"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, August 14, 2006

உறவுகள்

ரதியாய் மனம் தொட விழைந்து
மணம் இழந்த மலர் நான்..


என் இதழ்கள் நிறம் மாறும் முன்..
உன் இதழ் விரிய இதயம் திற!

மின்மினிகள் உனகெதற்கு..
மகரந்த மலராய் நானிருக்க!
உன் வெண்குதிரையில்லாவிட்டாலும்
மனக்குதிரையிலாவது இடம் தா!
பொன்வண்டாய் நீ முகர இவ்வல்லி மறுக்குமோ!
மீனுக்கும் நீர் பகையோ??

தணலாய் இருந்த என்னை தழலாய் மாற
நாம் என்ன விலகவா பழகுவோம்!

இந்த இலவு உறவுக்காகவது விரைந்து வா!

முதிர்கன்னியென்கின்றனர் என் எல்லா இதழ்களும்
முதிர்ந்து உதிரும் முன் ??

ஆமாம்,யாரடா நீ மன்மதா !

5 comments:

Anu said...

mmm Gud one.

We The People said...

ennamoo ponga yellarum ippadi pottikku kelambitta naanga ellam yeppadithaan pottila ஓட்டு வாங்கரது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Jazeela said...

//ரதியாய் மனம் தொட விழைந்து
மணம் இழந்த மலர் நான்..// மலரா இருந்திடாதீங்க அப்புறம் வண்டு வரும். வண்டு வந்தா பரவாயில்ல அது மலர் விட்டு மலர் தாவும்.

RBGR said...

பின்னூட்டம் இட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி.


ஜெஸிலா said...
// ரதியாய் மனம் தொட விழைந்து
மணம் இழந்த மலர் நான்..// மலரா இருந்திடாதீங்க அப்புறம் வண்டு வரும். வண்டு வந்தா பரவாயில்ல அது மலர் விட்டு மலர் தாவும்.
*****
ஜெஸிலா, இந்த உணர்வு ஒரு முதிர் கன்னியின் புலம்பல்.
இந்த உலகம் எவ்வளவு விமர்சனம் செய்திருந்தால்..அவள் மலர் தாவும் வண்டாயாவது மனம் மாறு என்றும் அவனயே மன்னவா என்றும் விளிப்பாள் என்பது என் எண்ணம்.
எனினும் கருத்துக்கு நன்றி.

கவிதா | Kavitha said...

தமிழி-நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க.. கவிதை சூப்பர்..