"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Saturday, May 27, 2006

வாழ்க ! வளமுடன் !

அனைவர்க்கும் வணக்கம் !

இனி தமிழ் மெல்லச் சாகுமென, மென்னி திருகிய, சில வரிகளில் கண்ணீர் துளி இட்ட சில கோடி மனசுகளில் எனதும் உண்டு.

இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
என் தமிழ் இதோ ! இந்த உலக வலைப்பின்னலில்...

என் இனிய தமிழ் நெஞ்சங்களே!
வலையோடு முடித்துக்கொள்ளாமல் ,சிறிது நம் வருங்காலத்தினருக்கும் கொண்டு செல்வோம்!

"இனி ஓரு விதி செய்வோம் ! "

தம் பிள்ளைகளைக் 'கான்வென்ட்' அனுப்பி விட்டு, தமிழ் வாழ்க ! என அறைக்கூவல் விடும் நம் அரசியல்(வி)வாதிகளைப் போல் தயவு செய்து நாமும் செய்யாது இருப்போம்.

நாமும் அவர்களைக் கான்வென்ட்டுக்கு அனுப்புவோம்...
உலக மொழி கற்க ...
வாழ வழி தேட..
வாழ்க்கை வாழ!

ஆனால்,
நாம் வாழ்ந்த வழி மறக்காமலிருக்க! உயிர் எழுத்துகளையாவது உயிரோடிருக்க செய்வொமா?

பெற்ற தாய் மறக்கும் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
தாய் மொழியையாவது சிறிது அவர்கள் சுவாசிக்க செய்வோம்..

ஆரம்பமே.. இப்படி புலம்பல்? என சிரிக்கின்ற நண்பர் குழாமிற்கு ....

நீண்ட நாள் கழித்து அம்மாவை பார்த்தால் ! கவிதை பாடத் தோன்றாது...??

கட்டி அழ மட்டுமே முடியும்...

என்னையும் கொஞ்சம் அழ விடுங்கள்..

கண்ணீர் வற்றி விடும் ! நாளை சந்திப்போம்!

வணக்கம்.....

5 comments:

அருள் குமார் said...

வாருங்கள் தமிழி. வலைப்பதிவு உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இந்த பதிவு புலம்பலெல்லாம் இல்லை. நல்ல உணர்வை இனிய தமிழில் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.

மென்மேலும் இங்கு சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
அருள்.

பாலச்சந்திரன் said...

என் தமிழுக்கு தடைகள் வந்தால் தான்
தடயங்கள் நிலைபெறும்!!
கலங்காதே நம் தமிழ் என்றுமே தலைச்சாய
விடமாட்டால் தமிழர்களை!!!!!!

என்றும நட்புடன்.

குமரன் (Kumaran) said...

வருக வருக தமிழி.

We The People said...

நன்பா,

இது புலம்பலில்லை .... இது தமிழ் வளர்க்க வந்த அறைக்கூவல்... உன் ஆதங்கம் எனக்கும் உண்டு...

நமக்கு இந்த அரசியல்வாதிகளும் வேண்டாம்... அவர்கள் கொள்கையும் வேண்டாம்...(தமிழ்வளர்க்கும் கொள்கை) ... சரியாக தான் உள்ளது உங்கள் கூற்று...

//*தம் பிள்ளைகளைக் 'கான்வென்ட்' அனுப்பி விட்டு, தமிழ் வாழ்க ! என அறைக்கூவல் விடும் நம் அரசியல்(வி)வாதிகளைப் போல் தயவு செய்து நாமும் செய்யாது இருப்போம்.*//


//நாமும் அவர்களைக் கான்வென்ட்டுக்கு அனுப்புவோம்...
உலக மொழி கற்க ...
வாழ வழி தேட..
வாழ்க்கை வாழ!//

அரசியல்வாதி தன் பிள்ளைக்கு முன்னுரிமை பெறுவதற்கு அவர்களை 'கான்வென்ட்' அனுப்பி விட்டு... தமிழ் மட்டும் படி என்று நமக்கு அறிவுரை கூறுவான்...

தமிழும் கற்பிப்போம்...ஆங்கிலமும் படிக்க செய்வோம்.. ஆங்கில புலமையும் அவசியம் தேவை இன்றைய மென்பொறி யுகதில்...

தமிழ் வளர்க்க உன் கருத்தை ஆமோதிக்கிறேன்...

வளரட்டும் உன் தமிழ் வலைச்சேவை..

நட்புடன்,

நா.ஜெயசங்கர்

மா.கலை அரசன் said...

உங்கள் வரவு நல்வரவாகுக.