"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, May 29, 2006

இது ஒரு தமிழ் காலம்...




நம் தமிழ் தான் எத்தனை தடைகளைத் தாண்டி இன்றும் வாழ்ந்துக் கோலாச்சிக் கொண்டிருக்கின்றது..

எத்தனை மரபுகள்,எத்தனை ஆட்சி மாற்றங்கள்,எத்தனை மனிதர்கள்,எத்தனை விருப்புகள்,எத்தனை வெறுப்புகள்..........


கல் தோன்றி..மண் தோன்றா காலத்தே மூத்த குடி என்பர்....
அதன் வரலாற்றினை ஆய்வு செய்யும் மற்றும் செய்தவர் தாம் அறிவர் அதன் உண்மை பற்றி...

இருந்தும்,ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மொழி என்பதிற்க்கு மிக நல்லச் சான்றுகள் உள்ளது என்பது என் திண்ணம்.

இத்தனைக் காலம் ஒரு மொழி அதன் வடிவம் இழக்காமல் அப்படியே தோன்றியவாறே இருக்க இயலுமா !

யாப்பிலக்கணம் என்றால் என்ன ?

நம் தலைமுறையிலேயே மறந்து விட்டதே!

ஒவ்வொரு எழுத்துக்கும் இவ்வளவு மாத்திரை என கணக்கிட்டு வளர்ந்த தமிழையா நாம் இன்று பேசுகிறோம் ??

ஓர் மொழி எண்ணும்,எழுத்தும் ஒருங்கே கொண்டது எனில் அதன் வளர்ச்சிறப்பு எத்தகைய மேன்மை வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.

யே....யப்ப்ப்பா??? என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது.

ஓர் முறை எழுத்தாளர் 'சுஜாதா' அவர்கள் எழுதிப் படித்தாதாக ஒரு நினைவு...

" தமிழ் கணிணிக்கும் வந்தாச்சு....!
தமிழாக்கம் என்று ஓரேடியாக எல்லாவற்றையும் நேரடி மொழிப்பெயர்ச்சி செய்துக்கொண்டிராமல்..சில ஆங்கில மற்றும் சில மொழிகளின் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தினால் என்ன? "
( உ.ம்.) காபி - தமிழ் உருவில் குளம்பி..என்று கூறிக் குழப்பாது, எங்கள் கிழவி போல் காப்பித்தண்ணி என்று பயன்படுத்தினாலென்ன!!

புது வார்த்தை ஒன்று நம் அகராதியில் சேர்க்கப்படுவது...எனக்கும் மகிழ்ச்சி தான்...

ஆனால்,காலம் கடந்த சில சிந்தனைகளால் சில சமயம் நம் இழப்பின் அளவு அதிகமாக அல்லவா போய் விடுகிறது.


எனக்கும் இந்தக்கருத்தில் உடன்பாடு இருந்தாலும் மனம் கேட்கவில்லை..

ஆனாலும்,சிந்தித்துப் பார்த்தால்...மொழி என்பது சத்தங்களினாலான ஓர் தொடர்புக்கொளல் தானே..

அதை எப்படி மாற்றினால் என்ன...!

தமிழ் சங்கம் படைத்த மதுரைத் தமிழ் எல்லாருக்கும் புரிகிறதா? இல்லையா ?

இன்னும் சொன்னால்,அன்று மேல் நாட்டவரின் ஆதிக்கத்தை விட்டிடுவோம்!!...நமது சகோதரர்களினால் உருமாறிக்கிடக்கும் நம் தமிழ்???.....நினைத்தாலே நெஞ்சம் பதைக்கின்றது...

என்னைக் கேட்டால்..??
இங்கு மத மாற்றம்.,ஆட்சி மாற்றம் போன்றவை எல்லாம் தமிழைப் பாதிக்கவில்லை எனச் சொல்ல இயலாது.
ஆனால்,தமிழை தமிழன் எவ்வளவு விரும்பினான்! என்பதனைப் பொறுத்தே....அதன் வளர்ச்சி மற்றும் மாறங்கள் இருந்திருக்கிறன என்றால் அது மிகையாகாது...

எடுத்துக்காட்டாக...இத்துடன் இணைத்த நகல்களைப் பாருங்களேன்..
1934-ல் வெளிவந்த இப்புத்தகத்தில்...ஆங்கில மற்றும் சமஸ்கிரத தாக்கங்கள் எவ்வாருள்ளன என்பது விளங்கும்.

ஆனால்,காலக்கண்ணாடியால் வயதானவளாக தோற்றம் அளித்தாலும் நம் தாய் என்றும் நமக்கு அழகு தான் !

அரசியல் பேச நான் விழையவில்லை...இருந்தாலும்...

தயைகூர்ந்து சகோதர,சகோதரிகளே இப்பதிவு என் போல் வலி கண்ட பலரின் உள்ளக்குமறல் தான் என நான் நினைக்கின்றேன்.

வலியுள்ள நாம் தான் மருத்தவம் காண வேண்டும்..
சொல்லுங்களேன் உங்கள் வழிகளை....

இனி தமிழ் மெல்லச்சாகுமோ ???

எனக்கு பூத்த நம்பிக்கைகள் இன்னும் எத்தனை பேருக்கோ...?
நமது அன்றாட அலுவல்கள் அன்றாடம் இருக்கத்தான் செய்யும்..

நமக்கு வேண்டியது தடயங்கள் அல்ல....அவை எப்படியும் இருக்கும்..
நாம் விரும்புவது கிளைத்து மீண்டும் முளைக்க வேண்டிய இனிதமிழ்.....

உங்கள் கருத்துகளைதான் கூறுங்களேன்....

நன்றி..!

Sunday, May 28, 2006

பாரதி -II


.

எனது முந்தைய பதிவின் தொடர்வாய் இதனையும் கருதவும்..
எல்லாரும் அறிந்த,படித்த,புத்தகமாய் வைத்திருப்பதை ஏன் பதிகின்றேன் என்று யாரும் வருந்தாதிருக்க வேண்டுகிறேன்.

மீண்டும் திரும்பிப் பார்ப்பது என்ன தவறா!
எனக்கு திரும்பிப் பார்ப்பது என்பது மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று.

என்ன அதற்கான் நேரம் தான் நமக்கு வாய்ப்பது இல்லை..

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்..
இனி மேல் எனது படைப்புகளில் சில விரைவில் இங்கு வர இருக்கிறது..

யார் பாரதி!?



பாரதி! யார்? என யாரும் கேட்டும் விடுவார்களோ! !
கேட்டால் அவர(ன)து அரியவற்றுள் ஒன்றான இவ்வரிகளை காட்டுங்கள்....

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார். "

Saturday, May 27, 2006

வாழ்க ! வளமுடன் !

அனைவர்க்கும் வணக்கம் !

இனி தமிழ் மெல்லச் சாகுமென, மென்னி திருகிய, சில வரிகளில் கண்ணீர் துளி இட்ட சில கோடி மனசுகளில் எனதும் உண்டு.

இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
என் தமிழ் இதோ ! இந்த உலக வலைப்பின்னலில்...

என் இனிய தமிழ் நெஞ்சங்களே!
வலையோடு முடித்துக்கொள்ளாமல் ,சிறிது நம் வருங்காலத்தினருக்கும் கொண்டு செல்வோம்!

"இனி ஓரு விதி செய்வோம் ! "

தம் பிள்ளைகளைக் 'கான்வென்ட்' அனுப்பி விட்டு, தமிழ் வாழ்க ! என அறைக்கூவல் விடும் நம் அரசியல்(வி)வாதிகளைப் போல் தயவு செய்து நாமும் செய்யாது இருப்போம்.

நாமும் அவர்களைக் கான்வென்ட்டுக்கு அனுப்புவோம்...
உலக மொழி கற்க ...
வாழ வழி தேட..
வாழ்க்கை வாழ!

ஆனால்,
நாம் வாழ்ந்த வழி மறக்காமலிருக்க! உயிர் எழுத்துகளையாவது உயிரோடிருக்க செய்வொமா?

பெற்ற தாய் மறக்கும் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
தாய் மொழியையாவது சிறிது அவர்கள் சுவாசிக்க செய்வோம்..

ஆரம்பமே.. இப்படி புலம்பல்? என சிரிக்கின்ற நண்பர் குழாமிற்கு ....

நீண்ட நாள் கழித்து அம்மாவை பார்த்தால் ! கவிதை பாடத் தோன்றாது...??

கட்டி அழ மட்டுமே முடியும்...

என்னையும் கொஞ்சம் அழ விடுங்கள்..

கண்ணீர் வற்றி விடும் ! நாளை சந்திப்போம்!

வணக்கம்.....