செந்தமிழ் நாடெனும் போதினிலே !!
மேலும் இத்துடன் ஒர் இலவச இணைப்பு பாரதியின் ஆத்திச்சூடி! படித்தீர்களா??
(உலக பதிவு வரலாற்றிலேயே முதன் முறையாக .... என்றெல்லாம் சொல்லமாட்டேன்...
எல்லாம் நம் தமிழ் பத்திரிக்கைகளால் வந்த பழக்கம்... )
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்-பாரதி.
ஒவ்வோர் மொழிக்கும் தனிச்சிறப்பென்று ஓன்று உண்டு,,,
நானும் இது காலம் அப்படித்தான் தமிழையும் நினைத்து வந்தேன்,,,
ஆனால்,இப்பதிவில் புதிதாய் என்ன சொல்லலாம் என சிந்தித்து தேடும் போது தான் நாம் தொலைத்தவை எத்தனை எவ்வளவு எனப்புரிந்தது.
நினைத்தாலே வலிக்கிறது.
இக்கொடிய காலம் என்ற காலன் எப்படியெல்லாம் நம் தமிழை வாட்டி இருக்கிறான்...!
ஃ
இது போன்ற ஒரு எழுத்தை எந்த மொழியிலாவது காண முடியுமா?(இதன் சிறப்பைப் பின்பு
பார்ப்போம்)
தமிழ் வழிக்கல்வி கற்ற என் போன்றவர்களே தடுமாறும் அளவுக்கல்லவா நாம் தமிழை மறந்து விட்டோம்..
எனக்கு என் பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகிறது,
அப்பொதெல்லாம் எங்கள் பெரும்பாலான பொழுதுப்போக்கே.... எங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்து நகைப்பது தாம்..
எதுவுமே நடத்தாது எல்லா மான்யங்களையும் பெறும் அறிவியல் ஆசிரியரை விட எந்த வகையில் அவர் குறைந்து போனார்...
அனேகமாக எல்லோருக்கும் நான் சொல்ல வரும் கருத்து மற்றும் இதன் உண்மை புரியுமென நினைக்கிறேன்,
இது போன்ற தமிழ் விளக்கப்பதிவுகள் எங்கிருந்தாலும் எனக்குச் சொல்லுங்கள் ..இதில் மீண்டும் பதிவோம்..
நான் புதிதாய் யாப்பிலக்கணம் வரைய விரும்பவில்லை..
தமிழ் அரிசுவடி அரித்து போகும் முன் அதனை அடுத்த தலைமுறைக்கு சிறிதேனும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
உதவுங்கள் !! நம் தாய் முகம் வாடலமா??
3 comments:
தமிழை இலவசமாய் கொடுத்து தமிழ் வளர்க்கும் உம் சேவைக்கு நன்றி!
இப்படிக்கு - தமிழன்.
நானும் உங்களுடன் கை கோர்கிறேன்.
நன்றி.லொடுக்கு பாண்டி.
Post a Comment