"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, January 18, 2007

காதல் தந்த கடவுள்



காணும் பொங்கலன்று நான் கண்ட காட்சி ஒன்று. நண்பரோடு ஒரு வணிக வளாகத்தினருகே நின்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, சற்று அருகே பதினாறு/ பதினெட்டு வயதிருக்கத்தக்க ஒரு இளைஞனும், அதே வயதொத்த பெண்ணும் அளாவாளவிக் கொண்டிருந்தனர். சுவராசியாமாயிருக்குமோ ! என்றெண்ணி சற்று காதை அவர்தம் பக்கம் திருப்பி வைத்தேன்.

நம்ம பையன் கண்ணை அப்பத்தான் பார்த்தேன். கண்கள் குளமாக, முகம் சுருங்கி " ப்ளீஸ் ! அப்படியெல்லாம் சொல்லாதே! எனக்குத் தாங்க முடியாது! "என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தான்.

"சரிதான் வழக்கமான பசங்க டயலாக் தான்!" என்று என்னால் விடமுடியவில்லை. காரணம் அந்த பையனின் கண்ணிலிருந்த உண்மையான வேதனை. அப்பத்தான் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்தேன். ஒரு இள முறுவலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பதினெட்டு வயதில் இப்படி ஒரு ஆண் அழுதுகொண்டிருக்கும் போது அவளால் இவ்வளவு இறுக்கமாக இருக்க முடிகிறது எனில், அவளின் பண்பட்ட மனதை பாராட்டாமிலிருக்க முடியவில்லை. அந்த பண்பட்ட மனதிற்கு ஆண் தயாராக நினைக்கும் முன்னே, பெண் அதில் முனைவர் பட்டம் பெற்று விடுகிறாள்!!

சட்டென்று அப்பையன் தலையில் தட்டி, " டேய்! போடா வீட்டுக்கு?" என்று சொல்ல ஆசைதான். வழக்கமான நகர நாகரீகம் தடுக்க கைகளை கட்டிக்கொண்டு கவனித்தேன்.

உதடுகளை சுழித்துக் கொண்டு அப்பெண் அவன் வேதனையை ரசித்த விதம் என்னால் மறக்க முடியாது.

இது போன்ற காதல் தோல்வி அநேகமாக எல்லோர் வாழ்விலும் வந்து தான் செல்கிறது. எனக்கும் அது உண்டு!? சில வருடங்களுக்கு முன்பு அந்த வேதனையின் சுவையை நானும் உணர்ந்தேன்.

அவ்வளவு தான் வாழ்க்கை! என்று கதறித்துடித்தேன். என்ன விதி!! என்று எண்ணி அழுதிருக்கிறேன். இப்போது கண் முன்னே ! அது போல் ஒரு காட்சி பார்க்கும் போது தான், அன்று நான் இருந்த கோலம் எத்தகையது என உணர முடிந்தது. கவியரசரின் கீழ்க்கண்ட பாடலை அன்று என்னை பலமுறை பார்க்க வைத்தது.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

"அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா! ஆடு!! என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!!?

படுவான்! துடித்திடுவான்!! பட்டதே போதுமென்பான் !? பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"


சுற்றிலும் சுமார் 200 பேர் உள்ள ஒரு இடத்தில் ஒரு மனசு ரணகளமாக்கப்பட்டு, இன்னோர் இதயத்திற்கு மண்டியிடும் போது வரும் அனுபவம் பெரும்பாலனவர்களை முடக்கிப் போடுகிறது.

இதுநாள் வரை மாநகர இளைஞர்கள் எல்லாம் புத்திசாலிகள். நகர , கிராமத்து இளைஞர் தாம் காதலால் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்ற என் எண்ணம் தூளானது.


இம்மாதிரி இளைஞர்கள் இனி என்ன செய்வார்கள். தவறான காதல் அவன் வாழ்க்கையையும் தவறாக மாற்றுமா! இனி திடமாய் காதலிப்பானா?? இல்லை எப்படி இன்னோர் இதயத்தை கொல்வது என்று திட்டமிடுவானா!



நான் மனதை பலவாறு திடப்படுத்திக்கொண்டு, திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழும் போது தான், காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து வைத்திருக்கிறது! என்பது புரிந்தது. அதே அனுபவம் உனக்கும் ஏற்படட்டும் என்று மானசீகமாக, அந்த இளைஞனுக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டேன்.


"காதல் ஒரு கடல் மாதிரிடா! அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா!!"

"இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்! எதனையும் புரிஞ்சு நடக்கணும்!!காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா ?!


ஆழ்வார்பேட்டைக்காரர் இப்படிச் சொன்ன அர்த்தம் இன்று விளங்கியது.



பாரதி சொன்னதும் புரிந்தது.

"காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;கலவியிலே மானுடர்க்குக் கவலை
தீரும்;காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக
ளுண்டாம்;ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!அஃதன்றோ இவ்வுலகத் தலைமை
யின்பம்;காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;கவலைபோம்,அதனாலே மரணம்
பொய்யாம்."

4 comments:

Anonymous said...

காதலுக்கு இடையூறாக இருப்பவை தராதரம், சாதி, பணம்

இதையெல்லாம் மனிதன்தான் உருவாக்கினான். கடவுளைச் சொல்லிக் குற்றமில்லை.

RBGR said...

//கற்பூரம் said...
காதலுக்கு இடையூறாக இருப்பவை தராதரம், சாதி, பணம்

இதையெல்லாம் மனிதன்தான் உருவாக்கினான். கடவுளைச் சொல்லிக் குற்றமில்லை..'//

அப்ப கடவுள் மனிதனை படைக்கவில்லை என்றா சொல்லுகிறீர்கள்..!!???

Anonymous said...

மனிதனை உருவாக்கிய கடவுள் மனதில் ஆசையை உருவாக்கவில்லை.

குழந்தையைப் பெறத்தான் முடியும். அதன் குணத்தையும் சேர்த்துப் பெறமுடியாது.

காதல் என்று காதலிப்பது. அதுவும் தமிழர்களின் காதல்... அதற்கு சிக்கல்மேல் சிக்கல்!

காதல்களில் ஆணும் பெண்ணும் எனும் இருசாராரும் பாதிக்கப்படுகின்றனர். அதில் பெண்மேல் மட்டும் தவறைப்போட முடியாது. ஆண்மேல்மட்டும் தவறைப்போட முடியாது. தவறுசெய்யாத மனிதனும் இங்கில்லை. எல்லோருக்கும் முதற்காதல் பலிக்காது. உங்களில் யாராவது ஒருத்தரையும் ஆசைகாட்டி மோசம் செய்யவில்லை என்றால் நீங்கள் மனிதனல்ல.

RBGR said...

//மனிதனை உருவாக்கிய கடவுள் மனதில் ஆசையை உருவாக்கவில்லை. //

மனசு தான் கடவுள் அப்படீன்னு காதலிக்கிறவர் சொல்வர்( love is god)


காதல் தோல்வியில், பெண்ணைவிட ஆணின் வேதனை தான் அதிகம்! என்பது என் கருத்து.

ஒரு ஆணின் குணாதிசியம் அவன் காதலிக்கும் பெண்ணில் இருந்துதான் துவங்குகிறது. அவன் முரடாவதும் அதனாலே!

சில விதிவிலக்குகள் எனக்கும் தெரியும் ...ஆனால், பெரும்பான்மை ஆண்கள் என்பதே கண்கூடு.