"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, June 09, 2006

திரும்பி பார்க்கிறேன்!























நண்பர்களே..

மெதுவாய் திரும்பிப் பார்த்தால் எல்லோரும் சில மைல்கள் கடந்து தான் வந்திருப்போம்..

எப்போது தமிழ் என்ற ஆழமான உணர்வு உருவானது என்று மெதுவாக சிந்தித்த பொழுது ,
என்னைப் பொறுத்த வரைப் பெரும்பாலும் யாரையாவது அல்லது எல்லோரையும் தன் நோக்கி கவர்வதே நோக்கமாக உள்ள போது பெரும்பாலோனவர் மொழியைத்தான் எடுத்துக்கொள்கிறார்கள்..

(நானும் நம் தமிழை...)

இப்படியாக நானும் ஓர் டைரி வாங்கினேன்..

என்னனோவோ எழுதி...
அதை எல்லாம் கவிதை என எண்ணிக்கொண்டு , அறைக்கு வரும் ஒரு சில நண்பர்களையும் ஓட விட்டிருக்கிறேன்..என் படைப்புகளை படிக்கச்சொல்லி...

எனக்கு நினைவு தெரிந்து எனக்குப் பிடித்த என் முதல் கவிதை...

" ஊனமுற்றோர் சங்கத்தில் என்னை
உறுப்பினாராக்க முடியுமா ? கேட்டுச் சொல்லுங்கள் !
நான் என் இதயத்தை இழந்தவன் !! "

இதைப் படித்து பாரட்டிய சிலரால் நானும் எழுத துவங்கினேன்..

அப்படி எழுதும் பொழுது தான் அந்த சுகத்தினை அறிந்தேன்.

எப்போதும் காதில் யாரோ என்னவோ காதில் கூறிக்கொண்ட்ருப்பதைப் போன்ற ஒரு உணர்வு..



"அக்னிக்குஞ்சொன்று கண்டேன் "

"நல்லோதோர் வீணை செய்தே " என்று அதீத கற்பனைகள் வேறு...


எப்படியானாலும் என் எழுத்துக்கள் எனக்கு (எனக்காவது) மிகவும் பிடிக்கும் தானே..!

மேற்க்கண்டவாறு எழுதிக்(?) கொண்டிருந்தப் போது வழக்கம் போல் அல்லாது சமூகப்படைப்பாக சிலதும் எழுதத்தோன்றியது..

சில சமயம் அது எனக்கு கட்டுரை வடிவம் போலும் எனக்கு தோன்றியது..

அதில் ஒன்றை (சுமார் ஆறு பக்கங்கள்) நான் இணைப்பாய் தந்துள்ளேன்..
உள்ளபடி சொல்லுங்கள் என் மற்றவற்றையும் பதிகிறேன்..

தவறு எனில் இடித்துரைக்க வேண்டுகிறேன்..

நன்றி..

1 comment:

We The People said...

பாலா! கலக்குங்க! வித்தியாசமா சிந்திச்சு எழுதியிருக்கீங்க... Keep it up :) பழைய மேட்டரா இருந்தாலும் இன்று இன்றியமையா தேவை இந்த சிந்தனை... அது எப்படிங்க bloggers எல்லாரும் ஒரே கருத்து ஒத்த கூட்டமா இருக்கு! நானும் என் பங்குக்கு இந்திய சமுதாயத்துக்கு செய்ய வேண்டும் என்று தோணுது... எங்க, எப்படி "அ" போடரதுன்னு சிந்திச்சுதான் blog எழுத ஆரம்பிச்சேன்... பார்ப்போம் இந்த அக்னிக்குஞ்சுகள் புரட்சியில் ஐக்கியமாகுமா என்று!!! வாழ்த்துகளுடன்,

We The People