"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, September 22, 2006

விட்டில்கள்.நான் அவனது கட்டுப்பாட்டிலிருக்க விரும்புகிறான்-
விரும்பியபடி என் நிர்வாணம் ரசிக்க.

என்னையே பார்த்துக்கொண்டிருப்பான்-
தொலைக்காட்சியில் எனக்கு பிடித்த நடிகன்.

எங்க வீட்டில் முருகன் படம் கூட காணவில்லை-
நல்ல வேளை  பிள்ளையாருக்கு யானைத்தலை.

வரிக்குதிரை என்பான் எனை-
என் இடுப்பில் பிரசவ அடையாளம்.சாலமன் பாப்பயாவோடு சேர்ந்து சிரிப்பான் -
மனைவியால் இன்பமா! துன்பமா! தலைப்பு.

பழைய புத்தகக்காரனுடன் வந்தான் நேற்று-
பாரதி ஆண் என்பது நேற்று தான் தெரியுமாம்.

நானே இரண்டாம் சாமத்தில் எழுப்பவேண்டும்-
எனை அடித்த மனச்சோர்வு நீக்க.

பூக்களோடு பேசப்பிடிக்கும் எனக்கு-
நல்ல வேளை மனிதம் போல் பூவில் ஆணில்லை.

என் இதய கதவினில் பூட்டில்லை -
ஆனால் சாவி அவனிடம்.


அதல்லாம் இருக்கட்டுங்க அப்பறமா பேசலாம்-
அவனுக்கு நான் சப்பாத்தி சுடவேண்டும். 

2 comments:

Anonymous said...

கவலைப் படாதீர்கள்!
அம்மா என்று ஒரு மழலைச் செல்வம் வ்ந்து உங்கள் கால்களக் கட்டிப் பிடிக்கும்போது இந்த மன வலியெல்லாம போன இடம் தெரியாது

அவரை விட வேண்டாம்.
ஐம்பது வயதிற்குமேல் அவர் உங்கள் காலடியில் விழுந்து கிடப்பார்

அப்போது கட்டி வைத்துவிடலாம்

சங்கிலி ஒன்றை மட்டும் எடுத்து வையுங்கள்
Chinna (ppa Doss)

Thiagu said...

Nice one...