"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, July 09, 2009

சாதியை ஒழிப்பது எப்படி ?

"பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் மிகவும் பிற்படுத் தப்பட் டோர் பட்டியலுக்கும், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் பட்டியலுக்கும் மாற்றக் கோரி வருகின்றனர். அனைத்து கோரிக்கைகளையும் ஏற் றால், ஓ.சி., - பி.சி., பட்டியலே இல்லாமல் போய்விடும்,'' என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறைகளுக்கான மானியக் கோரிக் கை மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் அளித்த பதில்:தமிழக அரசியலில் ஒவ்வெரு ஜாதிக்கும், மதத்துக்கும் கட்சிகள் துவக்கப்பட் டுள்ளன. ஆனால், அனைத்து சமுதாயத்தினருக்கும் பாடுபடும் தலைவராக கருணாநிதி உள்ளார்.

தற்போது, போகிற போக்கில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியில் உள்ள அனைவரும் ஆதிதிராவிடர் பட்டியலுக்கு மாற்றக் கோருகின்றனர். இதேபோல, இதர வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர். பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர்.


இதை செயல்படுத்தினால், மொத்தமும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் பட்டியல் தான் இருக்குமே தவிர, ஓ.சி., - பி.சி., இருக்காது. எந்த நேரத்தில் எப்படி செய்வது என்பதை முதல்வர் அறிந்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



இதே முறையை பின்பற்றி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் முயன்றால் சாதி ஒழிக்கப்படும் என்பதினை மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இதனை உலக அளவில் கொண்டு சென்றால் ஒன்றே மதம் என்றாகி விடும் என்பதினை சொல்வதில் மேலும் பெருமை அடைகிறேன் !

நல்ல வேளை! அமைச்சர் இதெல்லாம் சொல்லலை!

எப்பூடி!!!!!!!!!!

நன்றி : தினமலர்


3 comments:

ரவி said...

நகைச்சுவையா சொன்னாலும் நிறைய வலிக்குது..

Chittoor Murugesan said...

சாதியை ஒழிக்க ஒரே வழி எல்லாருக்கும் வேலை கொடுத்துரனும். நாட்டில்பத்து கோடி பேர் வேலையில்லாம இருக்காங்களாம். வடக்குல வெள்ளம் தெற்குல வறட்சி. கங்கை காவிரி இணைப்பு பற்றி பேசிக்கிட்டேதானிருக்கோம். இந்த பத்து கோடி பேருக்கும் வேலை கொடுத்துட்டா சாதி மட்டுமில்லே நாட்டை பிடிச்ச பீடையே விட்டு போகும்

AGILNALAN said...

"மேலும் இதனை உலக அளவில் கொண்டு சென்றால் ஒன்றே மதம் என்றாகி விடும் என்பதினை சொல்வதில் மேலும் பெருமை அடைகிறேன் !"
எல்லாம் சரி, ஆனால் மேற்கண்ட கூற்றுதான் செம ஜோக். உலகத்தில் மாறவேண்டியது நாம் தான், மற்றவர் இல்லை.