"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, May 09, 2007

ஆட்டோகிராப்! - பாகம் -2

தலை காய்ந்து, மூளை( இருப்பவர்க்கு) வேகும் வெயிலோடு விளையாட முடியாது, ஊட்டி போன்ற விடுமுறை தலங்களுக்கு 2 நாள் சென்று மாதம் முழுதும் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தில் துண்டு விழ, மனைவி, குழந்தைகளை மனைவியின் தாய் வீடு அனுப்ப முடியாது போய், நண்பர் ' என் பொண்டாட்டி ஊருக்குப் போயாச்ச்ச்சேய்ய்ய்! " என்று சொல்லக் கேட்டு கடுப்பாகி, விடுமுறைகால சிறப்பு வகுப்புகள் என புதிய செலவில் விழி பிதுங்கி.....

இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கின்றேன்.

இப்படியாக படுகடுப்பிலிருக்கும் நண்பர்களே!

உங்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் நேரம் செலவிடுங்களேன்( துண்டெல்லாம் விழாமல் தான்)


எனது நண்பரின் நண்பர் ஒருவர் கேட்டார்.
"என் சன்னை கம்யூட்டர் கிளாஸில் சேர்த்தலாமென்றிருக்கின்றேன்! உங்கள் சஜக்சென் சொல்லுங்க! எதுங்க பெஸ்ட் அண்ட் சீப் !??"

( இப்போதெல்லாம் தமிழ் தலைவர்களே டீப் ஸிலீப்லிருக்கும் போது, இது போன்ற தமிழ், தமிழரிடையே இருப்பது ஒன்றும் வியப்பல்ல என்பது தனிக்கதை!!)


நமது குழந்தைகளுக்கு இப்போது தேவை ஓய்வும், நல்ல விளையாட்டுகளும் தான்.

அவ்விளையாட்டுகளும் அறிவு சார்ந்ததாகவும் பொழுது போக்கவுமாக இருந்து விட்டால், எவ்வளவு அருமையாக இருக்கும்.

இது பற்றி பேசினால் நீண்டு விடும்.

எனவே, என்னாலியன்ற ஒரு யோசனை! (ஒரு நினைவுபடுத்துதல் மட்டுமே!)

வெறும் விரல்கள் மட்டும் வைத்து விளையாடி மகிழலாம்.

இதற்கு முந்தைய இப்பதிவை பார்க்கவும்( ஆட்டோகிராப்!- பாகம்-1.)

இதுவும் ஒரு கைவிளக்கை சிறு இருட்டறைவில் வைத்து மகிழும் ஒரு சிறு விளையாட்டு.

சிறு பயிற்சியின் மூலம் நீங்கள் வித்தைக் காட்டலாம்!

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான இடைவெளி இன்னும் குறையும்.
அவர்களின் உருவாக்கத் திறனும் அதிகரிக்கும் !

இப்போதைக்கு,நம் மீது படையெடுத்துள்ள அயல்நாட்டு நிறுவனங்களுக்கு நம் வேலை செய்யும் அறிவு மட்டுமே தேவை. நமது படைப்புத் திறன் மெதுவாய் அழிந்து கொண்டே வருகின்றது.

இது போன்றவை அவற்றை வளர்க்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை !

வாழ்த்துகள்!!















No comments: