உறவுகள்
ரதியாய் மனம் தொட விழைந்து
மணம் இழந்த மலர் நான்..
என் இதழ்கள் நிறம் மாறும் முன்..
உன் இதழ் விரிய இதயம் திற!
மின்மினிகள் உனகெதற்கு..
மகரந்த மலராய் நானிருக்க!
உன் வெண்குதிரையில்லாவிட்டாலும்
மனக்குதிரையிலாவது இடம் தா!
பொன்வண்டாய் நீ முகர இவ்வல்லி மறுக்குமோ!
மீனுக்கும் நீர் பகையோ??
தணலாய் இருந்த என்னை தழலாய் மாற
நாம் என்ன விலகவா பழகுவோம்!
இந்த இலவு உறவுக்காகவது விரைந்து வா!
முதிர்கன்னியென்கின்றனர் என் எல்லா இதழ்களும்
முதிர்ந்து உதிரும் முன் ??
ஆமாம்,யாரடா நீ மன்மதா !