே கொள்ளாமல், நடைமுறைப்படுத்தும் கட்சிக்கு அல்லது அமைப்பிற்கு , எமது விவசாயத் தோழர்கள் மற்றும் தமிழர்கள் சாகும் வரை நன்றியோடிருப்பார்கள்.

ஆங்கிலயேன் வந்து ஒற்றுமைப் படுத்தியிருக்கலாம் இப்பொழுதுள்ள இந்தியாவை. ஆனால், சிந்து நதி சார்ந்த ஒரு இந்து நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விட்டது. இன சண்டைகளால் கூறு போடப்படும் இந்தியா,ஆரம்பம் முதலே சிலரால் ஆரிய, திராவிட சண்டைகள் உருவாக்கப்பட்டு, அருமையான நாகரீகத்தை அழிக்கப்பட்டது.

மணல் மேட்டினை மட்டுமே அறிந்த ஒரு கூட்டம் வளமையான நதியும் அது சார்ந்த ஒரு இனமும் கண்டு "ஆகா!" என்று வந்திறங்கியது. முட்டாள் சனங்கள் நிறைந்த நாடு என்று மெதுவாய் மதம் மாற்ற ஒரு கூட்டம் கடல் வழி வந்தது. ஆரியர் தவிர யாரும் இங்கு தங்க வரவில்லை!! மாறாக எடுத்துச் செல்லவே வந்தார்கள். கஜினிமுகம்மது 17 முறை படையெடுத்து 18 வது முறை வென்றான் என்று நமது அருமை கல்வியாளர் சிலர் சொல்லி வந்தனர். வரலாற்றின் சில மறைக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்தால் தான் தெரியும், அவன் 17 முறை கொள்ளையடிக்கத்தான் வந்தான் என்று..!!


வாழ்வியலுக்கான நகர்வு என்பது மனித இனம் மட்டுமல்ல...!! எல்லா உயிருக்கும் பொதுதான். இப்போது, நம்மில் சில தமிழர்கள் தம் வாழ்வு
முன்னேற்றத்திற்காக, நல்ல சம்பளம் கிடைக்கிறது!! நல்ல சுகாதாரமான காற்று, நல்ல இரவு விடுதிகள், நல்ல தரமான வாழ்வு என்று தான் பெங்களூர் தொழில் நுட்ப பூங்காவினில் சிறைப்பட்டு(ஆம் சிறைதான்) வருகின்றனர்.

பெங்களூரு தரும் தொழில் நுட்ப பூங்காக்கள் தரும் வசதிகள் இன்று சென்னையில் எந்த வகையிலும் குறைவாக தருவதில்லை. சம்பளமும் தான்.


வரவேண்டியது தானே தாய்நாட்டுக்கு!!(ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும் போல)


ஆனால், கிட்டத்தட்ட தமிழரில் மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டில் ஒரு பங்கு தமிழர்கள் நம்பியிருப்பது காவிரிப் பாசனத்தைத் தான். ஆனால், எங்கள் தலைவர்கள் கர்நாடகத்தில் வாழும் ஒரு சிறுபான்மை தமிழர் இனத்திற்க்காக மட்டுமே தான் பேசவேண்டுமா!?


சூப்பர் ஸ்டார் கூட அருமையாச் சொன்னார்(!?) சென்ற காவிரி பங்கெடுப்பு பிரச்சனையின் போது, " அங்கே! தமிழர்கள் இருப்பதை மறந்து விடக் கூடாதென்று !? " ...கூடவே! உண்ணா விரதம் வேறு..! நதிஇணைப்பு என்பது இந்தியாவில் நடக்காது என்ற நம்பிக்கையில், "ஒரு கோடி தரேன் என்று வேறு சொன்னார்..!! அதையும் கேட்டு நாங்கள் கையை மட்டுமே தட்டினோம்!!??

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில், ஒரு பங்கேற்பாளர் சொன்னார். " அரசியல் தலைவர்களே! நாட்டின் இறையாண்மை சார்ந்த பிரச்சனை இது! உடனே! இதை தீர்த்து வைக்காவிடில் மீண்டும் மாநிலங்கள் நாடுகளாகும் ! இந்தியா என்பது இல்லாமல் போகும்" என்றார்.

பாகிஸ்தானுடன் சிந்து நதியை பங்கிடத் தெரிந்த இந்திய அரசாங்கம், தன் நாட்டு மாநிலங்கிடையே உள்ள உறவுகளைப் பலப்படுத்த ஏன் முயற்சிக்க
வில்லை! இந்தியர் என்ற எண்ணமே இவ்விரு நூற்றாண்டுகள் தாமே! என்ற அலட்சியமா! இல்லை! இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்பிரச்சனையில் குளிர் காயப்போகிறீரார்களோ தெரியவில்லை!!

கன்னடியரே! விட்டுக்கொடுத்தே!? வாழப் பயின்ற தமிழன் ஒன்றும் செய்து விட மாட்டான் என்று தானே ஆடுகிறீர்கள்! கர்நாடக மக்களே! உங்களவரை எங்கள் தலைவியாகவும், சூப்பர்ஸ்டாராகவும் தான் நாங்கள் ஆக்கியிருக்கிறோம்! பெங்களூர் உங்களுடையதாக இருக்கலாம்! அதை விண் உச்சிக்கு கொண்டு சென்ற தொழில் நுட்ப வல்லுநரும், தொழில் மேதைகளும் எம்மவர்! நினைவில் கொள்ளுங்கள்! மைசூரின் கரும்பின் வளமை உருவாக்கப்பட்ட வரலாறு தெரியுமா!


நாங்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால், உலகிற்கு வீரத்தை போதிக்கும் அளவிற்கு வரலாறு கொண்டவர்கள்.

இந்தியா என்ற போது வரும் வீர உணர்வு தமிழனுக்கு மிக அதிகம் , பாரதியால் தேசப் பற்று ஊட்டப் பட்டவர்கள் நாங்கள். இன்றோ,தேசம் என்பதே விரைவில் கேள்விக்குறி ஆகிவிடும் என அஞ்சும் நிலைக்குத் தமிழனை தள்ளிக் கொண்டிருக்கின்றனர் அண்டை மாநிலத்தினர்.

கடைசியாக,அரசியல் பேச நான் விரும்ப வில்லை! என்னிடம் புள்ளிவிவர ஆதாரங்களில்லை! ஆனால், நான் சார்ந்த, என் மொழி சார்ந்த ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது, மன்னிக்கவும் நண்பர்களே!! நாங்கள் எங்கள் குரலை உரத்துத் தான் சொல்ல வேண்டியுள்ளது!!!
******


இவ்விடுகைக்கு தொடர்புடைய இடுகைகள்!

நோ கமெண்ட்ஸ் - இட்லிவடை


ஓடி வருமா காவேரி? -த‌மிழ்ம‌ண‌ விவாத‌க்க‌ள‌ம்.

காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள் - ஜடாயு

6 comments:

லக்கிலுக் said...

//ஆங்கிலயேன் வந்து ஒற்றுமைப் படுத்தியிருக்கலாம் இப்பொழுதுள்ள இந்தியாவை. ஆனால், சிந்து நதி சார்ந்த ஒரு இந்து நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விட்டது. //

முரண்படுகிறேன் நண்பரே. ஜடாவு பதிவினைப் பார்த்த பாதிப்பில் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஸிந்து என்ற நதியினால் தான் உங்கள் மதத்துக்கு ஹிந்து என்று பெயர் வந்தது. ஸிந்து சமவெளியில் இருந்த நாகரீகம் திராவிட நாகரிகம். திராவிடனுக்கு அப்போதும் மதமும் இல்லை. "மதமும்" பிடிக்கவில்லை.

தமிழி said...

இருக்க்கட்ட்டும் லக்கியாரே!

யாருக்கு வேண்டும் அந்த ஆரிய திராவிடச் சண்டைகள் ! சமய மத வம்புகள்....!!

எல்லோருக்கும் உள்ளே ஒரு மரண பயமிருக்கிறது அது தான் கடவுள். அது தான் மனசாட்சி..! இதற்கு சமீப உதாரணம் ஒரு மிகப்பெரிய நாத்தீகர் செய்த ஆத்தீகம்...!! :)

விடுங்க....அப்புறம் நான் சைவ மதம்! வைணவ மதம்! என்றெல்லாம்சொல்லுவேன்!!..அப்புறம், நீங்க சாமி இல்ல...பூதம் இல்ல !! அப்பிடீன்னு ஆரம்பிப்பீங்க!

சரி ! விடுங்க அதை...! நான் சொல்ல வந்த முக்கிய விடயத்தை (*இப்பதிவில்) பற்றி என்ன நினைக்கிறீர்கள்..

Anonymous said...

எங்கள் உயிர் முக்கியமில்லையா உங்களுக்கு நண்பரே?

-கர்நாடகத் தமிழன் .

தமிழி said...

//எங்கள் உயிர் முக்கியமில்லையா உங்களுக்கு நண்பரே?

-கர்நாடகத் தமிழன் . //

அனானியாய் வந்த தமிழரே!
தமிழர் எங்கிருந்தாலும் அவர்தம் வாழ்நலன் பற்றிய அன்பும் ஆதரவும் என்றும் தமிழகத்திலுண்டு..!!
ஆனால், ஒரு தவறான தீர்ப்பு தமிழக எதிர்காலத்தினையே பாதிக்கும் என்பதறிந்தும் பேசாமலிருக்க எப்படி முடியும்...

இந்த அரசியல் வாதிகள் இந்த கடைசி வாய்ப்பையாவது பயன்படுத்துமா! இல்லை இன்னும் ஒரு தலைமுறைக்கு இப்பிரச்சனையை எடுத்துச் செல்லுமா! தெரியவில்லை!

:(

Anonymous said...

எங்களை பலியிட/சென்னைக்கு அழைக்க நீங்க யார்?. உயரே, உயரே பரந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது....இன்றும் சென்னையில் உள்ள மெஜாரிடி சாப்ட்வேர் கம்பனிகளின் தலைமையகம் பெங்களூர்தான் (காக்னிஸண்ட் மட்டுமே சென்னை தலைமையகம்).

உங்களுக்கு நீர் வேண்டுமென்றால் அதனை மட்டும் கேளுங்கள். உங்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மத்தியிலும், தங்களது மாநிலத்திலும்.
இவ்வளவு வியாக்கியானமா எழுதும் நீங்கள் ஏன் தமிழக அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் சொல்லி நதிகளை தேசியமயமாக்க கூடாது?. இதற்கு ஒரு இயக்கம் தொடங்கலாமே. திரு. அவர்கள் ஈழ தமிழர்களூக்காக செய்ததுபோல?.

தமிழி said...

//எங்களை பலியிட/சென்னைக்கு அழைக்க நீங்க யார்?.//

ஐயா! நீங்கள் சென்னைக்கு வந்தால் என்ன! வராவிட்டால் என்ன!
நான் சொன்னது கர்நாடகம் விட்டால் தகவல் தொழில் நுட்பத்திற்கு வாழ்வில்லை என்கிறார் சில பதிவர்கள்..காவிரி பற்றி பேசாதீங்க என்றும் சொன்னார்கள்.
அவர்களுக்குத் தான் அப்பதில்...!

மேலும் சென்னையில் தொழில்நுட்ப பூங்கா வளர்ச்சி பற்றி உங்களுக்கு மார்கெட்டிங் செய்ய எனக்குத் தேவையில்லை. வெறும் சம்பளத்திற்காகத் தான் அங்கிருக்கிறோம் என்று சொல்லித் திரிபவர்களுக்குத் தான் அப்பதில்...!!

//உயரே, உயரே பரந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது....//

என்னை குருவி என்கிறீரா! இல்லை எமது தமிழகத்தையா! இரண்டுமே தவறு..

என்னை யார் என்று உமக்குத் தெரியாது...
சென்னை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை எனில் உங்களுக்கு என் பதிவு தேவையற்றது..

//நீங்கள் ஏன் தமிழக அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் சொல்லி நதிகளை தேசியமயமாக்க கூடாது?. இதற்கு ஒரு இயக்கம் தொடங்கலாமே. திரு. அவர்கள் ஈழ தமிழர்களூக்காக செய்ததுபோல?. //

நீங்கள் சொன்னது போன்ற அமைப்புகள் ஏரளாம்..ஆனால் அரசியல் சித்து விளையாட்டால் வாடும் தமிழக மக்களூள் நானும் ஒருவன்..
சந்தர்ப்பம் வரும் போது ஆவண் செய்வோம். உங்கள் அறிவுரைக்கு நன்றி,,

கடைசியாக,,,திரு பற்றி அறிந்த நீங்கள் நிச்சயமாக ஒரு வலைப்பதிவராகவே இருக்கவேண்டும்.

ஏன் இப்படி அனானியாக ஒளிந்து வருகிறீர்கள்..

என்ன பயமோ!உங்கள் போன்ற அறிவாளிகள் பயப்படக்கூடாதே!

இல்லை சிலர் போல் வேசம் கலைந்து விடுமோ என்ற பயமோ!