ஒரு சிறிய அறிவுப்போட்டி.
தடாலடிப்பரிசு ஏதும் தரும் திட்டமில்லை,இதில் இந்தியா எந்த வகையைச்சார்ந்தது என்று கண்டுபிடிப்பவர்க்கு.
கீழ்க்கண்டவை வேவ்வேறு வகையான அரசுகளின் அடிப்படைக்கொள்கைகள்.(மண்டபத்தில் யாரவது சொன்னாலும் பராவாயில்லை!! எங்ககிட்ட சொல்லுங்க!! ஏன்னா.. இதுவே யாரோ சொன்னது தானே ?? )
நிலப்பிரபுத்துவம் :
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார்.
ராணுவ பாஸிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது.
கிளப்டோகிராடிக் பாஸிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் சுட்டுக் கொல்கிறது
நைஜீரியா ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. உன்னைச் சுட்டுக் கொல்கிறது. பசுக்களை அரசாங்கம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்புகிறது.
சோஷலிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.
யுடோபியன் கம்யூனிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக்கொள்ள உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் உனக்கு உதவுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாலை பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.
லெனினிஸ கம்யூனிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாப்பாலையும் எடுத்துக்கொள்கிறது.
மாவோயிஸம், ஸ்டாலினிஸ கம்யூனிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவைகளை எடுத்துக்கொள்கிறது. பிறகு பசுக்கள் இருந்ததையே மறுக்கிறது. அரசாங்கம் பாலை தடை செய்கிறது.
சிங்கப்பூர் ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது.
அமெரிக்க ஜனநாயகம்:
அரசியல்வாதிகள், அவர்களை தேர்ந்தெடுத்தால் உனக்கு இரண்டு பசுக்கள் தருவதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும். பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள், பசுக்களின் சார்பாக, வழக்கு தொடுக்கும். இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்து விடுவாய்.
இங்கிலாந்து ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு மூளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய். பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை.
ஐரோப்பிய ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு என்ன கொடுக்கலாம், எப்போது பால் கறக்கலாம் என்று நிர்ணயம் செய்கிறது. அப்புறம் நீ அவைகளை பால் கறக்காமல் இருக்க உனக்குப் பணம் கொடுக்கிறது. பிறகு இரண்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றை சுட்டுக்கொல்கிறது, ஒன்றை பால் கறக்கிறது. பாலை கடலில் கொட்டுகிறது. பிறகு ஏன் பசுக்கள் காணாமல் போயின என்று இரண்டு படிவங்கள் முழுமையாக எழுதி அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.
லெய்ஸஸ் ஃபேர் முதலாளித்துவம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ ஒன்றை விற்று காளை மாடு வாங்குகிறாய்
நவீன உலக அமைப்பு முதலாளித்துவம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் உன்னிடம் இருந்து வாங்குகிறது. பிறகு அதை இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பதனப்படுத்துகிறது. நீ தயிர் வாங்க ஏராளமாக காசு கொடுக்க வேண்டும் ஏனெனில், பால் தொழிற்சாலை கூட்டமைப்பும், பால் தொழிலாளர்கள் யூனியனும் இறக்குமதி வரியை அதிகப்படுத்த போராடியிருப்பார்கள்.
ஹாங்காங் முதலாளித்துவம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்த மூன்று பசுக்களையும் உனது நிறுவனத்துக்கு விற்கிறாய். அதற்கு உன் மச்சான் ஆரம்பித்த வங்கியை கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, கடன்/பங்குகள் மாற்றி உன் நான்கு பசுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறாய். அத்தோடு கூட ஐந்து பசுக்களையும் வைத்துக்கொள்ள வரி விலக்கு கிடைக்கும். உன் ஆறு பசுக்களையும் பால்கறக்கும் உரிமைகளை ஒரு பனாமா கம்பெனி வழியாக கேய்மன் தீவுகளில் இருக்கும் ஒரு பேப்பர் கம்பெனிக்கு ரகசியமாக விற்று நீ பெரும்பான்மை பங்குகளுக்கு சொந்தக்காரனாக ஆகிறாய். ஏழு பசுக்களுக்குமான மொத்த உரிமைகளை மீண்டும் பழையக்கம்பெனிக்கே விற்கப்படுகிறது. கம்பெனியின் வருடாந்தர அறிக்கை கம்பெனிக்கு எட்டுபசுக்கள் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும் இன்னொரு பசு வைத்துக்கொள்ள ஆப்ஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இதே நேரத்தில் நீ உன்னிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் கெட்ட ஃபெங் சுயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்) காரணமாக கொன்று விடுகிறாய்.
சவூதி அரேபியா:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி உனக்குக் கவலையில்லை. ஏனெனில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு பெண்களை உனது பெட்ரோல் பணம் கொடுத்து வாங்கியாய் விட்டது.
பிரதிநிதித்துவ ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்துவீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான்.
சுத்தமான ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள்.
********

11 comments:
Cntd இந்தியக் கலப்புப் பொருளாதாரம்
இரண்டு பசுவில் ஒன்றை விற்று
ஆடு வாங்குவாய்;ஆட்டை விற்று
கோழி வாங்குவாய்;
கோழியை விற்று குஞ்சுவாங்குவாய்;சமைத்து
சாப்பிட்டு துங்குவாய்.
மற்றொரு பசு அடுத்த தேர்தல்
சமயத்தில் இரண்டாக மாறிவிடும்
// சோஷலிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.//
இந்திய ஜனநாயகம் எப்படியென்பதை நீங்களே உங்கள் பதிவில் சொல்லிவிட்டீர்கள் அம்மணி
நான் கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் அதை வைத்துக் கொண்டு அவதிப்பட வேண்டாம்
அரசாங்கத்திடம் கொடுத்து விடு
சேவை வரி, விற்பனை வரி, வ்ருமான வரி என்று எந்தக் கருமமும் இல்லை
அரசாங்கம் டெண்டர் விட்டு அந்தப் பசுக்களை அவைகள் இறந்துபோவதற்குள் வளர்க்க ஏற்பாடு செய்து விடுவார்கள்
உலக வங்கியிலிருந்து வாங்கிய பணம் மூலம் பால் வாங்கி ரேசன் கடை மூலம் உனக்கு பலை அவர்கள் தருவார்கள்
ரேசன் கடை பால் தண்ணீர் கலந்து வந்தாலும் அல்லது அளவு குரைந்து வந்தாலும் நீ புலம்பிப் பிரயோசனம் இல்லை. பகவத் கீதையைப் படி!
நாட்ராயன், வெள்ளக்கோவில்
இதில் எந்த வகையுமே இல்லை.
ஒரு பசு மந்தை இருக்கும். ஒன்று பாலைத் திருடுபவர்கள் அரசாங்கத்தில் இருப்பர்கள்.இல்லை வெள்ளையாய் இருக்கும் பசுவை மட்டும் கொல்ல வாக்குறுதி தரும், அப்படிக் கொன்றதால் புகழ்டைந்த அரசாங்கம் ஆட்சி ஏற்கும்.
பசுக்களுக்கு எந்த அரசாங்கம் இருந்தாலும் கவலை இல்லை.
பசுக்கள் தங்களுக்குள் இருக்கும் கோடுகள், நிறம் போன்றவைகளை வைத்து அடித்துக் கொள்ளும்.
பசுக்களின் நன்மைக்காக வைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு விதியும் கடைபிடிக்கப் படாது. தன் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பசுக்களுக்கு தெரியாது.
இதில் பல பசுக்கள் தாங்கள் தன் மேல் இருக்கும் நிறம் தன் மேல் இருக்கும் கோடுகள் தன்னோடு இருக்கும் கூட்டம் தான் பெரிது என்று பேசித் திரியும்.
அந்தக் கூட்டத்துடன் இருக்கும் சாதுப் பசுக்களையும் கொல்ல ஒரு கூட்டம் தன் இனம் தேடித் திரியும்.
ஒரு பசுவை இன்னொரு பசு குறை சொல்வது மட்டும் தான் எல்லாப் பசுக்களுக்கும் பொதுவாக இருக்கும்.
இந்திய சனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசு உள்ளது. அதை வைத்து கடந்த வருடம் சம்பாதித்த வருமானம் சுமார் ரூபாய் பத்தாயிரம் கணக்கு காட்டாத காரணத்தால் அந்த பசுகளை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு அரசாங்கம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
தமிழக சனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசு உள்ளது அதை அரசாங்கம் எடுத்து அதை கரவை பசுக்களாக மாற்றி உங்களுக்கு இனாமாக தரவுள்ளது.
இதுவரை வந்தப் பின்னூட்டங்களிலேயே இத்தனை புதிய சிந்தனைகள்.எனில் ...பார்ப்போம்..
ஆனால்,நிச்சயமாக மிக நல்ல சிந்தனை அறிவிக்கப்படும் மிகவிரைவில். ;
உன்னிடம் இரண்டு பசுக்கள் உள்ளன.
அவை பால் கறக்க மறுக்கும்போது ராமராஜனை அழைத்து பாட்டு பாடச் சொல்கிறாய். அவர் பாடியதும் வழக்கமாக 5 லிட்டர் கறக்கும் பசுக்கள் 10 லிட்டராகக் கறக்கின்றன.
அந்த 20 லிட்டர் பாலை 50 லிட்டர் பாலாக மாற்றுகிறாய்.
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கிறது. அதில் ஒன்றுக்கு பால் கறக்ககூடாது ஆனால் புண்ணாக்கு வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. ஏனென்றால், கடந்த பத்து வருடங்களாக ஒரு பசு புண்ணாக்கு நிறைய சாப்பிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது அதை ஈடுகட்ட இன்னும் 136 டன், 458 கிலோ அதிகமான புண்ணாக்கு சாப்பிட்டு சமத்துவம் ஏற்படுத்த சட்டம் வழிசெய்கிறது. இதற்கு நடுவே பக்கத்து வீட்டு இரண்டு மாடுகளின் ஜீன்ஸ் சோதனையில் அவை ஒரு பொந்து வழியாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு மாடுகளையும் அரசாங்கம் பிரித்துக்கொடுக்கிறது. அதை கேட்டு கவர்னரை பார்த்த உங்களை உங்களிடமிருந்த இரண்டு மாட்டுக்களையும் எடுத்துக்கொண்டு அதை குளிப்பாட்டி உங்களுக்கே இலவச மாட்டுத்திட்டம் என்று வழங்கப்படுகிறது.
நன்றி
கோமாதாவைக் கொல்வதா?
அனானியைக் கண்டிக்கிறேன்; சபிக்கின்றேன்
sivagnanamji
said...
//இந்தியக் கலப்புப் பொருளாதாரம்
இரண்டு பசுவில் ஒன்றை விற்று
ஆடு வாங்குவாய்;ஆட்டை விற்று
கோழி வாங்குவாய்;
கோழியை விற்று குஞ்சுவாங்குவாய்;சமைத்து
சாப்பிட்டு துங்குவாய்.
மற்றொரு பசு அடுத்த தேர்தல்
சமயத்தில் இரண்டாக மாறிவிடும்//
TAMIZI
said...
மற்றொன்று எப்படி இரண்டாக மாறும் என்பதனைக்கூறவேயில்லை நீங்கள்.(நீங்கள் பசுவை தேர்தல் லஞ்சமாக தருவார்கள் என்றீர்களா?)
***
நாட்ராயன், வெள்ளக்கோவில் என்ற நண்பர் அனானியாய் வந்து சொன்னவை:
//
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் அதை வைத்துக் கொண்டு அவதிப்பட வேண்டாம்
அரசாங்கத்திடம் கொடுத்து விடு.சேவை வரி, விற்பனை வரி, வ்ருமான வரி என்று எந்தக் கருமமும் இல்லை.அரசாங்கம் டெண்டர் விட்டு அந்தப் பசுக்களை அவைகள் இறந்துபோவதற்குள் வளர்க்க ஏற்பாடு செய்து விடுவார்கள்.உலக வங்கியிலிருந்து வாங்கிய பணம் மூலம் பால் வாங்கி ரேசன் கடை மூலம் உனக்கு பாலை அவர்கள் தருவார்கள்
ரேசன் கடை பால் தண்ணீர் கலந்து வந்தாலும் அல்லது அளவு குரைந்து வந்தாலும் நீ புலம்பிப் பிரயோசனம் இல்லை. பகவத் கீதையைப் படி!//
TAMIZI
said...
மிக அழுத்தமான பதிவு. நன்றாக எழுதிகிறீகள்.நீங்கள் ஏன் ஒரு பதிவு துவங்கக்கூடாது.
அரசு தாமதமாய் வேலை செய்கிறது என்பது உங்கள் கருத்து இல்லையா?
அப்படியானால்,சரியான பாதை என்கிறீர்களா? நீங்கள் கூறியதென்னவோ கம்னியூச சித்தாந்தம் போல் உள்ளது.
******
Anonymous said...
//ஒரு பசுவை இன்னொரு பசு குறை சொல்வது மட்டும் தான் எல்லாப் பசுக்களுக்கும் பொதுவாக இருக்கும்.//
TAMIZI
said...
இது மிகப்பெரிய உண்மை.இதை வலைப்பதிவாளர்கள் கூட்டம் பற்றிய மற்றவர்களின் கருத்தில்(பின்னூட்டங்களில் இருந்தே) தெரிந்துக்கொள்ளலாம்.
நமது நாட்டின் மிகபெரிய பலமும் பலவீனமும் --ஞாபக மறதி மட்டுமே.
நம்மவர்கள் கெட்டதை மட்டுமல்ல நல்லதையும் சேர்ந்தே மறந்து விடுகிறார்கள்.
********
We The People
said...
//இந்திய சனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசு உள்ளது. அதை வைத்து கடந்த வருடம் சம்பாதித்த வருமானம் சுமார் ரூபாய் பத்தாயிரம் கணக்கு காட்டாத காரணத்தால் அந்த பசுகளை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு அரசாங்கம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
//
TAMIZI
said...
புரிகிறது..ஆனால் கணக்குகாட்டாதிருப்பது ஒரு குடிமகனின் சரியான நடவெடிக்கை என்பீர்களா?
*****
ஜயராமன்
said..
//பக்கத்து வீட்டு இரண்டு மாடுகளின் ஜீன்ஸ் சோதனையில் அவை ஒரு பொந்து வழியாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு //
TAMIZI
said...
உங்களின் கோபம் இடஒதுக்கீட்டு முறை தவறு என்பது மட்டிலுமா?
ஒரு சமுதாயம் வளரும் போது ஒரு சாராரின் கோபம் எப்போதுமே எந்தக்காலத்திலும் இருந்து தான் வந்துள்ளது.ஆயினும் உங்கள் ஆதங்கத்தை மதிக்கிறேன்.
அம்மணி நிங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பதில்கள்
1. பதிவெல்லாம் வேண்டாம் அம்மணி.
முதலில் பதிவு மேல் ஆசை வரும்
பிறகு அதை அனைவரும் படிக்கவேண்டுமே என்று ஆசை வரும்
படிததவர்கள் பாராட்டிப் பின்னூட்டம் இட வேண்டும் என்ற ஆசை வரும்
அதைப் படித்துவிட்ட ஒரு பத்திரிக்கைக்காரன் கூப்பிட்டு தங்கள் பத்திரிக்கையில் எழுதச் சொல்ல வேண்டும் என்று ஆசை வரும்.
பதிவில் இப்படி முடிவில்லாத ஆசைகள் வந்து படுத்தியெடுக்கும்
பதிவெல்லாம் வேண்டாம் அம்மணி.
புத்தர் சொன்னார் எல்லாத்துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் ஆசைதான்!
2. கம்யூனிஸ சித்தாந்தங்களில் எனக்கு உடன்பாடு இல்லை அம்மணி
தொழில் வளர்ந்த நாடுகளில் கம்யூனிஸம் வளரவில்லை. கம்யூனிஸம் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை! அவர்கள் ராசி அப்படி!
3. இந்திய அரசாங்கம் நன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்
வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப் போன பழைய விற்கு அடுப்பிலேயே இன்னும் சமைத்து நூறு கோடி மக்களுக்கும் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
அது எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ அஸீம் பிரேம்ஜி போன்ற வல்லுனர்களிடம் கேட்டு இன்றைய யுகத்திற்குத் தகுந்த மாதிரி மாடர்னாக அடுப்புபோட்டு சமைக்க வேண்டாமா?
லஞ்சம் ஊழலை எல்லாம் எப்படிக்களைவது?
நாம் எப்போது வல்லரசாவது?
நாட்ராயன், வெள்ளக்கோவில்
THAMISHI said
//மற்றொன்று எப்படி இரண்டாக மாறும்...?//
அதே! அதே!!
ஆனா லஞ்சமில்லே;அன்பளிப்பு
Post a Comment