"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, September 28, 2006

தேன்கூடு - தமிழோவியம் போட்டியில்-விட்டுபோனவை !

நண்பர்களுக்கு ,



தேன்கூடு - தமிழோவியம் மாதாந்திரப் போடடியில் வெற்றிப்பெற்ற

ஆசாத் - முதல் பரிசு

ராசுக்குட்டி - இரண்டாம் பரிசு

யோசிப்பவர் - முன்றாம் பரிசு



ஆகியோருக்கு வாழ்த்துகள்.



நானும் ஒரு பதிவை போட்டிக்காக இட முயன்று தொழில்நுட்பப் பிரச்சனைகளால் களத்தில் குதிக்க இயலாதுப்போயிற்று.
அதைப்பறிய என் முந்தைய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்!





ஒவ்வொருப் படைப்பாளியும் பரிசுக்காக ஏதும் முயல்வதில்லை.எனது படைப்பைப் பற்றிய உங்கள் பின்னூட்டம் என்னை கொஞ்சம் சரிப்பார்த்துக்கொள்ள உதவும் கண்ணாடியாக இருந்தால் உங்கள் நண்பன் மகிழ்வான்.



கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? "தேன்கூடு-போட்டி" 

எனது அந்தக் கதைக்கான இணைப்புக்கு இங்கே சொடுக்கவும் !!



என்றென்றும் அன்புடன்,

தமிழி.

நன்றி.

 

Tuesday, September 26, 2006

ஹி ஹி-ன்னு ஒரு ஜோக் !








 

Monday, September 25, 2006

ஒரு சிறிய அறிவுப்போட்டி.

தடாலடிப்பரிசு ஏதும் தரும் திட்டமில்லை,இதில் இந்தியா  எந்த வகையைச்சார்ந்தது என்று கண்டுபிடிப்பவர்க்கு.
கண்டுப்பிடித்தால் உங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்ளுங்கள் .அனானிகளின் கருத்தையும் அறிய விரும்புகிறோம்.நன்றி.




கீழ்க்கண்டவை வேவ்வேறு வகையான அரசுகளின் அடிப்படைக்கொள்கைகள்.(மண்டபத்தில் யாரவது சொன்னாலும் பராவாயில்லை!! எங்ககிட்ட சொல்லுங்க!! ஏன்னா.. இதுவே யாரோ சொன்னது தானே ?? )

நிலப்பிரபுத்துவம் :
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார்.


ராணுவ பாஸிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது.


கிளப்டோகிராடிக் பாஸிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் சுட்டுக் கொல்கிறது


நைஜீரியா ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. உன்னைச் சுட்டுக் கொல்கிறது. பசுக்களை அரசாங்கம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்புகிறது.


சோஷலிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.


யுடோபியன் கம்யூனிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக்கொள்ள உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் உனக்கு உதவுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாலை பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.


லெனினிஸ கம்யூனிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாப்பாலையும் எடுத்துக்கொள்கிறது.


மாவோயிஸம், ஸ்டாலினிஸ கம்யூனிஸம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவைகளை எடுத்துக்கொள்கிறது. பிறகு பசுக்கள் இருந்ததையே மறுக்கிறது. அரசாங்கம் பாலை தடை செய்கிறது.






சிங்கப்பூர் ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது.


அமெரிக்க ஜனநாயகம்:
அரசியல்வாதிகள், அவர்களை தேர்ந்தெடுத்தால் உனக்கு இரண்டு பசுக்கள் தருவதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும். பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள், பசுக்களின் சார்பாக, வழக்கு தொடுக்கும். இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்து விடுவாய்.


இங்கிலாந்து ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு மூளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய். பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை.


ஐரோப்பிய ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு என்ன கொடுக்கலாம், எப்போது பால் கறக்கலாம் என்று நிர்ணயம் செய்கிறது. அப்புறம் நீ அவைகளை பால் கறக்காமல் இருக்க உனக்குப் பணம் கொடுக்கிறது. பிறகு இரண்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றை சுட்டுக்கொல்கிறது, ஒன்றை பால் கறக்கிறது. பாலை கடலில் கொட்டுகிறது. பிறகு ஏன் பசுக்கள் காணாமல் போயின என்று இரண்டு படிவங்கள் முழுமையாக எழுதி அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.


லெய்ஸஸ் ஃபேர் முதலாளித்துவம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ ஒன்றை விற்று காளை மாடு வாங்குகிறாய்


நவீன உலக அமைப்பு முதலாளித்துவம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் உன்னிடம் இருந்து வாங்குகிறது. பிறகு அதை இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பதனப்படுத்துகிறது. நீ தயிர் வாங்க ஏராளமாக காசு கொடுக்க வேண்டும் ஏனெனில், பால் தொழிற்சாலை கூட்டமைப்பும், பால் தொழிலாளர்கள் யூனியனும் இறக்குமதி வரியை அதிகப்படுத்த போராடியிருப்பார்கள்.


ஹாங்காங் முதலாளித்துவம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்த மூன்று பசுக்களையும் உனது நிறுவனத்துக்கு விற்கிறாய். அதற்கு உன் மச்சான் ஆரம்பித்த வங்கியை கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, கடன்/பங்குகள் மாற்றி உன் நான்கு பசுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறாய். அத்தோடு கூட ஐந்து பசுக்களையும் வைத்துக்கொள்ள வரி விலக்கு கிடைக்கும். உன் ஆறு பசுக்களையும் பால்கறக்கும் உரிமைகளை ஒரு பனாமா கம்பெனி வழியாக கேய்மன் தீவுகளில் இருக்கும் ஒரு பேப்பர் கம்பெனிக்கு ரகசியமாக விற்று நீ பெரும்பான்மை பங்குகளுக்கு சொந்தக்காரனாக ஆகிறாய். ஏழு பசுக்களுக்குமான மொத்த உரிமைகளை மீண்டும் பழையக்கம்பெனிக்கே விற்கப்படுகிறது. கம்பெனியின் வருடாந்தர அறிக்கை கம்பெனிக்கு எட்டுபசுக்கள் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும் இன்னொரு பசு வைத்துக்கொள்ள ஆப்ஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இதே நேரத்தில் நீ உன்னிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் கெட்ட ஃபெங் சுயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்) காரணமாக கொன்று விடுகிறாய்.


சவூதி அரேபியா:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி உனக்குக் கவலையில்லை. ஏனெனில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு பெண்களை உனது பெட்ரோல் பணம் கொடுத்து வாங்கியாய் விட்டது.



பிரதிநிதித்துவ ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்துவீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான்.


சுத்தமான ஜனநாயகம்:
உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள்.

********
 

Friday, September 22, 2006

ஏன் என்று யாருக்காவது தெரியுமா??


சென்ற முறை போல இம்முறையும் தேன்கூடு - தமிழோவியம் மாதாந்திரப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பி,ஆனால் சரியான் நேரம் அமையாததால் மறந்து விட்டேன்.சரியாக 20/09/2006அன்று மாலை 6 மணியளவில் ஒரு போன்சாய் போதி மரத்தடியில்(அருகில்) திடீரென் ஒரு ஞானதோயம்.இன்னும் 6 மணி நேரம் இருக்கிறது போட்டிக்கான இறுதி நேரம் முடிய என்று.

http://thenkoodu.com/contest.php
3) போட்டிக்கான ஆக்கங்கள் அந்தந்த மாதத்தின் 20ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு பின்னர் வரும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. 2006 செப்டம்பர் மாதப் போட்டிக்கான முடிவு தேதி: செப்டம்பர் 20 நள்ளிரவு 12 மணி இந்திய நேரம் (இன்னும் -1 நாட்கள் மட்டுமே!).
7) ஆக்கங்களை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு http://www.thenkoodu.com/contestants.php - என்னும் முகவரியின் மூலமாக குறிப்பிட்ட மாதத்தின் 20ம் தேதி நள்ளிரவு 12 மணி IST(இந்திய நேரம்) க்குள் அளிக்கப்பட வேண்டும்.

உடனே,கற்பனைப் பஞ்சகல்யாணி ஓடத்துவங்க மனத்தட்டச்சு தட் தட் என தட்ட ..சட்டென தோன்றிய ஒரு சிறுகதையைப் பதிந்து ,வழக்கம் போல் மின்னஞசல் அனுப்பி உடன் கிடைத்த பதில்மின்னஞ்சலை பார்த்து மகிழந்தேன்.(என்னமா automate பண்ணியிருக்காங்கன்னு ஒரு கமெண்ட் வேறு??)(The mailfrom team@thenkoodu.com id)





போட்டித்தொகுப்பைப்பார்த்தால் எனது பதிவைக்காணவில்லை.



அதிர்ந்துபோய் உடனே தகவலை மேற்க்கண்ட முகவரிகளுக்கு அனுப்பி...........



அனுப்பி இரண்டு நாளாச்சு.இன்னும் ஒரு பதிலும் இல்லை.



உனக்கேன் இந்த அக்கறை தமிழ் பிளாக் உலகில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று யாரோ கேட்கிறார்கள்.



நானே நேரிடியாகப் பாதிக்கப்பட்டதால் மட்டுமல்ல..



இது போன்ற கவனக்குறைவுகள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியன்.

ஏன்னெனில், இங்கு வந்து குழுமும் எந்த பதிவாளரும் வேலையின்றியில்லை இன்னும் சொல்லப்போனால் அலுவலக வேலை நேரத்தில்தான் இவ்வாறான வேலைகளை சற்றே யோசித்துப்பாருங்கள் எவ்வளவு வேதனை வரும் என்று.


மட்டறுத்தல்...அது இதுவென ஆயிரம் கண்டிப்புக்கள் இருந்தால் மட்டும் போதாது.


உதவிப்பக்கம் போனால் தலை சுற்றுகிறது.http://www.thenkoodu.com/blog/

இது போன்ற குறைகளை உடனே களையவில்லை எனில் நீங்கள் இதனை துவங்கிய நல்லஎண்ணம் போய் தேன்கூட்டிற்க்கு இதில் வியாபார நோக்கம் மட்டுமே என்பது தெளிவாகும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவினை மட்டறுத்து விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.



நன்றி.

இப்படிக்கு

தமிழி.

 

விட்டில்கள்.



நான் அவனது கட்டுப்பாட்டிலிருக்க விரும்புகிறான்-
விரும்பியபடி என் நிர்வாணம் ரசிக்க.

என்னையே பார்த்துக்கொண்டிருப்பான்-
தொலைக்காட்சியில் எனக்கு பிடித்த நடிகன்.

எங்க வீட்டில் முருகன் படம் கூட காணவில்லை-
நல்ல வேளை  பிள்ளையாருக்கு யானைத்தலை.

வரிக்குதிரை என்பான் எனை-
என் இடுப்பில் பிரசவ அடையாளம்.



சாலமன் பாப்பயாவோடு சேர்ந்து சிரிப்பான் -
மனைவியால் இன்பமா! துன்பமா! தலைப்பு.

பழைய புத்தகக்காரனுடன் வந்தான் நேற்று-
பாரதி ஆண் என்பது நேற்று தான் தெரியுமாம்.

நானே இரண்டாம் சாமத்தில் எழுப்பவேண்டும்-
எனை அடித்த மனச்சோர்வு நீக்க.

பூக்களோடு பேசப்பிடிக்கும் எனக்கு-
நல்ல வேளை மனிதம் போல் பூவில் ஆணில்லை.

என் இதய கதவினில் பூட்டில்லை -
ஆனால் சாவி அவனிடம்.


அதல்லாம் இருக்கட்டுங்க அப்பறமா பேசலாம்-
அவனுக்கு நான் சப்பாத்தி சுடவேண்டும்.