இது மொக்கையல்ல!
"காதலி,சாதிகள் சாம்பலாக
என்னைக் காதலி!"
"கடைவிழி கடைவீதியில் நிறுத்தியது!?"
"அமுத விஷங்கள் உருவானது ஒரிடமே!
நம்பவிலலை நான்! உன்னை பிரியும்வரை!!"
"காதலில் மட்டும் தான், மீன்கள் வலைவீச
புலிகள் மாட்டிக்கொள்கின்றன!?"
"ஆண் பெண்ணாவதும்,
பெண் ஆணாவதும் கம்னியூசமில்லை!
அது காதலிசம்!!"
"தேன் உறிஞ்ச வந்த வண்டை மலர் காதலனென்றாய்!
ஊர் கண்டு மிரண்ட என் கண்களை மானென்றாய்!
நேற்று வாங்கிய பொய்முடியை மயிலிறகென்றாய்!
பாவாடை தடுக்க நடந்த என்னை அன்னமென்றாய்!
மனம் தாவி வேறு மணம்புரிந்தால் என்னை குரங்கென்பாயோ!"
மேற்க்கண்ட எனது கவிதை முயற்சிக்கு காரணமாயிருந்த "விடை தேடும் வினா? " குழுமத்தின் " இப்பதிவும் எனது சிறு ஆர்வமும் காரணம்.
இதன் தெரிந்தெடுத்தலுக்கான கடைசித் தேதி "இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10." என்று அப்பதிவில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆக சமீபத்தில் தான் கடைசித்தேதி கடந்து சென்றதால் காத்திருக்கிறோம் முடிவுகளுக்கு....!!!!
போட்டிக்கான பரிசில் புரவலர்கள் :
"Prize Sponsors
செந்தழல் ரவி
சிறில் அலெக்ஸ்
மங்கை
பாஸ்டன் பாலா
பொன்ஸ்"
போட்டியில் கலந்து கொண்டவர்கள் :
யெஸ்.பாலபாரதி
சேவியர்
தேவ்
சேதுக்கரசி
சென்ஷி
வசந்த்
ப்ரசன்னா (குறைகுடம்)
Hayah
அருட்பெருங்கோ
முத்துலெட்சுமி
வள்ளி
இத்தனை பேர் சார்பாகத்தான் கேட்கின்றேன். இது சரியா! இத்தாமதம் அலட்சியத்தின் காரணமாகவா??
இது போன்ற பரிசுப் போட்டிகளை அறிவிக்கும் முன் இவை ஆரோய்கமான போட்டியா என்று ஆராய்ந்த அக்குழும நண்பர்கள்
தாமதத்தினை எப்படி அனுமதித்தார்கள்.
எனது இப்பதிவை ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானமாகத்தான் கொள்கின்றேன்.
யாராவது பதில் கூறுவார்களா! இல்லை! வழக்கம் போலத்தானா??
கண்டிப்பாக இது மொக்கைப் பதிவல்ல!!??