"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, May 29, 2006

இது ஒரு தமிழ் காலம்...
நம் தமிழ் தான் எத்தனை தடைகளைத் தாண்டி இன்றும் வாழ்ந்துக் கோலாச்சிக் கொண்டிருக்கின்றது..

எத்தனை மரபுகள்,எத்தனை ஆட்சி மாற்றங்கள்,எத்தனை மனிதர்கள்,எத்தனை விருப்புகள்,எத்தனை வெறுப்புகள்..........


கல் தோன்றி..மண் தோன்றா காலத்தே மூத்த குடி என்பர்....
அதன் வரலாற்றினை ஆய்வு செய்யும் மற்றும் செய்தவர் தாம் அறிவர் அதன் உண்மை பற்றி...

இருந்தும்,ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மொழி என்பதிற்க்கு மிக நல்லச் சான்றுகள் உள்ளது என்பது என் திண்ணம்.

இத்தனைக் காலம் ஒரு மொழி அதன் வடிவம் இழக்காமல் அப்படியே தோன்றியவாறே இருக்க இயலுமா !

யாப்பிலக்கணம் என்றால் என்ன ?

நம் தலைமுறையிலேயே மறந்து விட்டதே!

ஒவ்வொரு எழுத்துக்கும் இவ்வளவு மாத்திரை என கணக்கிட்டு வளர்ந்த தமிழையா நாம் இன்று பேசுகிறோம் ??

ஓர் மொழி எண்ணும்,எழுத்தும் ஒருங்கே கொண்டது எனில் அதன் வளர்ச்சிறப்பு எத்தகைய மேன்மை வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.

யே....யப்ப்ப்பா??? என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது.

ஓர் முறை எழுத்தாளர் 'சுஜாதா' அவர்கள் எழுதிப் படித்தாதாக ஒரு நினைவு...

" தமிழ் கணிணிக்கும் வந்தாச்சு....!
தமிழாக்கம் என்று ஓரேடியாக எல்லாவற்றையும் நேரடி மொழிப்பெயர்ச்சி செய்துக்கொண்டிராமல்..சில ஆங்கில மற்றும் சில மொழிகளின் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தினால் என்ன? "
( உ.ம்.) காபி - தமிழ் உருவில் குளம்பி..என்று கூறிக் குழப்பாது, எங்கள் கிழவி போல் காப்பித்தண்ணி என்று பயன்படுத்தினாலென்ன!!

புது வார்த்தை ஒன்று நம் அகராதியில் சேர்க்கப்படுவது...எனக்கும் மகிழ்ச்சி தான்...

ஆனால்,காலம் கடந்த சில சிந்தனைகளால் சில சமயம் நம் இழப்பின் அளவு அதிகமாக அல்லவா போய் விடுகிறது.


எனக்கும் இந்தக்கருத்தில் உடன்பாடு இருந்தாலும் மனம் கேட்கவில்லை..

ஆனாலும்,சிந்தித்துப் பார்த்தால்...மொழி என்பது சத்தங்களினாலான ஓர் தொடர்புக்கொளல் தானே..

அதை எப்படி மாற்றினால் என்ன...!

தமிழ் சங்கம் படைத்த மதுரைத் தமிழ் எல்லாருக்கும் புரிகிறதா? இல்லையா ?

இன்னும் சொன்னால்,அன்று மேல் நாட்டவரின் ஆதிக்கத்தை விட்டிடுவோம்!!...நமது சகோதரர்களினால் உருமாறிக்கிடக்கும் நம் தமிழ்???.....நினைத்தாலே நெஞ்சம் பதைக்கின்றது...

என்னைக் கேட்டால்..??
இங்கு மத மாற்றம்.,ஆட்சி மாற்றம் போன்றவை எல்லாம் தமிழைப் பாதிக்கவில்லை எனச் சொல்ல இயலாது.
ஆனால்,தமிழை தமிழன் எவ்வளவு விரும்பினான்! என்பதனைப் பொறுத்தே....அதன் வளர்ச்சி மற்றும் மாறங்கள் இருந்திருக்கிறன என்றால் அது மிகையாகாது...

எடுத்துக்காட்டாக...இத்துடன் இணைத்த நகல்களைப் பாருங்களேன்..
1934-ல் வெளிவந்த இப்புத்தகத்தில்...ஆங்கில மற்றும் சமஸ்கிரத தாக்கங்கள் எவ்வாருள்ளன என்பது விளங்கும்.

ஆனால்,காலக்கண்ணாடியால் வயதானவளாக தோற்றம் அளித்தாலும் நம் தாய் என்றும் நமக்கு அழகு தான் !

அரசியல் பேச நான் விழையவில்லை...இருந்தாலும்...

தயைகூர்ந்து சகோதர,சகோதரிகளே இப்பதிவு என் போல் வலி கண்ட பலரின் உள்ளக்குமறல் தான் என நான் நினைக்கின்றேன்.

வலியுள்ள நாம் தான் மருத்தவம் காண வேண்டும்..
சொல்லுங்களேன் உங்கள் வழிகளை....

இனி தமிழ் மெல்லச்சாகுமோ ???

எனக்கு பூத்த நம்பிக்கைகள் இன்னும் எத்தனை பேருக்கோ...?
நமது அன்றாட அலுவல்கள் அன்றாடம் இருக்கத்தான் செய்யும்..

நமக்கு வேண்டியது தடயங்கள் அல்ல....அவை எப்படியும் இருக்கும்..
நாம் விரும்புவது கிளைத்து மீண்டும் முளைக்க வேண்டிய இனிதமிழ்.....

உங்கள் கருத்துகளைதான் கூறுங்களேன்....

நன்றி..!

3 comments:

ChennaiPaamaran said...

hello...I think you are living in different world, wake up and come to reality.

Earlier, communication is not this much simple. Now communication makes no distance. so we need common lagunage to communicate.

I won't disagree if you want to keep your lanugage alive, do it, that is good. But Other than some big shots in political and tamil tutor nobody gets their daily food if they stick with tamil. This is reallity.

Keep your tamil as your pet puppy in your home...no one will blame you because that is your wish and rights.

But if we did not go behind english...we will be in great trouble in future....Just imagine world with out english.....can you?

ChennaiPaamaran said...

So...Tamil ini mella chaagum....

TAMIZI said...

பாமரன் அய்யா!
நீங்க கூறிய கருத்து தான் பலர் மனதில் இருக்கும் என்பதனை நானும் அறிவேன்..

ஓரு குறிப்பிட்டார் நம்மை ஆண்ட போது அவர் வாழ்க என்றோம்..
இப்பொழுதும் இவர் வாழ்க என்போம்...

நாம் சூழ்நிலைக்கு ஏற்றார்ப்போல் மாற வேண்டியதிருந்தாலும்(survival fitness)...

சிலது விட்டுக்கொடுக்க முடியாதவை...
அதில் தலையாமை தான் தாய்மொழி என்பதெனது கருத்து..

இனி தமிழ் மெல்ல சாகாது...
இத்தனை காலம் வாழ்ந்தவள், இன்னும் வாழ வைப்பாள் நம்மை...

உங்களைப் போன்றுள்ளவரை எல்லாம் மீட்டு விட முடியும் என்ற நம்பிக்கையுடன்...
இனிதமிழ்...