சில பழைய டைரி கவிதைகள்
பல காலம் கடந்து, பல பருவங்கள் கடந்து, பல அனுபவங்கள் பெற்றாலும், பழைய நாட்குறிப்பில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியவைகளைப் பார்க்கும் போது மனசு லேசாகிறது.(படிக்கிறவங்களுக்கு கனமாகிறதோ?? )
ஒரு நினைவூட்டல் தான். என் கிறுக்கல்களிலிருந்து சில உங்கள் பார்வைக்கு...
*உன் பார்வைக்காக தவமிருந்ததால்புதிய கண்ணீரோ!-பூவின் மீது பனித்துளிகள்.
************************************************************************
*காத்திருக்கிறேன்!
என்னை மணம் புரிபவளுக்கல்ல? என் மனம் அறிபவளுக்கு!
காத்திருக்கிறேன்!
என் மார்பளவு உயர்ந்தவளுக்கல்ல? என் மனதைக் கொஞ்சம் நிரப்புவளுக்கு!
காத்திருக்கிறேன்!
வெண்சிவப்பு தோலுக்கல்ல! வெண்ணிற மனதாளுக்கு!
காத்திருக்கிறேன்!
மான் போல் துள்ளுபவளுக்கல்ல! தன்னைப்போல் என்னை நினைப்பவளுக்கு!
காத்திருக்கிறேன்!
கானம் பாடும் வானம்பாடிக்கல்ல! வானம் பார்த்து வசப்படுபவளுக்கு!
***********************************************************************************
* தென்றல் எனக்கே! எனக்கு!! என்று, அசையும் மலர் நினைக்கலாகுமா ?
***********************************************************************************
*கொடியேற்றப்பட்டது சினிமாத்திரையில்,கைதட்டினார்கள் - சுதந்திர தினவிழாவிற்கு கட்டடித்த மாணவர்கள்.
***********************************************************************************
*பல போதனைகள் சோதனையின்றி பிணமாக - புத்தகக் கல்லறையில்.
***********************************************************************************
* மேகத்தை உற்றுப் பார்த்தேன் - கவிஞன் என்றனர்!.
சிற்பத்தை உற்றுப் பார்த்தேன் - ரசிகன் என்றனர்!
சமூகத்தை உற்றுப் பார்த்தேன் - கலைஞன் என்றனர்!
வானத்தை உற்றுப் பார்த்தேன் - சித்தன் என்றனர்!
பெண்ணை உற்றுப் பார்த்தேன் - பித்தன் என்றனரே!?
***********************************************************************************
* இதயத்தில் ஓட்டையாம் மருத்துவர் சொன்னார்- நான் சொன்னேன்!? அது அவள் என்னை விட்டுச்சென்ற சிறப்பு வழி?
***********************************************************************************
* அடிப்பேன் என்று அப்பன் சொன்னதும் என்னை அண்ணன் என்றாயே!
அடியே! அடியின் உதவி அவ்வளவா!!?
தெரிந்திருந்தால் நானும்!!??
***********************************************************************************
*தொலைவிலிருந்து இயக்கும் விஞ்ஞானம் புரியவில்லை!- உன்னைப் பார்க்கும் வரை!!
***********************************************************************************
* நீ தோழியிடம் சொன்னது கேட்டது எனக்கு!!
" அவன் முட்டாள்டீ" - பின்னே! ஏன் உன்னைப் போய்!?
***********************************************************************************
படித்தீர்களா! நன்றி! ---------!
4 comments:
ரசனைக்குரிய கவிதைகள் சசி..
கலக்கல்..!!!!!!!!!! பழைய நியாபகம் வந்து துக்கம் தொண்டையை அடைக்கிறது....
// தேவ் | Dev said...
ரசனைக்குரிய கவிதைகள் சசி.. //
நன்றி! தேவ்!
அது சரி சசி???? என்னங்க அது சசி
//செந்தழல் ரவி said...
கலக்கல்..!!!!!!!!!! பழைய நியாபகம் வந்து துக்கம் தொண்டையை அடைக்கிறது....//
வர.. வர.. பின்னூட்டங்கள்... கிண்டலா! இல்லை பாரட்டான்னே தெரிய தனியா ஒரு மூளைத் தேவைப் படுகிறது!
பாராட்டாகவே எடுத்துக்கொண்டு ....நன்றி..!ரவி..!
Post a Comment