தடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!! என நடுவர்கள் சொல்லிவிட்டாலும், சிலவற்றை தெரிந்தெடுத்து உதவினார்கள்.
அவை உங்கள் பார்வைக்கு:
1.
We The People said...
காந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:
"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்!"
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.
2.
லக்கிலுக் said...
காந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...
சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே..
3.
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..
சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)
காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
4.
THOTTARAYASWAMY.A said...
அகிம்சை என்னுள் ஆறாக்காயமாய் அவமாணங்களையே பரிசளிக்கிறது.. சமுதாயம் வன்முறையையும் வக்கிரத்தையம் ஏவியே விடுகிறது..
இருந்தும் மெளனமய் என்னுள் அழுகின்றேன்..
என்னுள் கோட்சே பிறந்துவிடக்கூடாதுஎன்பதற்காக.
5.
**********
இனிஉங்கள் பங்கெடுப்பு தேர்ந்தெடுங்கள் உங்களுக்குப் பிடித்த ஒருவரை!!
முடிவுகள் முடிந்தால் 20 ஏப்ரல் 2007-க்குள்.
நன்றி.
மறக்காம ஒரு ஓட்டு மட்டுமே போட்டிடுங்க.. எனக்கு கள்ள ஓட்டு நீக்கவெல்லாம் தெரியாது..!!!
நல்ல போட்டியாய் இது அமைய உதவிடுங்கள் நண்பர்களே.
நேதாஜி: உங்களோட Lage Raho Munnabhai படம் பார்த்தேன். கலக்கிருந்தீங்க!
காந்திஜி: அட போப்பா, என்னைய கேவலமா காப்பி அடிச்சதுக்கு அந்த டைரக்டர் மேல எப்படி கேஸ் போடறதுன்னு நானே யோசிச்சுண்டு இருக்கேன்!!