"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !
Monday, July 09, 2007
Thursday, July 05, 2007
அறிந்ததும் ! அறியாதவையும்!?
கம்னீயூசம்-மார்க்கிசம்
அறிந்தவை:
ஏழை மற்றும் தொழிலாள வர்க்க மக்களுக்காக போராடும் ஒரு அமைப்பின் சாரத்தில் வந்த அமைப்புகள். நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் நடத்தி எப்பாடுபட்டாவது மக்கள் நலன் பேணுவது.
அறியாதவை:
ஆட்சி என்று வரும் போது விவசாயிகளை ஏழைகளின் வயிற்றில் வாழ்வாதாரத்தில் அடிப்பது. பேருக்கு ஒரு போராட்டம், ஒரு அறிக்கை விட்டால் மக்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற அதிமேதாவித்தனத்துடன் 'நல்லவன்; மாதிரியே நடிப்பது.
திராவிடக் கட்சிகள்:
அறிந்தவை:
தமிழை வாழ வைக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு அதிலிருந்து பிரிந்த சில பிரிவுகள் என இன்று அடையாளம் காணப்பட்டாலும், ஆரம்பத்தில் சமுதாய எழுச்சி மிகு போராட்டங்களும், மக்களுக்காக உழைத்த அருந்தலைவர்களையும் கொண்ட , தன் வாரிசு என்பது தனது கொள்கைகளினை கொண்டு செலுத்துபவர் மட்டும் தான் என்று நினைத்து அதனை நடைமுறைப்படுத்தியவர் தம் அமைப்புகள்.
அறியாதவை:
தன் குடும்பம்,தோழியின் குடும்பம், மகன் , மகள், மருமகன், பேரன், மனைவி, துணைவி, உடன்பிறவா தோழி,வளர்ப்பு மகன்,சம்பந்தி என்றெல்லாம் உறவுகளினை அறிமுகப்படுத்தி மன்னர்முறையினை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கும் பாங்கு.
போலீஸ்காரர்:
(காவல்காரர் என்ற உண்மையான பதத்தினை மற்ந்து போய் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத ஒரு அமைப்பு )
அறிந்தவை:
மக்களைப் பாதுகாக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட காவல்காரர்களின் அமைப்பு.
அறியாதவை:
ஆரம்பநிலை காவலர் முதல் முதன்மை நிலை அதிகாரி வரை அனைவரும் கையூட்டு வாங்க, கொஞ்சமும் கூச்சப்பட மறக்கச் செய்ய காரணம் அவர்களா! இல்லை அரசியல்வாதிகளா! இல்லை நாமா!
இப்படி ஏராளமாய் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த 'அறிந்தும் அறியாதவை களை' பின்னூட்டமிடுவீர்களா!
நல்லவை பிரசுரிக்கப்படும்.
Posted by RBGR at 12:37:00 PM 1 comments