பொங்கலோ பொங்கல்!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
நீங்கள் பண்பட்டு, பண்பாடு காத்து , மேலும் பலச்சிறப்புகள் அடைய உள்ளார்ந்த வாழ்த்துகள்..!!
இப்பதிவில் நிறையப் புகைப்படங்கள் (வலையிலிருந்துப் பெறப்பட்டது ) இருக்கின்றன என விரைவாய் முடித்துவிடாது, நிதானமாய் ஒருமுறையாவது பாருங்களேன்..
நம்மில் எத்தனை( அநேகமாய் அனைவரும்) பேருக்கு இப்படி இது போன்ற ஒரு பொங்கல் மீண்டும் கொண்டாட முடியுமோ??
நமக்குத் தான் உலக சின்னத்திரை வரலாற்றிலேயே முதன்முறையாக காட்டப்படும் படங்களும், "பொங்கள் ஷாப்பிடுவது யெப்படி?" என்ற சிறந்த பேட்டிகளும் காத்திருக்கிறதே.!!
பின்குறிப்பு:
"பொங்கல் செய்வது எப்படி?" என்று யாராவது விரைவில் விரிவாக எழுதுவார்கள் என்று நம்புவோமாக!
ஆயினும் என் பங்குக்கு பின்வரும் ஒரு சிறு செய்தி...
"அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என இரு வகைப்படும். வெண் பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது.
உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால், பொங்கல் என்பதை ஆகுபெயராகவும் கருதலாம்."
மீண்டும் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பொங்கலோ!! பொங்கல்..!!!!!
4 comments:
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
i am aasath
i hasn't object this culturally oriended functions.
But what is the reality of the status of Farmers? Are they happy?
After the Mansando and Kargil co. became enter into indian agriculture (ie, Globalization after 90s), they have suffered by their cultivation.
Don't remember the small happyness. We need the whole judgement which is against MNC seed cos and Castism of the I"ndian Feudal Lords ...
நன்றி சுந்தர்.
//After the Mansando and Kargil co. became enter into indian agriculture (ie, Globalization after 90s), they have suffered by their cultivation.
Don't remember the small happyness. We need the whole judgement which is against MNC seed cos and Castism of the I"ndian Feudal Lords ..//
உண்மை தான் ஆசாத் அவர்களே!
ஆனால்., அப்படி எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்கு தான் ஒரு சிறு நினைவு கூறலாக இப்பதிவு.
விவசாயம் என்பது இந்தியர் தம் பண்பாடு கலந்த பாரம்பர்யமிக்க தொழில் என்பது போய்...விவசாயிகள் ஓட்டு வங்கிகள் என நம் அரசியல்வாதிகள் முடிவு கட்டி விட்டார்கள். ஒரு தனி இனம் போல் அவர்களைப் பாவிக்கின்றனர்.
பசுமைப்புரட்சி என்று கூவும் அறிவியல் சார்ந்த அறிவியலார்கள் ஒரு புறம் வேறு நம் விவசாயிகளை ஆய்வக எலியாக்கி வருகின்றனர்.
என்னிடம் இன்னும் சில கருத்துகள் மற்றும் விடயங்கள் இதைப் பற்றியுள்ளது. விரைவில் பதிகிறேன்,
இயற்கையை நம்பி வாழும் நம் சகோதர்களின் மகிழ்ச்சியை நம்மில் பகிரவே இப்பதிவு.
நன்றி.
இந்த பொங்கல் தினத்தில்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்பன்.
அரைபிளேடு
Post a Comment