போட்டிக்கான முடிவு தேதி:
10-04-2007.இந்திய நேரம் 12 மணி. நள்ளிரவு.
பின்னூட்டமாகவே போட்டியிடலாம் நண்பர்களே.
ஏற்கனவே கூறியது போல் பதிவாக்கியும் இங்கு இணைப்பு முகவரியைப் பின்னுட்டமிடலாம்.
இனி விவரங்கள்:
தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.
பரிசு:
ஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)
போட்டி:
கீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.
(பின்னூட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்)
விதி முறைகள்:
1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.
2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.
3. நகைச்சுவையாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம். ஒருவரி கமெண்டும் வரவேற்கப் படுகிறது.
4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.
5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.
6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும்,பின்னுட்டங்களுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.
7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.
9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.
முக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:
போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...
நன்றி.
பதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 10 -ஏப்ரல்,2007.
முடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
10. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.
ஏற்கனவே, போட்டிக்கான விமர்ச்சனங்களும் பங்கெடுப்பும் இங்கு இடப்பட்டிறுக்கிறது.
13 comments:
✪சிந்தாநதி said...
போட்டிக்கு நன்றி.ஆனால்//தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா? ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா? ;(http://tamiltalk.blogspot.com/பரிசுப் போட்டி அஞ்சு போட்டி முடிஞ்சாச்சுங்க...
Tue Mar 27, 02:28:00 PM 2007
தமிழி said...
நன்றி. சிந்தா நதி.மன்னிக்க!இதனை கவனத்தில் கொள்ளவில்லை, இருந்தாலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
Tue Mar 27, 02:32:00 PM 2007
தமிழி said...
மேலும்., பதிவர்களின் பதிவினை மென்மேலும் பலர் பார்க்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக கருதுகின்றேன்.பதிவுலக நண்பர்களே எனது எண்ணத்தினை ஊக்கப்படுத்துவீர் என்றே விழைகின்றேன்.
Tue Mar 27, 02:40:00 PM 2007
sivagnanamji(#16342789) said...
//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா?
Tue Mar 27, 02:42:00 PM 2007
தமிழி said...
// sivagnanamji(#16342789) said...//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா? //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது !!வேண்டுமானால் அதிகரிக்கலாம்.கெளதமின் தடாலடியின் நாயகரான உங்கள் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.நன்றி.
Tue Mar 27, 03:58:00 PM 2007
We The People said...
காந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்!"சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.(பழக்க தோஷம்பா!)
Tue Mar 27, 04:11:00 PM 2007
லக்கிலுக் said...
நேதாஜி : தலைவரே உங்களோட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துலே என்னையும் சேத்துக்குங்களேன்காந்திஜி : யோவ் சுபாசு இது 1942 இல்லே. 2007. 65 வருஷமா நீ கோமாவுலே இருந்ததுனால எதுவும் தெரியலை போலிருக்கு. வெள்ளைக்காரன் கிட்டேருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரனுங்க கிட்டே கொடுத்து 60 வருஷமாச்சி. 59 வருஷத்துக்கு முன்னாடி என்னையும் போட்டுத் தள்ளிட்டானுங்க. நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிடிச்சிப்பா....
Wed Mar 28, 11:33:00 AM 2007
லக்கிலுக் said...
காந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே...
Wed Mar 28, 11:35:00 AM 2007
தமிழி said...
போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...நன்றி.
Wed Mar 28, 11:42:00 AM 2007
கிரிக்கெட்வெறியன். said...
இந்தியா அணி வெற்றி பெற உண்ணாவிரதம் இருக்கப்போறீங்களா!அய்யோ! அய்யோ! உங்களோட ஒரே தமாசுதான் போங்க!
Wed Mar 28, 02:33:00 PM 2007
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Wed Mar 28, 04:42:00 PM 2007
Nakkeeran said...
சுபாஷ்: தூங்குடா பார்க்காதே பார்க்காதேன்னு சொன்ன கேட்டா தானே. இந்தியா - இலங்கை மேட்ச் பார்த்ததில் இருந்து இப்படி தான் (சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)காந்தி: ஹி ஹி
Thu Mar 29, 07:41:00 AM 2007
We The People said...
//(சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)//அவர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்தியர்கள் வாழும் நிலை வந்துவிட்டது!ஐயோ! ஐயோ!!
Sat Mar 31, 11:42:00 AM 2007
மேலும் சில விமர்சனங்கள் மட்டும் இங்கே:
Anonymous said...
நாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.- சென்னையிலிருந்து லக்கிலுக்
Tue Mar 27, 04:18:00 PM 2007
கும்மாங்கோ said...
காந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே ?நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை
Tue Mar 27, 05:39:00 PM 2007
ரவிசங்கர் said...
எட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன? இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது? தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் தளர்த்தலாம்
Tue Mar 27, 05:57:00 PM 2007
தமிழி said...
ரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.வரும் பதிவை போலியல்ல ??!! என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை! ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது!மேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா! நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்!கருத்துக்கு நன்றி ரவிசங்கர்.
Wed Mar 28, 10:01:00 AM 2007
தமிழி said...
கும்மாங்கோ! உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.நன்றி.
Wed Mar 28, 10:03:00 AM 2007
லக்கிலுக் said...
நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்!
Wed Mar 28, 12:07:00 PM 2007
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Wed Mar 28, 04:18:00 PM 2007
THOTTARAYASWAMY.A said...
அகிம்சை என்னுள்ஆறாக்காயமாய்அவமாணங்களையேபரிசளிக்கிறது.. சமுதாயம்வன்முறையையும்வக்கிரத்தையம்ஏவியே விடுகிறது.. இருந்தும் மெளனமய்என்னுள் அழுகின்றேன்.. என்னுள் கோட்சே பிறந்துவிடக்கூடாதுஎன்பதற்காக..
Mon Apr 02, 09:19:00 PM 2007
Anonymous said...
என்னது நீங்க தான் அடுத்த கோச்சா!-சங்கரன்.
Thu Apr 05, 01:16:00 PM 2007
நேதாஜி: உங்களோட Lage Raho Munnabhai படம் பார்த்தேன். கலக்கிருந்தீங்க!
காந்திஜி: அட போப்பா, என்னைய கேவலமா காப்பி அடிச்சதுக்கு அந்த டைரக்டர் மேல எப்படி கேஸ் போடறதுன்னு நானே யோசிச்சுண்டு இருக்கேன்!!