"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, September 22, 2006

ஏன் என்று யாருக்காவது தெரியுமா??


சென்ற முறை போல இம்முறையும் தேன்கூடு - தமிழோவியம் மாதாந்திரப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பி,ஆனால் சரியான் நேரம் அமையாததால் மறந்து விட்டேன்.சரியாக 20/09/2006அன்று மாலை 6 மணியளவில் ஒரு போன்சாய் போதி மரத்தடியில்(அருகில்) திடீரென் ஒரு ஞானதோயம்.இன்னும் 6 மணி நேரம் இருக்கிறது போட்டிக்கான இறுதி நேரம் முடிய என்று.

http://thenkoodu.com/contest.php
3) போட்டிக்கான ஆக்கங்கள் அந்தந்த மாதத்தின் 20ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு பின்னர் வரும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. 2006 செப்டம்பர் மாதப் போட்டிக்கான முடிவு தேதி: செப்டம்பர் 20 நள்ளிரவு 12 மணி இந்திய நேரம் (இன்னும் -1 நாட்கள் மட்டுமே!).
7) ஆக்கங்களை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு http://www.thenkoodu.com/contestants.php - என்னும் முகவரியின் மூலமாக குறிப்பிட்ட மாதத்தின் 20ம் தேதி நள்ளிரவு 12 மணி IST(இந்திய நேரம்) க்குள் அளிக்கப்பட வேண்டும்.

உடனே,கற்பனைப் பஞ்சகல்யாணி ஓடத்துவங்க மனத்தட்டச்சு தட் தட் என தட்ட ..சட்டென தோன்றிய ஒரு சிறுகதையைப் பதிந்து ,வழக்கம் போல் மின்னஞசல் அனுப்பி உடன் கிடைத்த பதில்மின்னஞ்சலை பார்த்து மகிழந்தேன்.(என்னமா automate பண்ணியிருக்காங்கன்னு ஒரு கமெண்ட் வேறு??)(The mailfrom team@thenkoodu.com id)

போட்டித்தொகுப்பைப்பார்த்தால் எனது பதிவைக்காணவில்லை.அதிர்ந்துபோய் உடனே தகவலை மேற்க்கண்ட முகவரிகளுக்கு அனுப்பி...........அனுப்பி இரண்டு நாளாச்சு.இன்னும் ஒரு பதிலும் இல்லை.உனக்கேன் இந்த அக்கறை தமிழ் பிளாக் உலகில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று யாரோ கேட்கிறார்கள்.நானே நேரிடியாகப் பாதிக்கப்பட்டதால் மட்டுமல்ல..இது போன்ற கவனக்குறைவுகள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியன்.

ஏன்னெனில், இங்கு வந்து குழுமும் எந்த பதிவாளரும் வேலையின்றியில்லை இன்னும் சொல்லப்போனால் அலுவலக வேலை நேரத்தில்தான் இவ்வாறான வேலைகளை சற்றே யோசித்துப்பாருங்கள் எவ்வளவு வேதனை வரும் என்று.


மட்டறுத்தல்...அது இதுவென ஆயிரம் கண்டிப்புக்கள் இருந்தால் மட்டும் போதாது.


உதவிப்பக்கம் போனால் தலை சுற்றுகிறது.http://www.thenkoodu.com/blog/

இது போன்ற குறைகளை உடனே களையவில்லை எனில் நீங்கள் இதனை துவங்கிய நல்லஎண்ணம் போய் தேன்கூட்டிற்க்கு இதில் வியாபார நோக்கம் மட்டுமே என்பது தெளிவாகும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவினை மட்டறுத்து விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.நன்றி.

இப்படிக்கு

தமிழி.

 

2 comments:

leomohan said...

http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்ற
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com

Joe said...

Did you submitted your entry via http://www.thenkoodu.com/contestants.php ?

There use to be a form for self submission till the end of each months contest.