காவல் துறைக்கு வாழ்த்துகள் !
காவல் துறைக்கு வாழ்த்துகள் !
அமைதிப் பூங்கா தமிழகம் - ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான திறமை வாய்ந்தவர்கள் தமிழக காவல் துறையினர்.
தமிழக காவல் துறை நடுநிலையோடு தான் இயங்குகிறதா அல்லது அதனை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இயக்குகிறார்களா என்ற கேள்வி நடுநிலைவாதிகளிடையே நிலவுகிறது.
சென்னையில் மாநகர போலீஸ் மாநகர், புறநகர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதன்மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் என காரணம் கூறப்பட்டது. ஆனால், காவல் ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் சென்னையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறையவில்லை.
ஒரு பதவிக்கு இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் அதிகாரி அந்த இடத்தை, அங்கு பணி புரியும் சக போலீஸ் அதிகாரிகள், அந்தப் பகுதியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை புரிந்துக் கொள்வதற்குள் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்.
நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் இருந்த கூலிப்படைகளின் செயல்பாடுகள் தற்போது வேலூர் வரை வந்துவிட்டன. இதனால், கொலை, கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை ரூ. 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால், குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. குடிப்பழக்கம் அதிகரித்ததே குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
சமூக விரோதிகளை ஒழித்துக்கட்டும் அதிகாரத்தைக் காவல் துறை அதிகாரிகள் தம் கைகளில் எடுத்துக் கொள்வதை வரவேற்கும் மனோபாவம் சினிமா முதலான வெகுஜன ஊடகங்களாலும் சில அரசியல் இயக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
என்கவுன்டர்கள் காவல் துறை அதிகாரிகளின் சாகசங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. குற்றவாளிகளைச் சட்டத்தின் வழியில் தண்டிக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மீதான அவநம்பிக்கை பல்வேறு வழிகளில் உருவாக்கப்படுகிறது. நாட்டின் பல காவல் துறை அதிகாரிகளுக்கு என்கவுன்டர்களின் மீது ஒருவித போதை உருவாகியிருக்கிறது.
காவல் துறை இணைய தளம்:
காவல் துறையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பணியாற்றியவர்களின் விபரங்கள் மற்றும் குற்றப்பதிவேடு விபரங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
அத்தளத்தின் ஒரு பகுதியைப் பார்த்த போது தான் அவர்கள் வளர்ச்சி(?!??!!) புரிந்தது. நீங்களும் பாருங்களேன்.
http://www.tnpolice.gov.in/crimeprofile.html
இது அவர்களுடைய குற்ற எண்ணிக்கைகளினை அடிப்படையாக வைத்து வரைந்த வரைபடம் .
உடனே, இது அந்த ஆட்சி !! இது இந்த ஆட்சியில் !!! என்று யாராவது (???!!) சண்டைக்கு வராத வரைக்கும் மகிழ்ச்சி .
மொத்தத்தில் காவல் துறையின் மீது உள்ள நம்பிக்கை குறையாமலிருக்க பெரியார் படத்திற்கு சலுகை மற்றும் நிதி உதவி அளித்தது போல், ஏன் வசனம் எழுதி ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது. நம் கேப்டன் கூட பங்கேற்பார் அல்லவா?
1 comment:
//டிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. குடிப்பழக்கம் அதிகரித்ததே குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.//
Thats 100% correct
Post a Comment